பகுத்தறிவாளர் கல்புர்கிக்கு வீர வணக்கம். கோழைகளின் வெறிச் செயலுக்கு கண்டனம்.

சீரிய பகுத்தறிவாளரும், முற்போக்கு எழுத்தாளர், மத மூட நம்பிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து செயலாற்றி வந்த பேராசிரியர், எழுத்தாளர் முன்னாள் துணை வேந்தருமான கல்புர்கி, பார்ப்பன பாசிச இந்து மதவெறி கும்பல்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருப்பதை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.
கல்புர்கி 30.08.2015 ஞாயிறு காலை தன் வீட்டில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். அவர் மூடநம்பிக்கைக்கு எதிராக தொடர்ந்து பேசியும், எழுதியும் வந்தார். மூட நம்பிக்கைக்கு எதிராக கர்நாடக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் தொடர்ந்து
வலியுறுத்தி வந்தார்.
தான் அடையாளப்படுத்தப்பட்ட லிங்காயத்து சமூகத்தின் பிற்போக்கு சிந்தனைகளை அவர் எதிர்த்தார். 12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு லிங்காயத்துத் தலை வருக்கு ‘தெய்வீக அருள்’ இருப்பதாக கூறப் பட்டதை இலக்கிய-அறிவியல் சான்று களுடன் மறுத்தார். ‘விநாயகன்’ ஊர்வலத்தின் மத அரசியல் அம்பலப் படுத்தினார்.
மூடநம்பிக்கைக்கு எதிராக இவர் தொடர்ந்து பரப்புரை செய்ததால் மூட நம்பிக்கையை ஆதரிக்கும் பாசிச கும்பலான பஜ்ரங் தளம், விஷ்வ ஹிந்து பரிஷத், சிறீராம் சேனா உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டன. தார் வாட் மாவட்டம் கல்யாண் நகரில் உள்ள கல்புர்கியின் வீட்டின் முன்பாக திரண்ட இந்துத்துவா அடிப்படைவாதிகள் கல்வீசி தாக்குதல் நடத்தி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இந்நிலையில் பார்ப்பனிய பயங்கரவாதிகள் முன்னாள் மாணவர்கள் போல் நடித்து அவரது வீட்டிற்கு சென்று அவரை துப்பாக்கி யால் சுட்டு கொலை செய்துவிட்டு தப்பி யோடி விட்டனர். சங்பரிவாரங்களினால் ஆபத்து இருந்தும்கூட மாநில அரசு ஒரு எழுத்தாளரும் முன்னாள் துணை வேந்தருமான ஒரு சமூக செயற்பாட்டாளருக்கு பாதுகாப்பு கொடுக்கத்தவறியது கண்டிக்கத்தக்கது.
பார்ப்பனிய அடிப்படைவாத குழுக் களான பஜ்ரங் தளம், வி°வ ஹிந்து பரிஷத், சிறீராம் சேனா போன்ற அமைப்பின்செயல்பாடுகளை ஒடுக்காவிட்டால் மனித நேயமே இல்லாத நிலை ஏற்படும். முன்னதாக 2013இல் இதேபோன்று மகாராஷ்டிராவில் பகுத்தறிவாளர் தபோல்கர், காலையில் நடைபயிற்சியின்போது சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.அந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட பின்னும் இன்றுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்பட வில்லை.
அடுத்து இதே வரிசையில் மகாராஷ்டிரா கோலாப்பூரில் பகுத்தறிவாளரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான கோவிந்த் பன்சாரே சுட்டுக் கொல்லப்பட்டார்.
தற்போது கல்புர்கி சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் கே.ஜே. ஜார்ஜ், மூத்த எழுத்தாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பஜ்ரங் தளம், விஷ்வ ஹிந்து பரிஷத், சிறீராம் சேனா, ஹிந்து ஜகர்ன வேதிகே உள்ளிட்ட அமைப்புகளிடம் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கருத்தை கருத்தால் எதிர் கொள்ள முடியாத கோழைகள் இதுபோன்ற கொலைகளை தொடர்ச்சியாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பார்ப்பனீய மதவெறி பாசிசத்தின் வரலாறு தொடர்ச்சியாக இப்படித்தான் கடந்த காலங்களிலும் இருந் திருக்கிறது. இந்துத்துவ கும்பல் நினைப்பது போல் துப்பாக்கி குண்டுகள் மூலம் சுதந்திர, பகுத்தறிவு சிந்தனைகளை ஒருபோதும் அழித்துவிட முடியாது.
படுகொலை செய்யப்பட்ட பகுத்தறிவாளர் கல்புர்கி படத்திறப்பு 31.08.2015 திங்கட் கிழமை மாலை திராவிடர் விடுதலைக் கழகச் சென்னை மாவட்ட கலந்துரையாடல் நடைபெற்றது. கல்புர்கி படத்தை கழக தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்தார். படத்திறப்பு நிகடிநச்சிக்கு கழக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை வகித்தார். இந்நிகடிநவின்போது கழகத்தின் மாநில தலைமைக் கழக நிர்வாகிகள், சென்னை மாவட்ட கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 03092015 இதழ்

 

You may also like...

Leave a Reply