விடை பெற்றார் கலைஞர் !
விடை பெற்றார் ! கலைஞரால் வளர்க்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் – திராவிட இயக்கத்தின் கொள்கைக் கோட்டையாகட்டும் ! அதுவே கலைஞருக்கு செலுத்தும் நிலைத்த அஞ்சலி! திராவிடர் விடுதலைக் கழகத்தின் வீரவணக்கம்!
விடை பெற்றார் ! கலைஞரால் வளர்க்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் – திராவிட இயக்கத்தின் கொள்கைக் கோட்டையாகட்டும் ! அதுவே கலைஞருக்கு செலுத்தும் நிலைத்த அஞ்சலி! திராவிடர் விடுதலைக் கழகத்தின் வீரவணக்கம்!
திராவிடர் விடுதலைக் கழகத்தின் கல்வி உரிமை பரப்புரைப் பயணம் ஆகஸ்டு 20இல் தொடங்கி ஆக. 26இல் முடிவடைகிறது. சென்னை, குடியாத்தம், சங்கரன் கோயில், மேட்டூர், மயிலாடுதுறை, திருப்பூர் ஆகிய 6 ஊர்களிலிருந்து பயணக் குழுக்கள் தனித் தனியாகப் புறப்பட்டு பெரம்பூர் வந்து சேருகின்றன. பெரம் பூரில் பயண நிறைவு விழா மாநாடாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. நீதிக் கட்சி ஆட்சிக் காலத்தில் தொடங்கிய தமிழ் நாட்டின் ஒடுக்கப்பட் டோருக்கான கல்வி வேலை வாய்ப்பு எனும் சமூக நீதித் திட்டங்கள் தமிழகத்தை இந்தியா விலேயே முதன்மை மாநிலமாகக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழகக் கல்வி உரிமையில் நடுவண் கட்சியின் குறுக்கீடுகள் தமிழகம் கட்டி எழுப்பிய சமூக நீதிக் கட்டமைப்பைக் குலைத்து வருவ தோடு வேலை வாய்ப்புகளிலும் வட மாநிலத்தவரைக் குவித்து வருகிறது. இதை மக்களிடம் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை உருவாக்குவதே இப் பயணத்தின் நோக்கம். மொத்தம் 140 ஊர்களில் பரப்புரை நடக்கிறது....
அஞ்சல் வழியாக ‘நிமிர்வோம்’ இதழ் பெற வேண்டியவர்கள் ஆண்டுக் கட்டணம் ரூ.300 செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி : ‘நிமிர்வோம்’ 29, பத்திரிகையாளர் குடியிருப்பு திருவான்மியூர், சென்னை – 600 041. வங்கி வழியாக அனுப்ப: ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ கரூர் வைஸ்யா வங்கி அடையாறு கிளை நடப்புக் கணக்கு (Current A/C) வங்கிக் கணக்கு எண் : 1257115000002041 IFC Code : KVBL0001257 தொடர்புக்கு: 7299230363
”திராவிட விழுதுகள்” கருத்தரங்கம். தோழர் கொளத்தூர் மணி அவர்கள் ”ஆரிய சூழ்ச்சியும் – திராவிட எழுச்சியும்” எனும் தலைப்பிலும், புலவர் செந்தலை ந.கவுதமன் அவர்கள் ”இன்றைய சூழலில் திராவிடத்தின் தேவை” எனும் தலைப்பிலும் உரையாற்றுகிறார்கள். நாள் : 19.08.2018 ஞாயிற்றுக்கிழமை. நேரம் : மாலை 5 மணிக்கு இடம்- : அண்ணாமலை அரங்கம்,சாந்தி திரையரங்கம் அருகில், கோவை.
ஜனநாயக காப்புப் பொதுக்கூட்டம் ! பேச்சுரிமை,கருத்துரிமை உள்ளிட்ட ஜனநாயக உரிமைகள் மீதான அடக்குமுறையை எதிர்த்து…… நாள் : 03.08.2018,வெள்ளி நேரம் : மாலை 4.00 மணி இடம் : பெரியார் சுடர் காந்தி சிலை,காஞ்சிபுரம். கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி,விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தோழர் பண்ருட்டி வேல் முருகன்,மதிமுக து.பொ.செயலாளர் தோழர் மல்லை சத்யா உள்ளிட்ட தோழர்கள் உரையாற்றுகிறார்கள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : தன்னாட்சித் தமிழகம் அமைப்பு.
தோழர் அல்லி – தோழர் இரமேசு பெரியார் இணையரின் மகன் A.R..அம்பேத்கரின் முதல் பிறந்த நாள் விழா ! கழகத்தலைவர் அவர்கள் கலந்து கொண்டு ”பெரியார் பிற்படுத்தப்ப்ட்டவர்களுக்கான தலைவர் என்பது சரியா?” எனும் தலைப்பில் உரையாற்றுகிறார். மேலும் புத்தர் கலைக்குழு மணிமாறன் மகிழினி,சங்கர் சமூகநீதி அறக்கட்டளை தோழர் கவுசல்யா,ஊடகவியலாளர் தோழர் ஆசீப் ஆகியோரும் உரையாற்றுகிறார்கள். நாள் : 05.08.2018 ஞாயிறு நேரம் : மாலை 5.00 மணி. இடம் : இக்சா மையம்,பாந்தியன் சாலை,அருங்காட்சியகம் எதிரில்,எழும்பூர்,சென்னை.
ஆகஸ்ட் 1ல், தலைமைச் செயலகம் முற்றுகைப்போராட்டம் ! ஜனநாயக போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பை கண்டித்தும், போராடுவோர் மீது போடப்படும் பொய் வழக்குகளை நிறுத்த வலியுறுத்தியும், 8 வழிச்சாலை பிரச்சனையில் போராடும் மக்கள்,விவசாயிகள் உணர்வுகளை மதிக்க வலியுறுத்தியும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு நீதி கோரியும் தலைமைச் செயலகம் முற்றுகைப்போராட்டம் ! நாள் : 01.08.2018 புதன் கிழமை. நேரம் : மாலை 3.00 மணி. இடம் : சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில். பல்வேறு அரசியல்கட்சிகள்,சமுதாய அமைப்புகள், ஜனநாயக சக்திகள் பங்கேற்கும் இந்த முற்றுகைப் போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் பங்கேற்கிறது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : தமிழர் வாழ்வுரிமைக்கூட்டமைப்பு.
கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது. நாள் : 31.07.2018 செவ்வாய்க்கிழமை. நேரம் : மாலை 3.00 மணி. இடம் : காவேரிப்பட்டிணம் பேருந்து நிலையம். கிருட்டிணகிரி மாவட்டம். கிருட்டிணகிரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக ஒன்றிய அமைப்பாளர் தோழர் பிரபு அவர்கள் 17.07.2018 அன்று படுகொலை செய்யப்பட்டு காவேரிப்பட்டிணம் சந்தாபுரம் மேம்பாலம் கீழே உடல் கண்டெடுக்கப்பட்டது.இந்தக் கொலை குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டும் இதுவரை கொலைக் குற்றவாளிகளை கைது செய்வதில் காவல்துறை மெத்தனப்போக்குடன் நடந்து கொள்கிறது.எனவே காவல்துறை இந்த கொலை வழக்கில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தொடர்புக்கு : தோழர் குமார், மாவட்டத்தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம், கிருட்டிணகிரி மாவட்டம். 9585887865.
திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி அவர்கள், கலைஞர் உடல்நலம் பெற பிரார்த்தனை போன்ற மூடநம்பிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்ற வேண்டுகோளை விடுத்திருக்கிறார். சரியான நேரத்தில் விடுக்கப்பட்டn வண்டுகோள் இது. வாழ்நாள் முழுதும் நாத்திகராக வாழ்ந்து வரும் ஒரு தலைவருக்காக இப்படி பிரார்த்தனை போன்ற மூடநம்பிக்கைகளில் ஈடுபடுவது கலைஞரின் கொள்கைக்கு இழைக்கும் துரோகமும் அவமதிப்பும் ஆகும். சில பார்ப்பன ஊடகங்கள், இப்படிப்பட்ட ‘பிரார்த்தனை’கள் நடத்தப்பட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு செய்திகளை உருவாக்கி வருகின்றன. குறிப்பாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு திருவாரூரில் கலைஞர் படித்த பள்ளியின் மாணவர்களும் ஆசிரியர்களும் பள்ளி மைதானத்திலேயே (கோயிலில் அல்ல) ‘கூட்டு பிரார்த்தனை’யை அவர்கள் நம்பிக்கை அடிப்படையில் நடத்தியதை வெளியிட்டு தமிழகம் முழுதும் தி.மு.க.வினர் வழிபாடுகளை நடத்துவதாக ஒரு கற்பனையை செய்தியாக உருவாக்கிப் பரவ விட்டது. இந்து மக்கள் கட்சியைச் சார்ந்த அர்ஜூன் சம்பத் என்பவர் கலைஞரை நலம் விசாரிக்கச் செல்வதாகக் கூறி கோயில் பிரசாதங்களை எடுத்துப்...
75 ஆண்டுகால பொது வாழ்க்கை; 50 ஆண்டு காலம் ஒரு அரசியல் இயக்கத்துக்குத் தலைமை என்பது வரலாற்றில் எப்போதாவது நிகழும் ஒரு அபூர்வ நிகழ்வு. இந்து பார்ப்பனியம் கட்டமைத்த ஜாதிய ஒடுக்குமுறை சமூக அமைப்பில் கடைக்கோடிப் பிரிவில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு சமூகத்தின் இளைஞர் – சமூகத் தடைகளைக் கடந்து அரசியல் அதிகாரத்தை எட்டிப் பிடித்ததே மகத்தான சாதனைதான். அந்த சாதனைக்குப் பெயர் கலைஞர்! இதையே தனது சமூகப் புரட்சித் தொண்டுக்குக் கிடைத்த மகத்தான வெற்றி என்று பூரித்தவர் பெரியார். அந்த சாதனையை சமூகத்துக்குப் பிரகடனப்படுத்தவே கலைஞருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற பெரியார், அதற்கு தனது சொந்த நிதியை வழங்க முன் வந்தார். இது சூத்திரர்களால் – சூத்திரர்களுக்காக நடக்கும் ஆட்சி என்று சட்டமன்றத்திலே ஒரு முதல்வராக கலைஞர் பிரகடனம் செய்தபோது, அது ‘சூத்திர இழிவு’ ஒழிப்புக்கான பெரியாரின் களப்போருக்கு சூட்டப்பட்ட மகுடம் என்றே சொல்ல வேண்டும். அதே சூத்திர இழிவு...
திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், தலித் விடுதலைக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதிரி தமிழர் பேரவை, தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய அமைப்புகள் சத்துணவு சமையலர் பாப்பாள் மீதான தீண்டாமைக்கு எதிராகக் களமிறங்கின. திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே திருமலைக்கவுண்டம் பாளை யத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. அங்கு அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பாப்பாள் என்ற பெண் கடந்த திங்கள் கிழமை சத்துணவு திட்டத்தின்கீழ் சமையல் செய்பவராக பணியில் சேர்ந்தார். இந்த தகவலை அறிந்த அந்த ஊரைச் சேர்ந்த ஒரு பிரிவினர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பாப்பாள் சமையல் செய்யக் கூடாது என்று கூறி, பள்ளியை திறக்கவிடாமல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தகவல் அறிந்து வந்த ஊராட்சி ஒன்றிய ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, பாப்பாளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். ஆனால் இந்த உத்தரவிற்கு பாப்பாள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து...
சென்னை அயனாவரம் பகுதியில் 11 வயதுள்ள ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமி 17 மனித மிருகங்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டிருக் கிறார்கள். விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நெஞ்சைப் பதறச் செய்யும் கொடுமையை செய்த அனைவரும் மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இப்படி ஒரு கொடூர சம்பவம் மக்கள் மனதில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ள சூழலில் வதந்திகளை பரப்பி அதன் மூலம் இலாபம் அடைவதையே தங்கள் வேலைத் திட்டமாக வைத்துள்ள காவி வெறி கும்பல் திராவிடர் விடுதலைக் கழகத்தை சார்ந்த ஒருவரும் இந்த குற்றத்தை செய்துள்ள கும்பவில் ஒருவர் என “பால சுப்ரமணியன்” எனும் பெயர் உள்ள முகநூல் பக்கத்தில் பதிவிட் டுள்ளார்கள். இந்தப் படத்தில் உள்ள நபருக்கும் எமது திராவிடர் விடுதலைக் கழகத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. எங்கள் கழகத் தோழருக்கு இவர் யார் என்றே தெரியவில்லை. இவர் கருப்புச்சட்டை அணிந்திருப்பது போன்று காட்டி...
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகில் அக்ராவரம் கிராமத்தில் உப்ரபள்ளி ஆற்றின் அருகில் ஊரின் தெருவில் சென்றதற்காக 22.07.2018 அன்று 40 பேர் கொண்ட ஜாதிவெறி கும்பல் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஜெயபிரகாஷ், ஜெயச்சந்திரன், மணிகண்டன் ஆகியோர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியது. களத்தில் இறங்கிய கழகத் தோழர்கள் காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி செய்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பெரியார் முழக்கம் 26072018 இதழ்
தாழ்த்தப்பட்ட – பழங்குடி இன மக்களாக கருதப்படுகின்ற மக்களின் உரிமைக்கு ஆதரவாக உள்ள வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உள்ள விதிமுறைகளை தளர்வடையச் செய்து அவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிக்கின்ற விதமாக தீர்ப்பு வழங்கியுள்ள உச்சநீதிமன்றத்தைக் கண்டித்தும் இந்த தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடு செய்யக் கோரியும் 2.7.2018 அன்று திராவிடர் விடுதலைக் கழகம், மார்க்சிஸ்ட் (இந்திய) கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சின்னசேலத்தில் தொடர்வண்டி (இரயில்) மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக விழுப்புரம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தளர்வடையச் செய்கின்ற புதிய சட்டத்திருத்தத்தால் ஏற்படுகின்ற தீமைகள் குறித்து கொசப்பாடி, பூட்டை, அரசம்பட்டு, செந்தமிழ்பட்டு, சங்கராபுரம், வன்னஞ்சூர், அத்தியூர், கொளத்தூர், அரியலூர், பாக்கம், தொழுவந்தாங்கள், கடுவனூர் ஆகிய பகுதி மக்களிடம் சென்று விளக்கிக் கூறி பிரச்சாரம் செய்தனர். பெரியார் முழக்கம் 26072018 இதழ்
மந்தவெளி சென்ட் மேரிஸ் பாலத்திற்கு அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08.07.2018) அன்று மலக்குழியில் இறங்கி எந்த ஒரு பாதுகாப்பு கருவிகளும் இல்லாமல் இரண்டு பேர் வேலை பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்ட மயிலாப்பூர் பகுதித் தலைவர் இராவணன், பகுதி செயலாளர் மாரி மற்றும் மயிலாப்பூர் பகுதி கழகத் தோழர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி வெளியே மீட்டுள்ளனர். மேலும், மலக்குழியில் மனிதர்களை இறக்கி வேலை வாங்கக் கூடாது என்று அவர்களை வேலைக்கு அனுப்பிய ஒப்பந்ததாரர்களை எச்சரித்து வந்துள்ளனர். இப்பகுதியில் இதுபோன்ற சம்பவத்தால் ஏற்கெனவே இரண்டு பேர் இறந்துள்ள நிலையில், பொறுப்பற்ற முறையில் மாநகராட்சி நிர்வாகம் மீண்டும் மீண்டும் மனிதர்களை மலக்குழியில் இறக்கி வேலை செய்ய கட்டாயப் படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்தப் பிரச்சினையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு மலக்குழியில் மனிதர்களை இறக்குவதை முற்றிலுமாக தடுத்த வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து சென்னை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க மயிலாப்பூர் பகுதி கழகத் தோழர்கள் திட்டமிட்டுள்ளனர். பெரியார் முழக்கம்...
