நாகை மாவட்டத்தில் தந்தைபெரியாரின் 137 வது பிறந்தநாள் விழா
நாகை மாவட்டம். திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தந்தைபெரியாரின் 137 வது பிறந்தநாள் விழா படங்கள்
நாகை மாவட்டம். திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தந்தைபெரியாரின் 137 வது பிறந்தநாள் விழா படங்கள்
சென்னையில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி,கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் தந்தைபெரியாரின் 137 வது பிறந்தநாள் விழா,கொடியேற்றுதல் நிகழ்சிகள். கழக தோழர்களுடன் இராயப்பேட்டை பத்ரி படிப்பகத்தில் சிலைக்கு மாலை அணிவித்து பிறகு ஊர்வலமாக அண்ணா சாலை, தியாகராய நகர், ஜப்ரகான் பேட்டை, ஆலந்தூர், பெசண்ட் நகர் வண்ணாந்துறை ஆகிய இடங்களில்..
ஈரோடு வடக்கு மாவட்டம். திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தந்தைபெரியாரின் 137 வது பிறந்தநாள் விழா தோழர் பெரியாரின் 137வது பிறந்தநாள் விழா, ஈரோடு வடக்கு மாவட்டத் தோழர்களால் மிகச் சிறப்பாகக் கொ ண்டாடப் பட்டது. ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் , பின்னர் பெரியாரின் இல்லத்திற்குச் சென்று பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர் மரப்பாலத்தில் கழகக் கொடியேற்றினர். அதன் தொடர்சியாக ரங்கம்பாளையத்திலும் கழகக் கொடியேற்றி கேக் வெட்டி யும் பொங்கல் வழங்கியும் மகிழ்ந்தனர். தொடர்ந்து சூரம்பட்டி வலசிலும், சத்யாநகரிலும், மரவபாளையத்திலும் கழகக் கொடியேற்றப்பட்டது். இறுதியாக சித்தோடு சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கங்கினர் . மேலும் சித்தோடு நான்கு சாலையில் வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினர்.
சங்குகள் நிறமும் மாறி சந்தனம் மணமும் மாறி செங்கதிர் திசையும் மாறி தெங்குநீர் குளிரும் மாறி திங்கள்தன் நிலையும் மாறி தெவிட்டமுது இனிப்பும் மாறி சங்கமும் மாறினாலும் தந்தைசொல் வாழும் நாளும். – பாவலர் பாலசுந்தரம்
சீரிய பகுத்தறிவாளரும், முற்போக்கு எழுத்தாளர், மத மூட நம்பிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து செயலாற்றி வந்த பேராசிரியர், எழுத்தாளர் முன்னாள் துணை வேந்தருமான கல்புர்கி, பார்ப்பன பாசிச இந்து மதவெறி கும்பல்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருப்பதை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. கல்புர்கி 30.08.2015 ஞாயிறு காலை தன் வீட்டில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். அவர் மூடநம்பிக்கைக்கு எதிராக தொடர்ந்து பேசியும், எழுதியும் வந்தார். மூட நம்பிக்கைக்கு எதிராக கர்நாடக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். தான் அடையாளப்படுத்தப்பட்ட லிங்காயத்து சமூகத்தின் பிற்போக்கு சிந்தனைகளை அவர் எதிர்த்தார். 12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு லிங்காயத்துத் தலை வருக்கு ‘தெய்வீக அருள்’ இருப்பதாக கூறப் பட்டதை இலக்கிய-அறிவியல் சான்று களுடன் மறுத்தார். ‘விநாயகன்’ ஊர்வலத்தின் மத அரசியல் அம்பலப் படுத்தினார். மூடநம்பிக்கைக்கு எதிராக இவர் தொடர்ந்து பரப்புரை செய்ததால் மூட நம்பிக்கையை...
2015 ஆக.30ஆம் தேதி ‘காணாமல் போனோர் நாள்’ என்று அய்.நா. கடைபிடித்து வருகிறது. இதையொட்டி, ஈழத்தில் காணாமல் போன தமிழர்களின் கதி என்ன? இலங்கை அரசு இது குறித்து ஏன் மவுனம் சாதிக்கிறது என்ற கேள்வியை எழுப்பி, தமிழர் வாழ்வுரிமை கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், காஞ்சி மக்கள் மன்றம் உள்ளிட்ட அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. அய்.நா. நிறுவனங்களில் ஒன்றான ‘யுனிசெப்’ அமைந்துள்ள அடையாறு காந்தி நகரில் 31ஆம் தேதி காலை நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல் முருகன், தியாகு (தமிழ் தேசவிடுதலை இயக்கம்), ஆனந்தி சசிதரன் (இலங்கை வடக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்), பேராசிரியர் சரசுவதி (நாடு கடந்த தமிழீழ அரசு, தமிழக பொறுப்பாளர்), மகேசு (காஞ்சி மக்கள் மன்றம்), லோகு ஐயப்பன் (புதுவை திராவிடர் விடுதலைக் கழகம்), கழகத் தோழர் தபசி. குமரன், இரா. உமாபதி (மாவட்ட செயலாளர்) மற்றும்...
ஆகஸ்டு 31ஆம் தேதி திங்கள் கிழமை மாலை 6 மணியளவில் இராயப்பேட்டை ‘முருகேசன்’ மண்டபத்தில் நடந்தது. குகானந்தன், கடவுள்-ஆத்மா மறுப்புகளைக் கூறினார். உமாபதி வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இந்துத்துவவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட கருநாடக பல்கலைக் கழக முன்னாள்துணைவேந்தரும், மூடநம்பிக்கை எதிர்ப்பாளருமான கல்புர்கி படத்தை கழகத்தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்தார். இரண்டு நிமிடம் மவுனம் காத்து, தோழர்கள் வீர வணக்கம் செலுத்தினர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் அறிமுக உரையைத்தொடர்ந்து, கழக வழக்கறிஞர் துரை. அருண், தலைமைக் கழக செயலாளர் தபசி.குமரன், வேழவேந்தன், சுகுமார், ஏசு, மாணவர் கழகத் தோழர் அருண், அன்பு.தனசேகரன் ஆகியோர் கருத்துகளைத் தெரிவித்தனர். நிறைவாக, கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையாற்றி, கழகப் பொறுப்பாளர்களை அறிவித்தார். நிகழ்வில் முடிவெய்திய கழக செயல்வீரர் ஆட்டோ சரவணன் குடும்பத்துக்கு அவரது தாயாரிடம் கழக சார்பில் தோழர்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதி ரூ.62 ஆயிரத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி வழங்கினார்....
