சென்னை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

ஆகஸ்டு 31ஆம் தேதி திங்கள் கிழமை மாலை 6 மணியளவில் இராயப்பேட்டை ‘முருகேசன்’ மண்டபத்தில் நடந்தது. குகானந்தன், கடவுள்-ஆத்மா மறுப்புகளைக் கூறினார்.
உமாபதி வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இந்துத்துவவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட கருநாடக பல்கலைக் கழக முன்னாள்துணைவேந்தரும், மூடநம்பிக்கை எதிர்ப்பாளருமான கல்புர்கி படத்தை கழகத்தலைவர் கொளத்தூர்  மணி திறந்து வைத்தார். இரண்டு நிமிடம் மவுனம் காத்து, தோழர்கள் வீர வணக்கம் செலுத்தினர்.
கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் அறிமுக உரையைத்தொடர்ந்து, கழக வழக்கறிஞர் துரை. அருண், தலைமைக் கழக செயலாளர் தபசி.குமரன், வேழவேந்தன், சுகுமார், ஏசு, மாணவர் கழகத் தோழர் அருண், அன்பு.தனசேகரன் ஆகியோர் கருத்துகளைத் தெரிவித்தனர்.
நிறைவாக, கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையாற்றி, கழகப் பொறுப்பாளர்களை அறிவித்தார்.
நிகழ்வில் முடிவெய்திய கழக செயல்வீரர் ஆட்டோ சரவணன் குடும்பத்துக்கு அவரது தாயாரிடம் கழக சார்பில் தோழர்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதி ரூ.62 ஆயிரத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி வழங்கினார்.

பெரியார் முழக்கம் 03092015 இதழ்

IMG_7540 IMG_7546 IMG_7552 IMG_7556 IMG_7560 IMG_7572

You may also like...

Leave a Reply