கையால் மலம் அள்ளத் தடை மற்றும் மறுவாழ்விற்கான சட்டம்-2015ஐ நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும், கையால் மலம் அள்ளும் அவல நிலையைப் போக்க, அதனால் ஏற்படும் மலக்குழி மரணங்களைத் தடுக்கவும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் விருதுநகர் மாவட்டத்தில் சூலை 9, 2018 அன்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காலை 10 மணி அளவில் ஆதித் தமிழர் பேரவையின் மாவட்டச் செயலாளர் பூவை ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. ஆதித் தமிழர் பேரவை, அருந்ததியர் சனநாயக முன்னணி, தமிழ்ப் புலிகள் கட்சி, திராவிடர் கழகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஏஐடியூசி ஆகிய அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். திராவிடர் விடுதலைக் கழக சார்பில் விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அ.செந்தில் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 26072018 இதழ்
திராவிடர் விடுதலைக் கழகம் தென்சென்னை மாவட்டம், திருவான்மியூர் பகுதியில் கடந்த 18.07.2018 (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு “சமூக நீதியின் சரித்திரம்” பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் கூட்டம் ந.விவேக் (தென்சென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) தலைமையில் நடைபெற்றது. தோழர்கள் மு.தமிழ்தாசன், சே.கந்தன், பா.இராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரா.வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார். அதைத் தொடர்ந்து கூட்டத்தின் தொடக்கமாக ‘யாழ்’ பறையிசை முழக்கத்தோடு, வீதி நாடகங்களை நடத்தினர். ந. அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்) மற்றும் இரா. உமாபதி (தென்சென்னை மாவட்டச் செயலாளர்) ஆகியோர் காமராசரின் வரலாற்றை குறித்து எடுத்துரைத்தனர். சிறப்புரையாற்றிய பேராசிரியர் சுந்தரவள்ளி, காமராசரின் சமூகநீதி வரலாற்றை நினைவு கூர்ந்தார். தொடர்ந்து பெரம்பலூர் துரை தாமோதரனின் ‘மந்திரமல்ல.! தந்திரமே!’ அறிவியல் விளக்க நிகழ்ச்சியை பகுதி மக்களிடையே ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நிகழ்த்தினார். பகுதி மக்களும் அறிவியல் விளக்கத்தை ஆர்வமுடன் கவனித்தனர். பகுதிவாழ் பெண்கள் பெருமளவில் திரண்டு, முன்வரிசையில் அமர்ந்து நிகழ்ச்சிகளைக் கேட்டனர். இறுதியாக...
திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு 17.7.2018 அன்று சென்னையில் தலைமைக் கழகத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் கூடியது. தலைமைக் குழு உறுப்பினர்கள் ஈரோடு இரத்தினசாமி, திருப்பூர் துரைசாமி, பால் பிரபாகரன், கோபி. இளங்கோவன், தபசி குமரன், இரா. உமாபதி, அன்பு தனசேகரன், மேட்டூர் சக்தி, அய்யனார், சூலூர் பன்னீர் செல்வம், பாரி சிவக்குமார், பரிமளராசன் ஆகியோர் கலந்து கொண்டனர். கழக செயல்பாடுகள், கட்டமைப்பு நிதி, கழக அமைப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. ‘தமிழர் கல்வி உரிமைப் பயணம்’, பரப்புரை இயக்கத்தை ஆகஸ்டு 20 தொடங்கி 26இல் நிறைவு செய்வது என முடிவு செய்யப்பட்டது. குடியாத்தம், கீழப்பாவூர், மேட்டூர், திருப்பூர், சென்னை, மயிலாடுதுறை ஆகிய ஊர்களிலிருந்து பரப்புரைக் குழு பெரம்பலூர் நோக்கிப் புறப்படும். பெரம்பலூரில் ஆக.26இல் மாநாடு நிறைவு விழா நடைபெறும் என்று முடிவு எடுக்கப்பட்டது. பெரியார் முழக்கம் 26072018 இதழ்
‘பூவுலகின் நண்பர்கள்’ சென்னையில் நடத்திய கருத்தரங்கில் பேசிய ஆய்வாளர்கள் எட்டு வழிச் சாலை சட்டத்துக்கும் மக்களுக்கும் எதிரானது என்பதை விளக்கினர். ‘பூவுலகின் நண்பர்கள்’ சார்பில் ‘புதிய எட்டு வழிச் சாலை’, ‘அறிவியல் – சூழலியல் சட்டரீதியான பார்வை’ என்ற தலைப்பில் 22.7.2018 மாலை 5.30 மணியளவில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்கத்தில் ஆய்வரங்கம் நடந்தது. பேராசிரியர் கே.பி.சுப்ரமணியன் (ஓய்வு – நகர கட்டமைப்பு பொறியியல் துறை, அண்ணா பல்கலைக் கழகம், பேராசிரியர் ஜனகராஜன் (தலைவர், தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனம்), வெற்றிச் செல்வன் (வழக்கறிஞர்) ஆகியோர் பங்கேற்றுப் பேசினார்கள். பொறியாளர் சுந்தர்ராஜன் (பூவுலகின் நண்பர்கள்) நிகழ்வை ஒருங்கிணைத்தார். பொறியாளர் சுந்தர்ராஜன் தனது தொடக்க உரையில் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத் துக்கு அனுமதிக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் இந்த எட்டு வழிச் சாலை பற்றிய எந்தக்...
திருப்பூர் – கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் உடுமலை திருமூர்த்தி மலை படகுத் துறையில், 2017 ஜூன் 11, 12 தேதிகளில் நடத்திய பெரியார் பயிலரங்கில் வினோதினி – மணி ஆகியோர் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டனர். முதலாம் ஆண்டு மணவிழாவின் மகிழ்ச்சியாக பெரியாரியல் பயிலரங்கை நடத்த விரும்பி அதற்கு நிதி உதவி அளிக்க வினோதினி முன் வந்தார். ஏற்கனவே ஜாதி மறுப்பு திருமணம்செய்து கொண்ட கோவை கழக இணையர்கள் நிர்மல் – இசைமதி மணவிழா நாளும் ஏறத்தாழ இதை ஒட்டியே வருவதால் தோழர் நிர்மல், பயிலரங்கத்துக்கு தங்கள் மணவிழா மகிழ்வாக நிதி உதவி செய்ய முன் வந்தார். உடனே பயிலரங்கம் ஏற்பாடானது. பொள்ளாச்சி கழகத் தோழர் வெள்ளியங்கிரி இத் தகவலை பலத்த கரவொலிக்கிடையே பயிலரங்கில் அறிவித்தார். கழகத் தோழர் கோவை நிர்மல், “இனி ஒவ்வொரு ஆண்டும் மணவிழா நாளில் இத்தகைய பயிலரங்கை வினோத்-மணி இணையருடன் இணைந்து நடத்துவோம்”...