காஞ்சி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் வண்டலூர் ‘தலைநகர் தமிழ்ச் சங்க அரங்கத்தில்’ 30.8.2015 ஞாயிறு பிற்பகல் 5 மணியளவில் நடந்தது. சு.செங்குட்டுவன், கடவுள்-ஆத்மா மறுப்பு கூறினார். செ.க. தெள்ளமிழ்து வரவேற்புரையாற்ற, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தொடக்க உரையாற்றினார். மேடவாக்கம் இரவிக் குமார், கூடுவாஞ்சேரி பன்னீர்செல்வம்,குகன், செங்கல்பட்டு சரவணன், சு. செங்குட்டுவன், தினேசுகுமார் ஆகியோர் கருத்துகளைத் தெரிவித்தனர். “பகவத் கீதையில் ‘பெண்களை’ இழிவுபடுத்தும் சுலோகங்களையும்,‘வர்ணா°ரமத்தை’ நியாயப்படுத்தும் சுலோகங்களையும் தீயிட்டு எரிக்கும்போராட்டத்தை நடத்த வேண்டும்” என்றும், “ராமலீலாவுக்கு எதிர்ப்பாக ‘ராமன்’உருவத்தை எரிக்கும் ‘இராவணலீலா’ நடத்த வேண்டும்” என்றும் தோழர்கள்கருத்து தெரிவித்தனர். 3 நாள்கள் காஞ்சி மாவட்டத்தில் பரப்புரைப் பயணம் நடத்துவதாக தினேசுகுமார் தெரிவித்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையில், “தோழர்கள் கூறிய போராட்டங்களை திடீர் என நடத்துவதில் பயனில்லை. இது குறித்து மனுசாஸ்திர எரிப்புப் போராட்டத்தில் நடத்தியதுபோல் மக்களிடையே தொடர்ந்து பரப்புரை இயக்கங்களை நடத்தி, இறுதிக்கட்டமாக போராட்டம் நடத்த வேண்டும்” என்று...
வேலூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் குடியாத்தம் எ.வி.ஆர். தங்கும் விடுதியில் 30-8-2015 அன்று நடந்தது. நெமிலி ப. திலீபன், கடவுள் ஆத்மா மறுப்பு கூறி தொடக்க உரையாற்றினார். அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி தொடக்க உரையாற்றினார். நெமிலி திலீபன், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தாக்களை 100ஆக உயர்த்துவதாகவும், பரப்புரைப் பயணத்தை 3 நாள்கள் தங்கள் பகுதியில் நடததுவதாகவும் தெரிவித்தார். குடியாத்தம் இரா. சிவா பேசுகையில், புத்தர், புலே, பெரியார், அம்பேத்கர் பார்ப்பனக் கொடுங்கோன்மையை எதிர்த்து மக்களை அணி திரட்டியதை நினைவுகூர்ந்தார். நெமிலி நரேஷ்குமார் கவுரவக்கொலைகள் தமிழகத்தில் நடப்பது, தமிழகத்துக்குத் தலைகுனிவு என்றார். கவுரவக் கொலைகளைக் கண்டித்து கூட்டம் நடத்துவதற்குக்கூட காவல்துறை அனுமதி மறுப்பதை சுட்டிக் காட்டினார். குடியாத்தம் பாண்டியன், நெமிலி முனியாண்டி, கார்த்தி, ஜெயக்குமார், கஜேந்திரன், திருமலை, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச்சேர்ந்த துரை. ஜெடீநுசங்கர், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி ஆகியோர் பேசியதைத் தொடர்ந்து கழகத் தலைவர் நிறைவுரையாற்றி, கழகப் பொறுப்பாளர்களை அறிவித்தார். நெமிலி நரேஷ்...
29-8-2015 அன்று மாலை 4 மணியளவில் கிருட்டிணகிரி மாவட்ட கலந்துரையாடல், இலண்டன் பேட்டை வெற்றிவேல் மகாலில் நடந்தது., க.குமார், கடவுள் ஆத்மா மறுப்பு கூறினார். அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி அறிமுக உரையைத் தொடர்ந்து,தோழர்கள் குமார், நீலகிரி குமார், வாஞ்சிநாதன், காவேரி பட்டினம் பழனி பிரபு, காரிமங்கலம் வெங்கடேசன், சுந்தர் பிரேம் குமார், இராஜேஷ், மூங்கம்பட்டி ஆசிரியர் சக்திவேல் கருத்துகளைத் தெரிவித்தனர். பயிற்சி வகுப்புகள், தெருமுனைக் கூட்டங்களை நடத்த வேண்டும். மாணவர்களிடையே பெரியார் கருத்துகளைப் பரப்புவதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும் என்ற கருத்துகளைத் தோழர்கள் முன் வைத்தனர். பெரியார் முழக்கம் 03092015 இதழ்
29-8-2015 அன்று காலை 11-00 மணிக்கு, பி.அக்ராகரம், சமுதாயக் கூடத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தருமபுரி மாவட்டக் கலந்துரையாடல் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழக மாவட்டக் கலந்துரையாடல்களின் இறுதிச் சுற்றுப்பயணம், தர்மபுரி மாவட்டத்திலிருந்து தொடங்கியது. பி. அக்ரகாரம் சமுதாயக்கூடத்தில் பகல் 11 மணியளவில் நடந்த கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, ‘கடவுள் ஆத்மா மறுப்பு’ கூறி அறிமுக உரையாற்றினார். கழகத் தோழர்கள் வெ.வேணுகோபால், எம். அசோக்குமார், ம. பரமசிவம்,பேராசிரியர் சீனிவாசன், கு. நாகராஜன், ஆசிரியர் வையாபுரி,சந்தோஷ்குமார், செந்தில்குமார், எம். இராமதாஸ், சுதந்திரகுமார், நதியா தேவி,மு.ஜோதி, நடராஜன், நதிவர்மா ஆகியோர் கருத்துகளைத் தெரிவித்தனர். தெருமுனைக் கூட்டங்களை நடத்த வேண்டும்; கல்லூரி, பள்ளிகள் முன்மாணவர்களிடையே கொள்கை விளக்க துண்டறிக்கைகளை வழங்க வேண்டும்என்ற கருத்துகளை முன் வைத்த தோழர்கள், பா.ம.க. வளர்த்து விடும் ஜாதி வெறி ஆபத்துகளையும் சுட்டிக் காட்டினர். கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமிஉரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் நிறைவுரையாற்றி, பொறுப்பாளர்களை அறிவித்தார். பெரியார்...
