ஜாதி வெறிக்கு எதிராக மயிலாடுதுறையில் முற்றுகைப் போராட்டம்: தோழர்கள் கைது

நாகை மாவட்டம் குத்தாலம், வழுவூர் ஊராட்சி இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான வீரட்டேஸ்வரர் கோயில் குளத்தில் நீர் எடுத்து கோயில் விழா நடத்த முயன்ற திருநாள்கொண்டச்சேரி தலித் மக்களின் வழிபாட்டு உரிமைக்கு எதிராக செயல்படும் சில ஆதிக்கசாதியினர் மீது சட்ட நடவடிக்கையும், தலித் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கவும், அனைத்து மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தியும் 14.9.2015 அன்று மயிலாடுதுறை சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் சாதி மறுப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்றது. முற்றுகைப் போராட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மகாலிங்கம், மாவட்ட அமைப் பாளர் அன்பரசன், தலைமை செயற்குழு உறுப்பினர் இளையராஜா, நாஞ்சில் சங்கர், தமிழ் வேலன், இராஜராஜன், நடராஜ், ரமேஷ், இயற்கை, ஜாகிர், விஜய ராகவன், உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு கைதாயினர். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, விடுதலை தமிழ் புலிகள், தமிழர் உரிமை இயக்கம், சி.பி.ஐ.எம்.எல். விடுதலை, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம், பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டு 85 பேர் கைது செய்யபட்டு மாலையில் விடுவிக்கபட்டனர்.

பெரியார் முழக்கம் 17092015 இதழ்

You may also like...

Leave a Reply