பொள்ளாச்சி பகுதி திராவிடர் விடுதலைக் கழக சார்பில் பொள்ளாச்சி அருகே உள்ள நஞ்சை கவுண்டன்புதூரில் அருள்ஜோதி உணவு விடுதி அரங்கில் ஒரு நாள் பெரியாரியல் பயிலரங்கம் ஜூலை 15, 2018 அன்று நடந்தது. 84 பேர் பயிலரங்கில் பங்கேற்றார்கள். இதில் 10 பேர் பெண்கள். பயிற்சியாளர்கள் அனைவரும் புதிதாக பெரியாரியலை நோக்கி வரும் இளைஞர்கள். பயிலரங்கைத் தொடங்கி வைத்து, மூத்த கழகத் தோழர் மடத்துக்குளம் மோகன் உரையாற்றினார். தொடர்ந்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ‘திராவிடர் இயக்க வரலாறு’ என்ற தலைப்பில் வகுப்பு எடுத்தார். 2 மணி நேரம் வகுப்பு நடந்தது. மதிய உணவைத் தொடர்ந்து கழகப் பொறுப்பாளர் வெள்ளியங்கிரி, ‘பயிற்சி முகாம் நோக்கம்’ குறித்து விரிவாகப் பேசினார். தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘பெரியார்-அம்பேத்கர் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் இரண்டு மணி நேரம் வகுப்பு எடுத்தார். சுல்லிமேடு காடுப் பகுதியிலிருந்து பெரியாரியல் நோக்கி வந்துள்ள பழங்குடி சமூகத்தைச் சார்ந்த...
‘விடியல் பதிப்பகம்’, மலிவுப் பதிப்பாக வெளியிட்ட பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளைக் கொண்ட நூல் ‘பெரியார் – இன்றும், என்றும்’. 1000 பக்கங்களைக் கொண்ட இந்த நூலை மலிவுப் பதிப்பாக ரூ.300க்கு ‘விடியல் பதிப்பகம்’ வெளியிட்டது. பல்லாயிரக்கணக்கில் இளைஞர்கள் இந்த நூலை வாங்கினார்கள். இந்த நூலில் பெரியார் கட்டுரைகளை பார்வையற்றோர் அறியும் நோக்கத்தில் ஒலி வடிவில் பதிவேற்றப்பட்டு ஒலிப் புத்தகமாக (குறுவட்டு) கடந்த ஜூலை 14ஆம் தேதி பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவை சார்பில் வெளியிடப் பட்டது. 86 மணி நேரம் பெரியார் எழுத்துகள் குரலாக ஒலிக்கிறது. பெண்கள் பலரும் தாமாக ஆர்வத்துடன் முன் வந்து பெரியார் எழுத்துகளை தங்கள் குரலில் பதிவு செய்திருப்பது குறிப்பிடத் தக்கது. சென்னை எத்திராஜ் பெண்கள் கல்லூரி அரங்கில் காலை 10 மணியளவில் நடந்த இந்த நிகழ்வில் பார்வையற்ற தோழர்களோடு 300 கல்லூரி மாணவிகளும் பங்கேற்றனர். கல்லூரி முதல்வரும், துணை முதல்வரும் கலந்து கொண்டனர். ‘ஒலிப்பதிவு குறுவட்டு’வுக்கு...
திராவிடர் விடுதலைக் கழகம் தென்சென்னை மாவட்டம், திருவான்மியூர் பகுதியில் கடந்த 18.07.2018 (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு…. “சமூக நீதியின் சரித்திரம்” பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் கூட்டம் தோழர்.ந.விவேக்(தென்சென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) தலைமையில் நடைபெற்றது. தோழர்கள் மு.தமிழ்தாசன், சே.கந்தன், பா.இராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோழர்.இரா.வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார். அதைத் தொடர்ந்து கூட்டத்தின் தொடக்கமாக “யாழ்” பறையிசை முழக்கத்தோடு, வீதி நாடகங்களை நடத்தினர். தோழர்.ந.அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்) மற்றும் தோழர்.இரா.உமாபதி (தென்சென்னை மாவட்டச் செயலாளர்) ஆகியோர் காமராசரின் வரலாற்றை குறித்து எடுத்துரைத்தார். பின்பு இந்த கூட்டத்திற்கு சிறப்புரையாற்ற பேராசிரியர்.சுந்தரவள்ளி அவர்கள் காமராசரின் சமூகநீதி வரலாற்றை நினைவு கூர்ந்து பகுதி மக்களிடையே எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார். தொடர்ச்சியாக, பெரம்பலூர் துரை தாமோதரனின் மந்திரமல்ல.! தந்திரமே.! அறிவியல் விளக்க நிகழ்ச்சியை பகுதி மக்களிடையே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிகழ்த்தினார். பகுதி மக்களும் அறிவியல் விளக்கத்தை ஆர்வமுடன் கவனித்தனர். இறுதியாக தோழர்.மா.தேன்ராஜ்(திருவான்மியூர் பகுதி...
முகநூலில் கழகத்தின் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக சென்னை, மாநகர காவல் ஆணையாளரிடம் புகார்.! 19.07.2018 மாலை 5 மணிக்கு கழக தென்சென்னை மாவட்ட தலைவர் தோழர்.வேழவேந்தன், வடசென்னை மாவட்டச் செயலாளர் தோழர்.செந்தில் FDL மற்றும் கழகத் தோழர்கள் சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தனர். சென்னை அயனாவரம் பகுதியில் 11 வயதுள்ள ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமியை 17 பேர் பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் திராவிடர் விடுதலைக் கழகத்தை சார்ந்த ஒருவரும் இருப்பதாக பொய்யான ஒரு செய்தி சமூக வலைத்தளத்தில் பரவப்பட்டு வந்தது. கழகத்தின் மீது அவதூறு பரப்பும் தீயுள்நோக்கத்தோடு அவதூறு பரப்பும் வீரமணி என்பவரால் உருவாக்கப்பட்ட செய்தியினை பாலசுப்பிரமணியம், ராமலிங்கம், வெங்கட்ராஜூ மற்றும் பலரால் பகிரப்பட்டுள்ளது. குற்றவாளிக்கும் திராவிடர் விடுதலைக் கழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில் வேண்டுமென்றே கழகத்திற்கு கெட்ட...
காமராஜர் பிறந்தநாள் விழா – ஈரோடு ! ஈரோடு தெற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 15.07.2018 ஞாயிறு மாலை 6:30 மணியளவில் சித்தோடு கொங்கம்பாளையத்தில் காமராஜரின் பிறந்தநாள் விழா எழுச்சியோடு கொண்டாடப்பட்டது. இவ்விழா சண்முகப் பிரியன் தலைமையில், தோழர் இளங்கோ முன்னிலையிலும் நடைபெற்றது. மாநகரத் தலைவர் திருமுருகன் வரவேற்புரையாற்ற , தமிழ்நாடு அறிவியல் மன்ற தோழர் வீரா கார்த்தி மந்திரமல்ல தந்திரமே என்னும் அறிவியல் நிகழ்ச்சி நடத்துக் காட்டினார். இறுதியாக கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி சிறப்புரையாற்றினார். தோழர் கிருஷ்ணமூர்த்தி நன்றியுரை கூறினார். நிகழ்வில் கலந்துகொண்ட தோழர்கள் அமைப்பு செயலாளர் இரத்தினசாமி, குமார், இசைக்கதிர், பிரபு சி.எம். நகர், கிருஷ்ணன், பிரபு ரங்கம்பாளையம், சவுந்தர், கௌதம், ஜெயபாரதி,ஜெகன் கோபி, கமலக்கண்ணன், யாழ் எழிலன்
11 மணி நேரம் 40 பெண்கள் உட்பட 100 பேர் 3 முறை சாலை மறியல் சத்துணவு சமையலர் பாப்பாள் அவர்களின் தளராத போராட்டம் திருப்பூர் அவிநாசி வட்டம் சேவூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை ஜாதி மனநோயாளிகளுக்கு முதல் அடி திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் சமையல் செய்பவராக பணியாற்றி வரும் பெண் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் சமையல் செய்யக்கூடாது என்று கூறி பள்ளியை திறக்க விடாமல் உள்ளூரை சேர்ந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே திருமலைக்கவுண்டம்பாளையத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. அங்கு அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த பாப்பாள் என்ற பெண் கடந்த திங்கள் கிழமை சத்துணவு திட்டத்தின்கீழ் சமையல் செய்பவராக பணியில் சேர்ந்தார். இந்த தகவலை அறிந்த அந்த ஊரைச் சேர்ந்த ஒரு பிரிவினர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பாப்பாள் சமையல் செய்யக் கூடாது என்று கூறி, பள்ளியை திறக்கவிடாமல் முற்றுகை...