காஞ்சி மக்கள் மன்றத்தில் 28-8-2015 அன்று மூவர் உயிர் காக்க தன்னை அழித்துக் கொண்ட தோழர் செங்கொடியின் நான்காம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. காலை 8-00 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கொடியேற்றினார். அடுத்து செங்கொடியின் நினைவிடத்தில் முத ல் மலர்வளையத்தை திருநங்கையர் சார்பாக அவ்வமைப்பின் மூத்த உறுப்பினர் வைத்தார். பல்வேறு அமைப்பினர் தங்கள் அமைப்புகளின் சார்பாக வீரவணக்கம் செய்தனர். மாலை 4-00 மணியளவில் மக்கள் மன்றத் தோழர்களின் பறையிசையோடு வீரவணக்க நிகழ்வு தொடங்கியது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன்,திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் உட்பட பல்வேறு அமைப்புகளின் முன்னணித் தோழர்களும் வீரவணக்கவுரை யாற்றினர்.
25-8-2015 அன்று மாலை ஈரோடு பெரியார் மன்றத்தில், ’இனப்படுகொலைக்கு ஈழம் ஒன்றே தீர்வு’ என்ற தலைப்பில் ’ தமிழீழ விடுதலைக்கான மாணவர் இளைஞர் கூட்டமைப்பு ’ சார்பில் கருத்தரங்கம், தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் மூர்த்தி வரவேற்புரையாற்ற கழகத் தோழர் வெங்கிட்டு தலைமையில் நடைபெற்றது. கருத்தரங்கில் முன்னாள் நாடுளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், கண.குறிஞ்சி, மாணவர் இயக்கங்களின் தலைவர்கள் ஆகியோர் உரையாற்றினர்
27-8-2015 அன்று சென்னை, பாலவாக்கத்தில் ‘மூன்று தமிழர் உயிர் காக்க’ தன்னையே எரித்துக் கொண்ட தோழர் செங்கொடியின் நான்காம் ஆண்டு நினைவு நாள், 27-8-2015 அன்று, சென்னை, பாலவாக்கத்தில், மரண தண்டனைக்கெதிரான மக்கள் இயக்கத்தின் சார்பாக கே.ஆர்.இரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில், நடிகர் சத்தியராஜ், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, அற்புதம் அம்மாள் ஆகியோர் சிறப்புரையாற்றினர் தொடக்கத்திலும் , இடையிடையேயும் காஞ்சி மக்கள் மன்றத் தோழர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மராட்டிய மாநிலத்தில் உள்ளது போல் நாத்திக இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றிக் காட்டிய தந்தை பெரியார் பிறந்த தமிழகத்திலும் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றிட வேண்டுமென மேட்டூரில் சுட்டுக்கொல்லப்பட்ட போராளி தபோல்கர் நினைவாக கழகம் நடத்திய நாத்திகர் விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நாத்திகர் விழா மற்றும் மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணி ஆகஸ்ட் 23ம் தேதியன்று மேட்டூர் சதுரங்காடியில் மாலை 5 மணியளவில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது. “மராட்டியத்தைப் பின்பற்றி மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டமியற்று” என்ற கோரிக்கையை வலியுறுத்தும் ‘பேனருடன்’ – மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்வுகளுடன் பேரணி புறப்பட்டது. பேரணியின் துவக்கத்தில், “பறை சாவுக்கான கலை அல்ல, அது வாழ்வுக்கான கலை; பறை ஒரு ஜாதிக்கான கலை அல்ல, அது ஜாதி ஆதிக்கத்தை அறுக்கவந்த ஆதிக் கலை” என்ற முழக்கத்தோடு சுயமரியாதை கலைபண்பாட்டுக் கழக பல்லடம் தோழர்களும்,...
விநாயகன் சிலை ஊர்வலம் என்ற பெயரில் மதவெறி அரசியல் ஊர்வலத்தை இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. அமைப்புகள் தொடர்ந்து நடத்தி, பதட்டத்தை உருவாக்கி வருகின்றன. சென்னையில் இதற்காக பெரும் தொகை செலவிடப்படுகிறது. தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப் பட்ட அப்பாவி இளைஞர்கள் இந்த ஊர்வலங்களுக்காக வலைவீசப்படுகிறார்கள். இதில் பெரும்பகுதி இளைஞர்கள் அன்றைய ஒரு நாள் மகிழ்ச்சியை கொண்டாடுவதைத் தவிர வேறு மதவெறி அரசியலில் அவர்களுக்கு ஈடுபாடு இல்லை. ஆனால், ‘இந்துத்துவா’ அரசியலுக்கு மக்கள் ஆதரவு இருப்பதுபோல் ஒரு தோற்றத்தைத் திட்டமிட்டு உருவாக்குகிறார்கள். 1996 ஆம் ஆண்டு திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து, பெரியார் திராவிடர் கழகம் தொடங்கப்பட்டபோது, அதன் தொடக்க விழாவிலேயே சென்னையை அச்சுறுத்தி வரும் விநாயகன் சிலை ஊர்வலத்துக்கு எதிரான போராட்டம் அறிவிக்கப்பட்டது. விநாயகன் சிலை ஊர்வலம் வரும் பாதையில் அதற்கு நேர் எதிராக பெரியார் சிலை ஊர்வலத்தை நடத்துவோம் என்று தொடக்க விழா நிகழ்விலேயே பெரியார் திராவிடர் கழகம் அறிவித்தது. அப்போது முதலமைச்சராக...
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் அருகில் கடந்த 16 செப்டம்பர் 1996ம் ஆண்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் தந்தை பெரியாருக்கு முழு உருவ சிலை வைக்கப்பட்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திறந்து வைத்தார். 2 ஆண்டுகள் கழித்து முத்துப்பேட்டை பகுதியில் உள்ள இந்துத்துவ சக்திகளால் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது. மீண்டும் கடந்த 2004ம் ஆண்டு மதிமுக சார்பில் புதிதாக முழு உருவ பெரியார் சிலை அமைக்கப்பட்டு மதிமுக பொதுச் செய லாளர் வைகோ திறந்து வைத்தார். இந்த நிலையில் முத்துப்பேட்டையில் இந்துத்துவா சக்திகளின் தொடர் சதி செயல்களால் பல்வேறு மத கலவரங்கள் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டன. வருடா வருடம் இந்து முன்னணி பா.ஜ.க. சார்பில் வினாயகர் ஊர்வலங்கள் நடத்தப்பட்டு தொடர்ந்து முத்துப்பேட்டை பகுதிகளில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து வந்தனர். தந்தை பெரியார் சிலையை எப்படியேனும் அகற்ற பல்வேறு சதி திட்டங்களை தீட்டி வந்தனர்....
