நாமக்கலில் பெரியார் பிறந்த நாள் விழா

dv4 dv5நாமக்கல் –
பெரியார் பிறந்த நாள் விழா !

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 137 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்செங்கோடு பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாவட்ட செயலாளர் மு.சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் நகரின் இரு பகுதிகளில் கழக கொடியேற்றப்பட்டது,

இந்நிகழ்வில் மாவட்ட அமைப்பாளர் வைரவேல்,மாவட்ட பொருளாளர் முத்துப்பாண்டி,திருச்செங்கோடு நகர தலைவர் சோமசுந்தரம்,நகர செயலாளர் நித்தியானந்தம்,ஒன்றிய அமைப்பாளர் சதிசு,பள்ளிபாளையம் நகர தலைவர் பிரகாசு,மல்லை பெரியண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

You may also like...

Leave a Reply