20.07.2018 மாலை 5 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக சென்னை, மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கழகத்தின் மீது அவதூறு பரப்பும் தீயுள்நோக்கத்தோடு அவதூறு பரப்பும் வீரமணி என்பவரால் உருவாக்கப்பட்ட செய்தியினை பாலசுப்பிரமணியம், ராமலிங்கம், வெங்கட்ராஜூ மற்றும் பலரால் பகிரப்பட்டுள்ளது. குற்றவாளிக்கும் திராவிடர் விடுதலைக் கழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில் வேண்டுமென்றே கழகத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் உள்நோக்கத்தோடு அவதூறு பரப்பிய வீரமணியையும், அவருக்கு உடந்தையாக செய்தியினை வெளியிட்டு பரப்பிய பாலசுப்பிரமணியம், ராமலிங்கம், வெங்கட்ராஜூ போன்றோரின் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது திராவிடர் விடுதலைக் கழகத்தின் மீது மீண்டும் தவறான செய்தியை மேலும் யாராவது பரப்பும் நோக்கத்தோடு செயல்படுவார்களானால் அவர்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடரும் என தெரிவித்துக் கொள்கிறோம் – தபசி குமரன், தலைமை நிலையச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்
”மறுமண வாழ்விணையேற்பு நிகழ்வு” கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையேற்று நடத்திவைக்கிறார். வாழ்விணையர்கள் : தோழர் சுரேஷ் – தோழர் ஷாலினி நாள் : 22.07.2018 ஞாயிற்றுக்கிழமை நேரம் : காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை. இடம் : அண்ணல் அம்பேத்கர் திருமண கூடம்,(S.B.I வங்கி அருகில்)குடியாத்தம்,வேலூர் மாவட்டம். இந்நிகழ்வில் ”நம்மை சூழும் பேராபத்துகளும்,அதனை வீழத்தும் அம்பேத்காரிய பெரியாரிய தத்துவங்களும்”எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. தோழர் எவிடன்ஸ் கதிர்,தோழர் உடுமலை கவுசல்யா,தோழர் கோவிந்தராஜ்,தோழர் பால்.பிரபாகரன் உள்ளிட்ட தோழர்கள் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
திராவிடர் விடுதலைக் கழகத்தின் செய்திகளை புதிய தகவல் தொழில்நுட்பத்தின் வாயிலாக அனைவரையும் சென்றடைய இணையதளம் dvkperiyar.com மற்றும் முகநூல் பக்கம் facebook.com/dvk12 ஆகியவற்றோடு புதியதாக செயலி DVK Periyar என்ற பெயரில் இன்று திருப்பூர் கல்விவள்ளல் காமராசர் பிறந்தநாள் விழாவில் அறிமுகப்படுத்தப் பட்டது கழக தலைவர் வெளியிட்டு கழக பொதுச்செயலாளர் பெற்றுக்கொண்டார் இதை கூகுள் ப்ளெ ஸ்டோரில் தரவிறக்கி கொள்ளலாம். ஆண்ட்ராய்ட் கைபேசிகளில் இயங்கும் இந்த செயலி (Application) திவிகவின் செய்திகளை உடனுக்குடன் அறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது தரவிறக்க உரலி https://play.google.com/store/apps/details?id=com.dvkperiyar.app
கல்வி வள்ளல் காமராஜர் பிறந்த நாள் விழா! 15.07.2018 அன்று, திருப்பூரில் கல்வி வள்ளல் காமராஜர் பிறந்த நாள் விழா, பொதுக்கூட்டம். ‘விளையாட்டு விழா – நிமிர்வு பறை முழக்கம்’ நிகழ்ச்சிகளுடன் . நாள் : 15.07.2018 ஞாயிறு நேரம் : மாலை 6.00 மணி. இடம்: இராயபுரம் திருவள்ளுவர் தெரு, திருப்பூர் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமை ஜூலை 15 அன்று, பொள்ளாச்சியில் ”பெரியாரியல் பயிலரங்கம்.” கழகத்தலைவர்,கழக பொதுச்செயலாளர் பங்கேற்கிறார்கள். நாள் : 15-07-2018,ஞாயிற்றுக்கிழமை நேரம் : காலை 10 மணி இடம் : அருள்ஜோதி உணவக அரங்கம், நஞ்சேகவுண்டன் புதூர்,பொள்ளாச்சி. #பெரியார்_அம்பேத்கர்_இன்றும்_தேவை_ஏன்? – ‘தோழர் கொளத்தூர் மணி’ #திராவிடர்_இயக்க_வரலாறு – தோழர் விடுதலை இராசேந்திரன் #பெரியாரும்_பகுத்தறிவும் – ‘தோழர் மடத்துக்குளம் மோகன்’ #பெரியாரியல்_பயிலரங்கம்_ஏன்..? – ‘தோழர் வெள்ளிங்கிரி’ வாருங்கள் தோழர்களே ! தொடர்புக்கு : 9842487766,9976086033
“சமூக நீதியின் சரித்திரம்” பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் கூட்டம் வரும் 18.07.2018 மாலை 6 மணிக்கு திருவான்மியூர், லட்சுமிபுரம் காந்திசிலை அருகில்…. “யாழ்” குழுவினரின் பறையிசை, வீதி நாடகம் மற்றும் *பெரம்பலூர் தாமோதரனின் மந்திரமல்ல தந்திரமே.! அறிவியல் நிகழ்ச்சி நடைபெறும்…. சிறப்புரை : *பேராசிரியர்.சுந்தரவள்ளி* *தோழர்.தபசி.குமரன்* தலைமை நிலையச் செயலாளர் *தோழர்.கு.அன்புதனசேகர்* தலைமைக் செயற்குழு உறுப்பினர் *தோழர்.ந.அய்யனார்* தலைமைக் குழு உறுப்பினர் *தோழர்.மா.வேழவேந்தன்* தென்சென்னை மாவட்டத் தலைவர் *தோழர்.இரா.உமாபதி* தென்சென்னை மாவட்டச் செயலாளர் *தோழர்.கரு.அண்ணாமலை* திவிக *கல்வி வள்ளல் காமராருக்கு தமிழர்கள் முன்னெடுக்கும் நன்றிப் பெருவிழா….* *அனைவரும் வாரீர்.!*
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை செயலிழக்கச் செய்யும் தீர்ப்பைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருங்கிணைத்து, ஜூலை 2 ஆம் தேதி திங்கள் கிழமை நடத்திய ரயில் மறியல் போராட்டம், நாமக்கல் ரயில் நிலையத்தில் மதியம் 12 மணிக்கு மேல் நடைபெற்றது. இதில், திராவிடர் விடுதலைக் கழக நாமக்கல் மாவட்டத் தலைவர் சாமிநாதன், மாவட்ட பொருளாளர் முத்துப்பாண்டி, பள்ளிபாளையம் நகர தலைவர் பிரகாசு, பள்ளாளையம் நகர அமைப்பாளர் தியாகு மற்றும் பள்ளிபாளையம், திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 12072018 இதழ்
“தீண்டாமை ஒழிப் புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்திட்ட, தீர்ப்பைத் திரும்பப் பெற்று வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை 9ஆவது அட்டவணை யில் இணைத்திடு” என்ற கோரிக்கையை வலி யுறுத்தி 2.7.2018 அன்று தமிழகம் முழுவதும் இரயில் மறியல் நடத்து வதென முடிவு செய்யப் பட்டு அதற்காக மக்களை திரட்டுவதெனவும் முடிவு செய்யப்பட்டு கடந்த மாதம் 26, 27 இரு தினங்கள் வாகனம் பிரச்சாரப் பயணம் நடைபெற்றது. கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. இராம கிருஷ்ணன் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் இரயில் நிலையம் முன் திரண்டனர். காவல்துறைக்கும் தோழர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிறிது நேரம் அங்கே அமர்ந்து மறியல் போராட்டம் நடைபெற்றது. பின்னர் 378பேர் கைதாயினர். கு. இராமகிருஷ்ணன் (பொதுச் செயலாளர், த.பெ.தி.க.), யு. சிவஞானம் (தீண்டாமை ஒழிப்பு முன்னணி), சிறுத்தைச் செல்வன் (தமிழ்ப் புலிகள்), சுசி கலையரசன் (வி.சி.க.), நடராசன், முன்னாள் எம்.பி....