திராவிடர் விடுதலைக் ஈரோடு வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம்; எங்கள் சந்திக்கு வேலை வேண்டும் பிரச்சார பயண துவக்க விழா பொதுக்கூட்டம் 26082015 பவானியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளர் பவானி வேனுகோபால் தலைமையேற்க, முன்னிலை பொறுப்பை மாவட்ட தலைவர் நாத்திக சோதி அவர்கள் ஏற்க, கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் தோழர் இரத்தினசாமி, மாநில பொருளாளர் துரைசாமி, மாநில வெளியீட்டு செயலாளர் தோழர் இராம இளங்கோவன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினார்கள். கூட்டத்தில் சிறப்புரை வழங்க கழகத் தலைவர் தோழர் கொளத்தூர்மணி அவர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த வழக்குரைநர் தோழர் ப.பா. மோகன் அவர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முன்னதாக மேட்டூர் மவுசு பன்னீர் இசை குழவினரின் ஜாதி ஒழிப்பு பாடல் நிகழ்வுகளும்,தோழர் கோவிந்தராஜ் அவர்களின் மந்திரமல்ல! தந்திரம் என்கிற நிகழ்ச்சியும் நடைபெற்றது. கூட்டத்திற்கு வருகை தந்தவர்களை தோழர் வேல்முருகன் அவர்கள் வரவேற்று பேசினார்....
உசிலம்பட்டி விமலா தேவியை கொலை செய்தவர்கள் – உடந்தையாக இருந்த காவல்துறை யினரைக் கைது செய்யக் கோரி, மதுரையில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சியில் 26 அக்டோபர் 2014ல் நடைபெற்ற திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், உசிலம்பட்டி விமலாதேவியின் கவுரவக்கொலையை கண்டித்தும், திருமண விவகார தலையீட்டு தடுப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றக் கோரியும், மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 11.11.2014 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திருவள்ளுவர் சிலை எதிரில் திராவிடர் விடுதலைக்கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் துவக்கத்தில், சென்னை அருள்தா°, சென்னை நாத்திகன் ஆகியோர் ஜாதி மறுப்பு பாடல்களை பாடினர். பின்பு கோரிக்கைகளை வலியுறுத்தி, திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு உறுப்பினர் கோபி.இராம இளங்கோவன், மே...
வேளாண் பல்கலையின் விவசாயக் கையேட்டில் பஞ்சாங்கங்களை திணித்திருப்பதை நீக்கக் கோரி கோவையில் திராவிடர் விடுதலைக் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. கோவை பல்கலைக்கழகத்தில் இயங்கும் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் என்ற அமைப்பு விவசாய பெருமக்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று காரணம் சொல்லி மழை முன்னறிவிப்பு கையேடு ஒன்றினை தயாரித்து 2013ம்ஆண்டு முதல் வழங்கி வருகிறது. அதில் 100 ஆண்டுகளுக்கு மேலான மழை பற்றிய புள்ளி விவரங்களை இந்திய வானிலை துறையிலிருந்து பெற்று, அறிவியல் முறையில் ஆய்வு செய்து மாத வாரியாக ஒவ்வொரு மாவட்டங்களில் எதிர்பார்க்கப் படும் மழை அளவினை வெளியிட்டு அதற்கேற்றாற் போல் விவசாயப் பணிகளை செய்யுமாறு விவசாயி களுக்கு அறிவுறுத்தி வருகிறது. அவ்வாறு 2014ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள மழை முன்னறிவிப்பு கையேட்டில் வானிலை துறை விவரங்கள் அடிப் படையில் ஒரு பகுதியாகவும், 14 பஞ்சாங்கங்கள் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட மழை குறிப்புகளை ஒரு பகுதியாகவும் வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இந்த...
தமிழீழத்தை மீட்டெடுக்க தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் வழிகாட்டுதலில் போராடி, சிங்கள இராணுவத்தாலும் இந்திய இராணுவத் தாலும் வெல்லமுடியாத தளபதியாகத் திகழ்ந்த பிரிகேடியர். பால்ராஜ் அவர்களைப்பற்றிய ”பிரிகேடியர் பால்ராஜ்- சமர்க்கள நாயகன்” (இராவணன் பதிப்பகம் பதிப்பித்த) நூல் வெளியீட்டு விழாப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் பெரியார் திடலில் 13.12.2014 சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு புதுச்சேரி மாநிலத் திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடுசெய்திருந்தது. விழாவில் புதுச்சேரி மாநிலக் கழகத் தலைவர் தோழர். லோகு.அய்யப்பன் தலைமை உரையாற்றினார். அவ் வுரையில், ”ஈழ விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கியது சிங்களர்கள் அல்ல! இந்திய ஆட்சியாளர்கள்!!” என்பதைக் குறிப்பிட்டார். தோழர் இர.தந்தைப் பிரியன் வரவேற்புரையாற்றினார்.நூலினைத் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர். கொளத்தூர் மணி வெளியிட, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் தோழர். தி.வேல்முருகன் பெற்றுக்கொண்டார். நூலின் முதல்படியினைத் தோழமை இயக்கங்களின் தலைவர்கள் பெற்றுக்கொண்டனர். கொளத்தூர் மணி ஈழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்ககால நிலையினை...
காஞ்சி மாவட்ட திராவிடர் விடுதலைக்கழக செயலாளர் தினேஷ்குமார் சகோதரரும், மு. ரமணி -கு.குருசாமி மகனுமான மு.இராஜேஷ், மறைமலை நகர் கே.நாகலட்சுமி-சு.கேசவன் ஆகியோரின் மகள் கே. காயத்ரி ஆகியோரின் ஜாதி மறுப்பு வாழ்க்கை ஒப்பந்த விழா 4.1.2015 ஞாயிறு மாலை 5 மணியளவில் கூடுவாஞ்சேரி சாரதாம்பாள் திருமண மண்டபத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் சரசுவதி, வே. மதிமாறன், வ. வேம்பையன், மு.பிச்சைமுத்து, மா. சமத்துமணி, சு. செங்குட்டுவன் (மாவட்ட தலைவர்) வாழ்த்துரை வழங்கினர். பெண் வீட்டார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள். தி.வி.க. – தி.க. தோழர்கள் ஏராளமாக வந்திருந்தனர். கழக ஏட்டுக்கு ரூ.2000 நன்கொடை வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 15012015 இதழ்
‘சூத்திரர்’ என்று இழிவுபடுத்தும் வேத, புராண, சாஸ்திரங்களைத் தடைசெய்! பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொரு பாகன்’ நாவல் திருச்செங்கோடு பெண்களை இழிவுபடுத்துவதாக ஜாதி-மத வாத சக்திகள் அச்சுறுத்தி, மிரட்டி ஒரு இலக்கியவாதியின் படைப்பை முடக்கியுள்ளன. ஆனால், பெரும்பான்மை மக்களை இழிவுபடுத்தும் ‘மனு சா°திரம்’ பெண்களை இழிவுபடுத்தும் புராணங்களை ‘புனிதமாக’ப் போற்றுகிறார்கள். பல நூறு ஆண்டுகளாக தொடர்ந்து ‘புனிதங்கள்’ என்ற பெயரில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ‘இழிவுகளுக்கு’ எதிராக பெரியார் இயக்கம் போராடி வருகிறது. ஆனால், பெரியார் இயக்கம் ‘மதத்தைப் புண்படுத்துவதாக’ குற்றம் சாட்டுகிறார்கள். ‘பெரும்பான்மை’ மக்களை இழிவுபடுத்தும் வேத புராண சாஸ்திரங்களை தடை செய்யக் கோரி திராவிடர் விடுதலைக் கழகம் திருச்செங்கோட்டில் ஜன.23இல் பொதுக் கூட்டம் நடத்தவிருக்கிறது. அதையொட்டி மக்களிடையே பரப்புவதற்காக கழகம் வெளியிட்ட துண்டறிக்கை: சூத்திரன் என்றால் யார்? இந்து மதத்தில் பார்ப்பனர்களைத் தவிர பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்த மக்கள் அனைவரும் சூத்திரர்கள் என இந்து மத சாஸ்திரங்கள்...
