கோகுல்ராஜ் படுகொலை: காவல்துறை இயக்குனரிடம் கழகம் மனு

தலித் இளைஞர் கோகுல்ராஜ், ஜாதி ஆணவக்காரர்களால் படுகொலை செய்யப்பட்டதைக் கொலை வழக்காக மாற்ற வலியுறுத்தி, 1.7.2015 பகல் 1 மணியளவில் கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், சட்டம் ஒழுங்குப் பிரிவு துணை இயக்குனரிடம் மனு அளித்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆதிக்க ஜாதியாக இருக்கும் சமூகப் பிரிவைச் சார்ந்தவர்களை காவல்துறை அதிகாரிகளாக நியமிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், காவல்துறை கல்வித் துறையுடன் இணைந்து ஜாதி எதிர்ப்புப் பரப்புரை நடத்துவதை வரவேற்றும், அதே நேரத்தில் கழகம் நடத்தும் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை இயக்கத்துக்கு காவல்துறை தடை விதிப்பதை நிறுத்தக் கோரியும் மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது. கோரிக்கைகளில் நியாயம் இருப்பதாகக் கூறிய அதிகாரி, சமூக நீதி, ஜாதி வெறி தலைதூக்கும் ஆபத்துகளை சுட்டிக்காட்டினார். மாவட்ட செயலாளர் உமாபதி, தபசி குமரன், வழக்கறிஞர் அருண், அன்பு தனசேகரன் ஆகியோர் இயக்குனரை சந்திக்க உடன் வந்தனர்.

பெரியார் முழக்கம் 09072015 இதழ்

You may also like...

Leave a Reply