ஏப்ரல் 30, 2018 அன்று தோழர் பத்ரி நாராயணனின் 14ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, இராயப்பேட்டையில் நடந்த நிலம் பாழ்-நீர் மறுப்பு- நீட் திணிப்பு, தன்னாட்சி-தன்னுரிமை மீட்பு மண்டல மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘நீட் திணிப்பு’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை. (21.6.2018 இதழ் தொடர்ச்சி) இட ஒதுக்கீடு இல்லை, எல்லோருக்கும் சம வாய்ப்பு என்று பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் சொன்னதைத் தான் இப்போது மெதுவாகக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். மருத்துவத்தில் முதுநிலை படிப்பவர்கள் குறைந்தது அரசிடம் ஐந்து ஆண்டுகள் பணிபுரிய வேண்டும். ஆனால் இப்போது, காலம் முழுவதும் செய்ய வேண்டுமென்றும் கூறுகிறார்கள். அதுகுறித்து நமக்குத் தெரியாது. இவர்கள் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து பணியாற்றாவிட்டால் 45 லட்சம் ரூபாய்க்கு பாண்ட் எழுதி கொடுத்துவிட்டுத் தான் வெளியே செல்ல வேண்டும். அதனால் நமக்கு மருத்துவர்களாக, அறுவை சிகிச்சை நிபுணர்களாக, உயர் சிகிச்சை மருத்துவர்களாக நம் மருத்துவமனைகளுக்கு மருத்துவர்கள் கிடைக்கிறார்கள். ஆனால்...
தமிழ்நாடு மாணவர் கழகத்தின் சார்பில் மாணவர்களுக்கான பயிற்சி ஜூன் 30, ஜூலை 1, 2018 தேதிகளில் காஞ்சிபுரத்தில் மக்கள் மன்றத்தில் சிறப்புடன் நடைபெற்றது. சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக ஒத்துழைப்புடன் தமிழ் நாடு மாணவர் கழகம் நடத்திய இந்தப் பயிற்சி வகுப்பை மாணவர் கழக அமைப்பாளர் பாரி சிவகுமார் ஒருங்கிணைத்தார். பயிற்சியில் 45 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 20 பேர் மாணவிகள். முதல் நாள் காலை 10 மணியளவில் மக்கள் மன்றத் தோழர்களின் புரட்சிகரப் பாடல்களுடன் வகுப்புகள் தொடங்கின. தோழர்கள் அறிமுகத்தைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மாணவர் பயிற்சியின் நோக்கங்களை விளக்கினார். தொடர்ந்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, ‘கல்வி – நம்முன் உள்ள சவால்கள்’ என்ற தலைப்பில் பேசினார். ‘உயிரினம் சிந்திக்கத் தொடங்கியபோதே உருவாகிவிட்டது கற்றல் செயல்பாடு. மூளையின் புரிதல் சக்தியோடு கற்பது வழியாக செயல்படக் கூடிய கல்வி செயல்பாட்டை பள்ளியில் அடைத்த தால் பள்ளிக்...
‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத் தின் 5வது சந்திப்பு 23.06.2018 அன்று காலை 11 மணிக்கு திராவிடர் விடு தலைக் கழகத்தின் சென்னை தலைமை அலுவலகத்தில் வேழவேந்தன் (தென்சென்னை மாவட்டத் தலை வர்) தலைமையில் நடைபெற்றது. பெரியார் யுவராஜ் நிகழ்வை ஒருங்கிணைத்தார். ‘நிமிர்வோம்’ அக்டோபர் மாத இதழ்க் குறித்து ராஜீ மற்றும் இமானுவேல் துரை தங்களது பார்வையை எடுத்துரைத்தனர். தொடர்ந்து, சமூகநீதி காவலர் வி.பி.சிங் பிறந்தநாளையொட்டி அவருடைய உருவப்படத்தை மதிமாறன் (எழுத்தாளர்) திறந்து வைத்து “இட ஒதுக்கீடு” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பெரியார் முழக்கம் 28062018 இதழ்
தருமபுரி மாவட்டம், பாப்பி ரெட்டிபட்டியை அடுத்த வெங்கட சமுத்திரத்தில் பெரியார் முழு உருவ வெண்கலச் சிலை, 2.6.2018 சனிக் கிழமை காலை 10.00 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியால் திறந்து வைக்கப்பட்டது. பெரியார் பெருந்தொண்டரும், தமிழ்நாடு அரசால் பெரியார் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டவருமான வி.ஆர்.வேங்கன் தனிமுயற்சியில் அவரால் நிலம் வழங்கப்பட்டு இயங்கிவரும் வெங்கடசமுத்திரம் அரசினர் மேனிலைப் பள்ளியின் எதிர்ப்புறத்தில் உள்ள அவரது சொந்த நிலத்தில் நிறுவப்பட்டுள்ளது. தனியார் நிலத்தில் நிறுவப்படும் சிலைகளுக்கு எவ்வித அரசு அனுமதியும் தேவையில்லை என ஏற்கனவே உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் இருந்தும் மாவட்ட ஆட்சித் தலைவராலும், காவல்துறையாலும் கொடுக்கப்பட்ட கடும் நெருக்கடிகள் காரணமாக இருமுறை உயர்நீதி மன்றத்தில் ஆணை பெற்று வந்த நிலையிலும் மாவட்ட ஆட்சியரும், காவல்துறையும் சிலையை நிறுவ தடைசெய்து வந்தனர். ஆனால் புதிய மாவட்ட ஆட்சியராய் மலர்விழி அவர்கள் பொறுப்பேற்றவுடன் சிலையை நிறுவ உரிய ஒத்துழைப் புகள் வழங்குமாறு வருவாய், காவல் துறையினருக்கு அறிவுறுத்தினார்....