பெங்களூர், சிவாஜி நகர், வேளாண்மை அறிவியல் நிறுவன அரங்கில் ‘கற்பி ஒன்று சேர் ’ அமைப்பின் தலைவர் ஜார்ஜ் ஒருங்கிணைப்பில் 26-01-2015 திங்கள் அன்று பிற்பகல் 3-00 மணி முதல் 8-00 மணிவரை பெரியார் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்வு நடந்தேறியது. நிகழ்ச்சி கர்நாடக மாநில ரிபப்ளிகன் கட்சி, சமதா சைனிக் தள் ஆகியவற்றின் தலைவராகிய முனைவர் வெங்கடசுவாமி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வெங்கட்டையா, சப்தகிரி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சுரேந்திரநாத், பெங்களூர் பல்கலைக் கழக சமூகவியல்துறை தலைவர் முனைவர் சமதா தேஷ்மானே ஆகியோர் பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் சமூகப் புரட்சிப் பணிகளை தமிழிலும், கன்னடத்திலும் விரிவாகப் பேசினர். கூட்டத் தலைவரும் கன்னட தலைவர்களும் பெரியாரைப் பற்றியும் அவரது போராட்டங்களைப் பற்றியுமே அதிகம் பேசினர். நிகழ்ச்சியில் பெரியார், அம்பேத்கர் ஆகியோரை பற்றிய ஆறு, ஆறு பாடல்களைக்...
ஆக. 29ஆம் தேதி தொடங்கப்பட்டதுதான் விசுவ இந்து பரிஷத். ஆனால், அதை காந்தி நினைவு நாளில் தொடங்கப்பட்டதாக மாற்றிக் கொண்டார்கள். பார்ப்பனர்கள், சங்கராச்சாரிகள், சாமியார்கள் இடம் பெற்றுள்ள அமைப்பு விசுவ இந்து பரிஷத். பாரதிய ஜனதா கட்சி உருவாவதற்கு முன்பே 1964ஆம் ஆண்டிலே ஆர்.எ°.எ°. தலைவர் கோல்வாக்கர் ஆலோசனை பெயரில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, அயோத்தியில் ‘இராமன்’, மதுராவில் ‘கிருஷ்ணன்’, காசியில் ‘விசுவநாதன்’ ஆகிய மூன்று மதக் கடவுள்களுக்கும் அங்கே அமைந்துள்ள மசூதிகளைத் தகர்த்துவிட்டு கோயில்கள் கட்டவேண்டும் என்று அறிவித்தது. பிற மதத்தினரை ‘இந்து’ மதத்துக்கு மாற்றுவதற்காகவே ‘தர்ம பிரச்சார்’ என்ற தனிப் பிரிவை, விசுவ இந்து பரிஷத் உருவாக்கியுள்ளது. 1966ஆம் ஆண்டு பசுவதை தடைச் சட்டம் கொண்டு வர வலியுறுத்தி, டெல்லியில் காமராசரை உயிரோடு கொளுத்த திட்டமிட்டு, அவரது வீட்டுக்கு தீ வைத்து, சங் பரிவாரங்களோடு சேர்ந்து விசுவ இந்து பரிஷத்தும் வெறியாட்டம் நடத்தியது. இந்த விசுவ இந்து பரிஷத்,...
திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி எழுதிய “பெரியாருக்கு எதிரான முனை மழுங்கும் வாதங்கள்”, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராஜேந்திரன் தொகுத்த “காந்தியை சாய்த்த கோட்சேவின் குண்டுகள்”, தஞ்சை பசு கௌதமன் தொகுத்த “ஏஜிகேவின் நினைவுகளும். நிகழ்வுகளும்”, புதுச்சேரி இராவணன் பதிப்பகம் தொகுத்த “பிரிகேடியர் பால்ராஜ் சமர்க்கள நாயகன் (போர்களத்தின் வெற்றிகள்)” ஆகிய நூல்களின் அறிமுக விழா ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பிப்ரவரி 12 வியாழக்கிழமை மாலை 5.00 மணியளவில் ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக்குழு உறுப்பினர் ப.இரத்தினசாமி தலைமையில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது. விழாவிற்கு வந்த அனைவரையும் பொள்ளாச்சி விஜயராகவன் வரவேற்று உரையாற்றினார். தலைமைக் குழு உறுப்பினர்கள் திருப்பூர் துரைசாமி, கோபி இராம இளங்கோவன், தமிழ் உணர்வாளர், பகீரதன் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றி னார்கள். பின்னர், ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் குருவரெட்டியூர் நாத்திக ஜோதி, நாமக்கல்...
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனங் களில் சமூக நீதியை வற்புறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 25..2.2015 மாலை 4 மணியளவில் வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் வழக்கறிஞர்கள் துரை. அருண், திருமூர்த்தி முன்னிலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி. பால். கனகராஜ், முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எ°. ரஜினிகாந்த், சமூக நீதிப் பேரவைத் தலைவர் கே.பாலு, ஜனநாயகம் மற்றும் சமூக நலன்களுக்கான வழக்கறிஞர் பேரவையைச் சார்ந்த செ. விஜயகுமார், அகில இந்திய எல்.அய்.சி. பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்க செயலாளர் கு. கமலக்கண்ணன், சிறுபான்மையினர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் ஜைனூல் ஆபீதீன், பெண்கள் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வா. நளினி, வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் அறிவழகன், துணைத் தலைவர் கினி லீயோ மேனுவேல், சி.பி.அய்.எம்.எல். மக்கள் விடுதலை சார்பில் செல்வி, மனித நேய மக்கள் கட்சி...