பயிலரங்கத்துக்கு ரூ.25,000 நன்கொடை வழங்க முன் வந்து முகாமை நடத்துமாறு கூறியவர் முன்னாள் தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளரும், இராசிபுரம் பகுதியைச் சார்ந்த தி.மு.க. பிரமுகருமான பாலு ஆவார். அவருக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி சால்வை போர்த்தி, பாராட்டி நினைவுப் பரிசுகளை வழங்கினார். நிகழ்வை முழுமையாக ஒளிப்பதிவு செய்து, வீடியோ பதிவாக்கிய சித்தோடு கழகத் தோழர் எழிலன் மற்றும் அவருக்கு உடனிருந்து உதவிய தோழர்களுக்கும் இரண்டு நாளும் சிறப்பாக உணவு தயாரித்து வழங்கிய ஏற்காடு பிரபாகரன் உணவு விடுதி உரிமை யாளரும் கழகச் செயல் பாட்டாளருமான பெருமாள் ஆகியோரைப் பாராட்டி நினைவுப் பரிசு மற்றும் நூல்களை கழகத் தலைவர் வழங்கினார். பயிலரங் கத்தை முன்னின்று ஏற்பாடு செய்த இராசிபுரம் கழகச் செயல்பாட்டாளர் சேகுவேரா, அவரது இணையர் மற்றும் கமலக் கண்ணன் நிகழ்வில் பாராட்டப் பெற்றனர். பெரியார் முழக்கம் 28062018 இதழ்
இராசிபுரம் பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்காட்டில் ஜூன் 23, 24ஆம் தேதிகளில் நடத்திய பெரியாரியல் பயிலரங்கம், கருத்துக் களமாகவும், விவாத அரங்கமாகவும் சிறப்புடன் நடந்து முடிந்தது. இந்தப் பயிலரங்கில் பங்கேற்க நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் முன் பதிவு செய்திருந்தனர். ஆனாலும் பங்கேற்பாளர் எண்ணிக்கை அதிகரிப்பதால் கவனச் சிதைவு மற்றும் ஏற்பாட்டு வசதிக் குறைவு கருதி எண்ணிக்கைக் குறைக்கப்பட்டு முதல் முறையாக பெரியாரியல் குறித்து அறிய விரும்பு வோருக்கு முன்னுரிமை தரப்பட்டு, பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஏற்கனவே பயிலரங்கில் பங்கேற்ற கழகத் தோழர்கள் இதில் பங்கேற்காது தவிர்க்கலாம் என்ற அடிப்படையில் புதிய தோழர்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி தேர்வு செய்தார். மொத்தம் பங்கேற்ற 51 பயிற்சியாளர்களில் பெண்கள் 21 பேர் என்பது இப்பயிலரங்கின் சிறப்பாகும். கிராமத்தி லிருந்து முதல் தலைமுறையாகப் படித்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் பங்கேற்ற இந்த முகாமில் இளம் பெண் தோழர்கள் முனைப் புடன் பங்கேற்று கருத்துகளை குறிப்பெடுத்து...
ஏப்ரல் 30, 2018 அன்று பத்ரி நாராயணனின் 14ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, இராயப்பேட்டையில் நடந்த நிலம் பாழ்-நீர் மறுப்பு- நீட் திணிப்பு, தன்னாட்சி-தன்னுரிமை மீட்பு மண்டல மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘நீட் திணிப்பு’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை. இந்த தன்மானம்-தன்னுரிமை மீட்பு மாநாட்டில் விவாதிப்பதற்கு ஆயிரக்கணக்கான செய்திகளை அள்ளி அள்ளி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் பாரதிய ஜனதா கட்சிக்காரர்கள். 2014ஆம் ஆண்டு அவர்கள் ஆட்சி தொடங்கிய காலத்திலிருந்து மிக வேகமாக இந்த வேலையைச் செய்து கொண் டிருக்கிறார்கள். இதையெல்லாம் காங்கிரசு செய்ய வில்லையா என்றால் அது நமக்குத் தேவையில்லை. அவர்கள் இருட்டில் திருடிக்கொண்டு போனார்கள். இவர்கள் பேருந்து நிலையத்தில் பட்டப் பகலில் கத்தியைக் காட்டி வெட்டுகிற கொலைகாரர்களைப் போல மிகத் துணிச்சலாக மனிதாபிமானமற்றவர் களாக, எதையும் மதிக்காதவர்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். புரட்சியாளர் அம்பேத்கர் மறைவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னால், 1955 டிசம்பரில்தான் மொழிவழி மாநிலங்கள் பற்றிய சிந்தனையைப்...
திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் கிராம பரப்புரை பயணத் தொடக்க விழா. சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியம் உக்கம்பருத்திக் காடு பெரியார் திடலில் 16.06.18 மாலை 6 மணியளவில் துவங்கி நடைபெற்றது. பறை முழக்கத்துடன் தோழர்கள் கிராம மக்கள் அனைவரும் ஊர்வலத்தோடு நிகழ்வு தொடங்கியது. பின்னர் பெரியார் சிலை உடைப்புக்கு எதிர் வினையாக சங்கரமட உடைப்பு வழக்கில் சிறை சென்று திரும்பிய தோழர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு அனைவரும் மேடையில் அமர்ந்தனர். சரவணபரத் கடவுள் மறுப்பு ஆத்மா மறுப்பு வாசகங்களை முழக்கமிட மற்றவர் உடன் முழுக்கமிட்டனர். தொடக்க நிகழ்வாக கழக சாதனையாளர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. சங்கரமட உடைப்பு வழக்கில் சிறை சென்ற நங்கவள்ளி தி.வி.க தோழர்கள் கிருஷ்ணன், மனோஜ், ராஜேந்திரன் ஆகியோருக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி துண்டு அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேட்டூர் மகளிர் தின பொதுக் கூட்டத்திற்காக பணி செய்து நிகழ்வை வெற்றிகரமாக நடத்திய தோழர்கள். காயத்திரி, சுதா,...
சர்வதேச தமிழ்நாட்டு வழக்கறிஞர்கள், முன்னாள் நீதிபதிகள் மாநாடு சென்னையில் கடந்த ஜூன் 9ஆம் தேதி கூடி ஈழத் தமிழர் இன அழிப்பை சர்வதேச சட்டங்களின் வெளிச்சத்தில் விரிந்த தளத்தில் முன்னெடுப்பதற்கான சாத்தியக் கூறுகளை விவாதித்தது. தமிழ்நாடு, சென்னையில் பிட்டி. தியாகராயர் அரங்கில், ஜூன் 9 ஆம் நாள், அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையம் என்ற அமைப்பின் பெயரில், ஈழத்தமிழர் ஆதரவு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு என்ற தலைப்போடு, ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டி பன்னாட்டு வழக்கறிஞர்கள் மாநாடு நடந்தேறியது. ஓய்வு பெற்ற நீதிபதி து. அரிபரந்தாமன் அவர்களின் தலைமையில், தமிழகம், ஈழம், மற்றும் இந்தியா வினுள் உள்ள பிற மாநிலங்கள் உட்பட சர்வதேச நாடுகளில் இருந்தும் வழக்குரைஞர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஈழத் தமிழர் களுக்கான குற்றவியல் நீதியும், ஈடுசெய் நீதியும் மறுக்கப்படக்கூடாது, இலங்கையே தன்னைத் தானே விசாரித்துக்கொள்ளும் உள்ளக விசாரணை முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் மாநாட்டு அழைப்பிதழில் இடம்...
பெரியாரியல்_பயிலரங்கம் #பெரியார்_அம்பேத்கர்_இன்றும்_தேவை_ஏன்? – தோழர்கொளத்தூர்மணி #திராவிடர்_இயக்க_வரலாறு– தோழர்விடுதலைஇராசேந்திரன் #பெரியாரும்_பகுத்தறிவும் – தோழர் மடத்துக்குளம் மோகன் #பெரியாரியல்_பயிலரங்கம்_ஏன்..? – தோழர் வெள்ளிங்கிரி வருங்கள் தோழர்களே……… நாள்:15-07-2018,ஞாயிற்றுக்கிழமை நேரம் : காலை 10 மணி இடம்:அருள்ஜோதி உணவக அரங்கம் நஞ்சேகவுண்டன் புதூர் பொள்ளாச்சி #அம்பேத்கர்_பெரியாரை கற்போம் …… பரப்புவோம்…….. பேச :9842487766,9976086033
“முக்கிய வேண்டுகோள் !” – கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி. வன்கொடுமை பாதுகாப்புச் சட்டத்தைப் பாதுகாக்கக் கோரி ஜூலை 2 இல் இரயில் மறியல் ! Pபட்டியல் இன பழங்குடி மக்களுக்குப் பாதுகாப்பாக இருந்த வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்து விட்டது உச்சநீதிமன்றத் தீர்ப்பு.சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது உடனே வழக்குப் பதிவு செய்ய முடியாமலும், கைது செய்ய முடியாமலும் தடுத்திருப்பதோடு குற்றம்சாட்டப்பட்டவர்கள் முன் ஜாமின் கேட்கவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இனி வன்கொடுமை சட்டத்தை மீறும் ஜாதி வெறியர்கள் சட்டப் பாதுகாப்பு வந்து விட்டதால் மேலும் வன்கொடுமைகளை நடத்துவதற்கு வழி திறந்து விட்டுள்ளது இந்தத் தீர்ப்பு. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உ.பி., ம.பி., இராஜஸ்தான் மாநிலங்களில் போராடிய பட்டியல் இன மக்ககள் மீது அம்மாநில பா.ஜ.க. ஆட்சி துப்பாக்கி சூடு நடத்தியதில் 9 பேர் பலியாகி விட்டனர். இந்நிலையில் இந்தச் சட்டம் ஏற்கனவே இருந்த நிலையில் அப்படியே பாதுகாக்க...