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 18 நீதிபதிகளுக்கான நியமனங்களில் இதுவரை வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகங்களுக்கு நீதி வழங்கக் கோரி உயர்நீதிமன்றத்தை முற்றுகையிடும் போராட் டம் எழுச்சியுடன் நடந்தது. திராவிடர் விடுதலைக் கழகம் முயற்சித்து பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து சமூக நீதிக்கான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தோழர் களுடன் தொடர்பு கொண்டு பேசி ஒருங்கிணைத்தார். வேல் முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), திருமாவளவன் (வி.சி.), பாக்கர் (இந்திய தவ்ஹித் ஜமாத்), அப்துல் சமது (தமிழக மு°லிம் முன்னேற்றக் கழகம்), வீரலட்சுமி (தமிழர் முன்னேற்றப் படை), மீ.த. பாண்டியன் (தமிழ்நாடு மக்கள் கட்சி), மகேசு (காஞ்சி மக்கள் மன்றம்), செந்தில் (இளந்தமிழகம் இயக்கம்) ஆகிய அமைப்பு களைச் சார்ந்த பொறுப்பாளர்களும் தோழர்களும் பங்கேற்றனர். தந்தை பெரியார் திராவிடர் கழகம், மீனவ மக்கள் முன்னணி, ஆதித் தமிழர் பேரவை, அகில இந்திய கிறி°தவ மக்கள் கழகம்,...
திருப்பூரில், தமிழ் நாடு அறிவியல் மன்றம் சார்பில் மகளிர் தின விழா 08.03.2015 அன்று திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டி சென்டர், மங்கலம் சாலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. ”மாதவிடாய்” மற்றும் ”தீவரைவு” ஆவணப் படங்கள் திரையிடப் பட்டன. பின்பு நடை பெற்ற கருத்தரங்கத்தில் ”மாத விடாய் காலத்தில் உணவு” எனும் தலைப்பில் இயற்கை மருத்துவர் பெரியார் செல்வி, ”மாதவிடாய் குறித்த மூட நம்பிக்கைகள்” எனும் தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் மன்ற செயலாளர் ரஞ்சிதா கருத்துரை வழங்கினர். மதிய உணவாக அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது. மதிய உணவு இடைவேளைக்கு பின் பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் இந்திய அளவிலான கால்பந்து போட்டியில் தமிழக அணியில் இடம்பெற்று விளையாடிய மணியரசி, கபடி விளையாட்டில் மாநில அளவிலான போட்டிகளில் இடம் பெற்ற மைதிலி ஆகியோருக்கும், கலைத்துறையில் சிறந்து விளங்கும்...
15.03.2015 அன்று மாலை 3 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் கொடி யேற்றுவிழா நடை பெற்றது. கழக கொடியை கழக தலைவர் கொளத்தூர் மணி ஏற்றிவைத்தார். இந் நிகழ்ச்சியில் கழக தலைமைக்குழு உறுப் பினர்கள் பால் பிரபாகரன், ஈரோடு ரத்தினசாமி, திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, தமிழ்நாடு மாணவர் கழக மாநில அமைப்பாளர் பாரி. சிவக்குமார் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். கழக சார்பில் “தமிழ் இன உரிமை மீட்பு பொதுக்கூட்டம்” மாலை 6 மணிக்கு, விருத்தாசலம், வானொலித் திடலில் நடைபெற்றது. கழக தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். முன்னதாக மாலை 5 மணியளவில் துரை. தாமோதரன் “’மந்திரமா, தந்திரமா?” நிகழ்ச்சி நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்நாடு மாணவர் கழகம் ஆகிய அமைப்புகள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. பெரியார் முழக்கம் 02042015 இதழ்
அரசு மருத்துவமனை வளாகத்தில் சட்ட விரோதமாக கட்டப்பட்ட கோயில் கழக தோழர்களின் முயற்சியால் இடித்து அப்புறப்படுத்தப் பட்டது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு மருத்துவ மனை வளாகத்தில் புதியதாக ஒரு வினாயகர் கோயில் கட்டப்பட்டு வந்தது. இந்த தகவலை அறிந்த கழகத் தோழர்கள், மாவட்ட செயலாளர் வைரவேல் தலைமையில் அந்த கோயிலை இடித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்தனர். மேலும் 26.03.2015 அன்று அரசு மருத்துவமனை நிலத்தை ஆக்கிரமித்த மருத்துவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகமே இரவோடு இரவாக அந்த கோயிலை இடித்து கட்டுமான பொருட்களையும் அப்புறப்படுத்தினர். இந்த முயற்சிக்கு பள்ளிபாளையம், திருச்செங்கோடு பகுதி கழகத் தோழர்கள் பெரிதும் உழைத்தனர். பெரியார் முழக்கம் 02042015 இதழ்
“எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்” என்ற முழக்கத்தை முன் வைத்து சேலம் மேற்கு மாவட்டத்தின் சார்பாக ஐந்து நாட்கள் பரப்புரைப் பயணம் நடைபெற்றது. பயணத்தின் தொடக்க விழா பொதுக் கூட்டம் மார்ச் 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு தாரமங்கலத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியக்குமார் தலைமையேற்க, காவை. இளவரசனின் ‘மந்திரமா தந்திரமா?’ நிகழ்ச்சி நடைபெற்றது. பரப்புரைப் பயணத்தை விளக்கி, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரை யாற்றினார். மார்ச்-22 : நங்கவள்ளி அருகே உள்ள மசக் காளியூரில் மாலை 7 மணிக்கு பரப்புரை நடை பெற்றது. இதில் தோழர்கள் நங்கவள்ளி அன்பு, சேலம் பிரபு பயணத்தை விளக்கி உரையாற்றினர். சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சி.கோவிந்தராஜ், ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார். மார்ச்-23 : மேட்டூர் ஆர்.எ°. பகுதி வைதீ°வரா பள்ளி அருகில் மாலை 6 மணிக்கு பரப்புரை நடைபெற்றது. பயணத்தை...