மதுரை முருகேசன் – வாசுகி இல்லத் திறப்பு – 27052018 நிலம் பாழ்,நீர் மறுப்பு, நீட் திணிப்பு உரிமை மீட்பு பொதுக்கூட்டம் கருவேப்பிலங்குறிச்சி 28052018 தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைது – ஆர்ப்பாட்டம் சென்னை 29052018 நிலம் பாழ்,நீர் மறுப்பு, நீட் திணிப்பு உரிமை மீட்பு பொதுக்கூட்டம் 30052018 மணப்பாறை பொதுக்கூட்டம் பெரியார் சிலை திறப்பு வெங்கடசமுத்திரம் 02062018 ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் பன்னாட்டு தமிழ் வழக்கறிஞர்கள் மாநாடு சென்னை 09062016 கிராம பரப்புரை பயணத் தொடக்க விழா உக்கம்பருத்திக்காடு 16062018
திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் கிராம பரப்புரை பயணத் தொடக்க விழா. சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியம் உக்கம்பருத்திக்காடு பெரியார் திடலில் 16.06.18 மாலை 6 மணியளவில் துவங்கி நடைபெற்றது. பறை முழக்கத்துடன் தோழர்கள் கிராம மக்கள் அனைவரும் ஊர்வலத்தோடு நிகழ்வு தொடங்கியது.பின்னர் பெரியார் சிலை உடைப்புக்கு எதிர் வினையாக சங்கரமட உடைப்பு வழக்கில் சிறை சென்று திரும்பிய தோழர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு அனைவரும் மேடையில் அமர்ந்தனர். தோழர்.சரவணபரத் கடவுள் மறுப்பு ஆத்மா மறுப்பு வாசகங்களை முழக்கமிட மற்றவர் உடன் முழுக்கமிட்டனர். தொடக்க நிகழ்வாக கழக சாதனையாளர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. சங்கரமட உடைப்பு வழக்கில் சிறை சென்ற நங்கவள்ளி தி.வி.க தோழர்கள் , கிருஷ்ணன், மனோஜ்,ராஜேந்திரன் ஆகியோருக்கு கழக தலைவர் தோழர்.கொளத்தூர் மணி பயணாடை அனிவித்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேட்டூர் மகளிர் தின பொதுக்கூட்டத்திற்காக பணி செய்து நிகழ்வை வெற்றிகரமாக நடத்திய தோழர்கள். காயத்திரி, சுதா,சரஸ்வதி,சித்ரா ஆகியோரை வாழ்த்தி...
ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் சென்னை மாநாடு: இலங்கையில் நடைபெற்றது உள் நாட்டுப் போர் அல்ல; இன அழிப்புக்குப் பலர் பொறுப்பு ஆர்வத்தைத் தூண்டிய பன்னாட்டு தமிழ் வழக்கறிஞர்கள் மாநாடு பதிப்பு: 2018 ஜூன் 11 10:16 தமிழ்நாடு, சென்னையில் பிட்டி. தியாகராயர் அரங்கில், ஜூன் 9 ஆம் நாள், அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம் என்ற அமைப்பின் பெயரில், ஈழத்தமிழர் ஆதரவு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு என்ற தலைப்போடு, ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டி பன்னாட்டு வழக்கறிஞர்கள் மாநாடு நடந்தேறியது. ஓய்வு பெற்ற நீதிபதி து. அரிபரந்தாமன் அவர்களின் தலைமையில், தமிழகம், ஈழம், மற்றும் இந்தியாவினுள் உள்ள பிற மாநிலங்கள் உட்பட சர்வதேச நாடுகளில் இருந்தும் வழக்குரைஞர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஈழத்தமிழர்களுக்கான குற்றவியல் நீதியும், ஈடுசெய் நீதியும் மறுக்கப்படக்கூடாது, இலங்கையே தன்னைத் தானே விசாரித்துக்கொள்ளும் உள்ளக விசாரணை முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் மாநாட்டு அழைப்பிதழில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 2009...
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டியை அடுத்த வெங்கட சமுத்திரத்தில் தந்தை பெரியார் அவர்களின் முழு உருவ வெண்கலச் சிலை, 2-6-2018 சனிக்கிழமை காலை 10-00 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியால் திறந்துவைக்கப்பட்டது. பெரியார் பெருந்தொண்டரும், தமிழ்நாடு அரசால் பெரியார் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டவருமான வி.ஆர்.வேங்கன் அவர்களின் தனிமுயற்சியில் அவரால் நிலம் வழங்கப்பட்டு இயங்கிவரும் வெங்கடசமுத்திரம் அரசினர் மேனிலைப் பள்ளியின் எதிர்ப்புறத்தில் உள்ள அவரது சொந்த நிலத்தில் நிறுவப்பட்டுள்ளது. தனியார் நிலத்தில் நிறுவப்படும் சிலைகளுக்கு எவ்வித அரசு அனுமதியும் தேவையில்லை என ஏற்கனவே உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் இருந்தும் மாவட்ட ஆட்சித் தலைவராலும், காவல்துறையாலும் கொடுக்கப்பட்ட கடும் நெருக்கடிகள் காரணமாக இருமுறை உயர்நீதிமன்றத்தில் ஆணை பெற்றுவந்த நிலையிலும் (வழக்குரைஞர் திருமூர்த்தி அவர்கள் உயர்நீதி மன்றத்தில் வழக்காடி இருமுறையும் சாதகமான தீர்ப்புகளைப் பெற்றுக் கொடுத்தார்) மாவட்ட ஆட்சியரும், காவல்துறையும் சிலையை நிறுவ தடைசெய்து வந்தனர். ஆனால் புதிய மாவட்ட ஆட்சியராய் திருமதி.மலர்விழி அவர்கள் பொறுப்பேற்றவுடன் சிலையை நிறுவ...
மேட்டூரில் : தூத்துக் குடி படுகொலைகளைக் கண்டித்து கண்டன ஆர்ப் பாட்டம் 23.5.2018 அன்று மேட்டூர் பெரியார் பேருந்து நிலையம் முன்பு சேலம் மேற்கு மாவட்டம் சார்பில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சி.கோவிந்த ராசு தலைமை தாங் கினார். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் அப்துல்கபூர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருப்பண்ணன், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கோ. சூரியக்குமார், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ், நாம் தமிழர்க் கட்சி நகர செயலாளர் மூர்த்தி, கழகத் தோழர் மா.சுந்தர் ஆகியோரின் கண்டன உரைகளைத் தொடர்ந்து இறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி கண்டன உரையாற்றினார். குமரேசன் நன்றி கூற கூட்டம் நிறைவுபெற்றது. கூட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தோழர்களும் பொறுப்பாளர்களும் திரளாகக் கலந்து கொண்டனர். காஞ்சியில் : திராவிடர் விடுதலைக் கழகம் காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் பாலாறு விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம்...