ஆகஸ்டு 30 – இந்த நாள், சர்வதேச காணாமல் போனவர்கள் நாள்’ என உலகெங்கும் அனுசரிக்கப்படுகிறது. காணாமல் போனவர்களின் உலகு தழுவிய போராட்டத்தில் தமிழகத் தமிழர்களாகிய நாமும் தோழமை கொள்வோம்! ஆயிரக்கணக்கில் நம் மக்களை காணாமல் போனவர்களாக தொலைத்து நிற்கிறோம் என்ற உண்மையை இந்த நாளில் நினைவில் நிறுத்துவோம்! சர்வதேச காணாமல் போனவர்கள் நாளை முன்னிட்டு… ஆகஸ்டு 31 திங்கள் காலை 10 மணியளவில் சென்னை அடையார் காந்தி நகர், ஐ.நா.வின் யுனிசெஃப் அலுவலகம் எதிரில் தமிழர் நீதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஆர்ப்பாட்டத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழர் வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் பங்கேற்கின்றார்கள். பெரியார் முழக்கம் 27082015 இதழ்
தலித் இளைஞர் கோகுல்ராஜ், ஜாதி ஆணவக்காரர்களால் படுகொலை செய்யப்பட்டதைக் கொலை வழக்காக மாற்ற வலியுறுத்தி, 1.7.2015 பகல் 1 மணியளவில் கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், சட்டம் ஒழுங்குப் பிரிவு துணை இயக்குனரிடம் மனு அளித்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆதிக்க ஜாதியாக இருக்கும் சமூகப் பிரிவைச் சார்ந்தவர்களை காவல்துறை அதிகாரிகளாக நியமிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், காவல்துறை கல்வித் துறையுடன் இணைந்து ஜாதி எதிர்ப்புப் பரப்புரை நடத்துவதை வரவேற்றும், அதே நேரத்தில் கழகம் நடத்தும் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை இயக்கத்துக்கு காவல்துறை தடை விதிப்பதை நிறுத்தக் கோரியும் மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது. கோரிக்கைகளில் நியாயம் இருப்பதாகக் கூறிய அதிகாரி, சமூக நீதி, ஜாதி வெறி தலைதூக்கும் ஆபத்துகளை சுட்டிக்காட்டினார். மாவட்ட செயலாளர் உமாபதி, தபசி குமரன், வழக்கறிஞர் அருண், அன்பு தனசேகரன் ஆகியோர் இயக்குனரை சந்திக்க உடன் வந்தனர். பெரியார் முழக்கம் 09072015 இதழ்
சேஷசமுத்திரம் கிராமத்தில் தலித் மக்கள் மீது நடந்த ஜாதிவெறித் தாக்குதலை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் விழுப்புரம் மாவட்ட சார்பில் 24.08.2014 மாலை 3.00 மணிக்கு சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் ஜாதி வெறியர்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியும் காவல்துறையை நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது. 50க்கும் அதிகமான தோழர்களை காவல்துறை கைது செய்து மாலை விடுவித்தது.
23.08.2015 மாலை 5.30 மணியளவில் திராவிட விடுதலைக் கழக தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக “சமகால வாழ்வியலும் ஜாதிய வண்கொடுமைகளும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்களில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர். சிறப்புரை தோழர் மதிமாறன் மற்றும் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் பல்வேறு கருத்துரைகளை பதிவு செய்தனர். இரவு 9 மணிக்கு நிகழ்ச்சி முடிந்தது கருத்தரங்கின் காணொளி விரைவில் பதிவேற்றப்படும்
20-8-2015 அன்று மாலை 4-00 மணிக்கு, தூத்துக்குடி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது. முன்னதாக தோழர் க.மதன் படத்திறப்பு விழா நடைபெற்றது. கழக கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன் மற்றும் இயக்க தோழர்கள் கழக பணிகளை மேற்கொண்டு செல்ல ஆலோசனை வழங்கினர்.
20-8-2015 அன்று காலை 11-00 மணிக்கு, விருதுநகர் , பாண்டியன் நகரில் உள்ள தோழர் கணேசமூர்த்தியின் இல்லத்தில், மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.
16-8-2015 அன்று காலை முதல் மாலை வரை புதுச்சேரி மாநில திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ‘ பெரியாரியல் பயிற்சி வகுப்பு, அரியாங்குப்பத்தை அடுத்த அலுத்துவேலியில் உள்ள தோழர் பழனிராசா தோட்டத்தின் இயற்கை எழில் கொஞ்சும் தென்னந்தோப்பில் நடந்தது. அறிமுக உரையை ஆற்றிய மாநிலக் கழகத் தலைவர் லோகு அய்யப்பன் மாநிலக் கழகம் எடுத்த முடிவை ஒட்டி மாதந்தோறும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள பெரியாரியல் பயிற்சி வகுப்பின் தொடக்க நிகழ்வே இது என்று குறிப்பிட்டார். கழகத் தோழர்கள் யார் எந்தவகையான கேள்விகளை கேட்டாலும் உடனே பதிலளிக்கும் அளவுக்கு கொள்கைத் தெளிவு உள்ளவர்களாக வளர்த்தெடுக்கும் முயற்சியே இது என்றார். தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி, “பெரியார் என்றொரு மனிதர்” என்ற தலைப்பில் பெரியாரின் இளமைக் காலம்யற்சி முதற்கொண்டு அவர் பெரும் மானுடநேயராக, ஜாதி ஒழிப்பு, பெண்ணூரிமைப் போராளியாகப் பரிணமித்ததற்கான பின்புலம் போன்றவற்றை விளக்கி 11-00 மணி முதல் நண்பகல் 2-00 மணிவரை விளக்கினார். மதிய...
திராவிடர் விடுதலைக் கழக மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்களின் 3ஆம் கட்டப் பயணம், ஆகஸ்ட் 12ஆம் தேதி தொடங்கியது. இந்தப்பயணத்தில் கழகப் பொறுப்பாளர்களுடன் பரப்புரை செயலாளர் பால். பிரபாகரனும் பங்கேற்றார். தஞ்சை தஞ்சை மாவட்டக் கழகத்தின் கலந்துரையாடல், ஆக.12ஆம் தேதி பகல் 11 மணியளவில் பட்டுக்கோட்டை ‘அரசு பிளாசா’ அரங்கில் தொடங்கியது. அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கடவுள், ஆத்மா மறுப்புகளைக் கூறி, தொடக்க உரை நிகழ்த்தினார். தோழர்கள் கு.பாரி, சி.த. திருவேங்கடம், அ.கோவிந்தன், மூத்த பெரியார் தொண்டர் ப.வைத்தியலிங்கம், ப.ஜெயச்சந்திரன், வடசேரி சிவசுப்ரமணியன், கார்த்திகேயன், பள்ளத்தூர் நாவலரசன், கரிகாலன், பசு. கவுதமன், பொருளாளர் துரைசாமி, பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன் ஆகியோரைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையாற்றி, பொறுப்பாளர்களை அறிவித்தார். “எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்; இளைய தலைமுறைக்கு வேலை வேண்டும்” – என்ற முழக்கத்தை முன் வைத்து கழகம் திட்டமிட்டுள்ள பரப்புரை இயக்கத்தை மாவட்டத்தில் நான்கு நாட்கள்...
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் பொறியாளர் கோகுல்ராஜ். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் ஒத்தகடை பகுதியைச் சேர்ந்தவர் சுவாதி. இருவரும் ஒரே கல்லூரியில் படித்து பழகியுள்ளனர். கடந்த 50 நாட்களுக்கு முன்னர் பொறியாளர் கோகுல்ராஜூம், சுவாதியும் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு இருவரும் வந்த போது அவர்களை ஜாதியின் பெயரால் பிரிக்கும் நோக்கத்தில் தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை என்கிற ஜாதி அமைப்பின் நிறுவனர் யுவராஜ் என்பவர் தலைமையில் 20 க்கு மேற்பட்ட ரவுடிகள் கோகுல்ராஜ் சுவாதி ஆகியோரைப் பிடித்து அவர்களின் ஜாதிகளைப் பற்றி விசாரித்த பின்னர் சுவாதியை மட்டும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்கிற காரணத்தினால் ஜாதிய வெறியோடு பொறியாளர் கோகுல் ராஜை கடத்தி சென்று அவரை கொலை செய்து தலையை துண்டித்து பள்ளி பாளையம் ரயில் மார்க்கத்தில் தொட்டிபாளையம் என்ற பகுதியில் இரயில்வே தண்டவாளத்தில் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றனர். தமிழக முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்திய இந்த...
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் பொறியாளர் கோகுல்ராஜ். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் ஒத்தகடை பகுதியைச் சேர்ந்தவர் சுவாதி. இருவரும் ஒரே கல்லூரியில் படித்து பழகியுள்ளனர். கடந்த 50 நாட்களுக்கு முன்னர் பொறியாளர் கோகுல்ராஜூம், சுவாதியும் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு இருவரும் வந்த போது அவர்களை ஜாதியின் பெயரால் பிரிக்கும் நோக்கத்தில் தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை என்கிற ஜாதி அமைப்பின் நிறுவனர் யுவராஜ் என்பவர் தலைமையில் 20 க்கு மேற்பட்ட ரவுடிகள் கோகுல்ராஜ் சுவாதி ஆகியோரைப் பிடித்து அவர்களின் ஜாதிகளைப் பற்றி விசாரித்த பின்னர் சுவாதியை மட்டும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்கிற காரணத்தினால் ஜாதிய வெறியோடு பொறியாளர் கோகுல் ராஜை கடத்தி சென்று அவரை கொலை செய்து தலையை துண்டித்து பள்ளி பாளையம் ரயில் மார்க்கத்தில் தொட்டிபாளையம் என்ற பகுதியில் இரயில்வே தண்டவாளத்தில் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றனர். தமிழக முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்திய இந்த...
காந்தி மார்க்கெட் பகுதியில் பள்ளி வளாகங்களுக்கு அருகிலுள்ள நெல்பேட்டை ஒயின்ஷாப், பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கும் பெரும் இடையூறாக இருந்து வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் ஒயின்ஷாப் முற்றுகைப் போராட்டத்தை 4.8.2015 காலை 10 மணிக்குஅறிவித்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் காந்தி மார்க்கெட் காவல் துறையினர் கழக மாவட்டச் செயலாளர் கந்த வேல் குமார், பிள்ளை மாநகர் பகுதி தலைவர் வெனிஸ் கிளமெண்ட், ஜெனிபர் ஆகியோரை நள்ளிரவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெரியார் முழக்கம் 13082015 இதழ்
விழுப்புரம் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம், 14-8-2015 அன்று நண்பகல் 12-00 மணிக்கு, சங்கராபுரம், வாசவி அரங்கில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது.
13-8-2015 அன்று மாலை 6-00 மணிக்கு, கடலூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம், கம்மாபுரம், திருச்சிக்காரர் மண்டபத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னினையிலும் நடைபெற்றது.
13-8-2015 அன்று நண்பகல் 2-00 மணிக்கு, மூத்த பெரியாரியரும், கீழ்வெண்மணி கோபாலகிருஷ்ண நாயுடு கொலை வழக்கில் கைதான 11 திராவிடர்க் கழகத் தோழர்களுக்கான வழக்கை முன்னின்று நடத்தியவரும், குடிதாங்கி நிகழ்வில் மையப் புள்ளியாய் நின்று இயங்கியவரும் ஆன ஆர்.பி.எஸ்.ஸ்டாலின் உடல் நலிவுற்றிருக்கிற செய்தி அறிந்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழக முன்னணித் தோழரும், எழுத்தாளருமான தஞ்சை பசு. கவுதமன் ஆகியோர் கும்பகோனத்தில், அம்பேத்கர் வளாகம், தந்தை பெரியார் இல்லத்தில் சந்தித்தனர். அவரிடம் கீழ்வெண்மணி கொலை, குடிதாங்கி நிகழ்வு போன்றவற்றில் உள்ள அய்யங்களைக் கேட்டறிந்ததோடு, நிகழ்கால அரசியல் குறித்தும் இரண்டு மணி நேரம் உரையாடிவிட்டு விடைபெற்றனர்.
கழகத்தின் நாகை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம், 13-8-2015 அன்று காலை 11-00 மணிக்கு, மயிலாடுதுறை, ROA அரங்கத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது.
12-8-2015 அன்று மாலை 6-00 மணிக்கு கழகத்தின் திருவாரூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம், மன்னார்குடி மதர்சா அரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கழகத்தின் தஞ்சை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 12-8-2015 அன்று காலை 11-00 மணிக்கு பட்டுக்கோட்டை, அரசு பிளாசா அரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
தஞ்சையில் 11.08.2015 திகதி நடைபெற்ற விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டில் பங்கேற்ற திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர், தோழர் கொளத்தூர் மணி,தி.மு.கவின் செய்தி தொடர்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கேஎ.எஸ். இலங்கோவன், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் எஸ்.திநாவுகரசர்,தமிழ் மாநில காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர். ரெங்கராஜன், தே.மு.தி.கவின் மயிலாடுதுறை சட்ட மன்ற உறுப்பினர் பால அருட்செல்வன் ஆகியோரும், பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்களும் உரையாற்றினர். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஆதரித்தும், விளக்கியும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றியதைத் தொடர்ந்து, அந்த மாநாட்டின் நெறியாளரும், அந்த இயக்கத்தின் தலைவருமான தோழர் பி.ஆர்.பாண்டியன், அந்த இயக்கத்தின் கொடியினை அறிமுகப்படுத்துகின்ற பொறுப்பினை தலைவர் கொளத்தூர் மணி அவர்களிடம் வழங்கினார். அப்போது தோழர் பி.ஆர்.பாண்டியன் , ” விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டிற்கு எல்லா கட்சிகளுடைய தலைவர்களையும் அழைத்திருந்தேன். அவர்களில் பெரும்பாலோர் வந்திருந்தனர். வர இயலாதவர்கள் தங்களின் பிரதிநிதிகளை அனுப்பி பங்கேற்றனர். அவர்களை எல்லாம் விட்டுவிட்டு...