கட்டமைப்பு நிதி : கடலூர் மாவட்டம் தீவிரம்
06.04.2019 அன்று கடலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் கருவேப்பிலங்குறிச்சி அறிவழகன் வீட்டில் தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் தலைமையில் நடைபெற்றது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
- கழகத்தின் கட்டமைப்பு நிதியாய் ரூபாய் 20000 மே மாதம் 10-ந் தேதிக்குள் கொடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது
- வருகின்ற 17ஆவது நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தலைமைக் கழகத்தின் முடிவான திமுக கூட்டணியை ஆதரிப்பது என்பதை ஆதரித்து கடலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு பாராளுமன்ற தொகுதிகளில் சிதம்பரம் கடலூர் திமுக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர்களோடு சேர்ந்து பிரச்சாரம் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது
- மே மாதம் கடலூர் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் பயிற்சி முகாம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது
கூட்டத்திற்கு விழுப்புரம் மாவட்டத் தலைவர் இளையரசன் மற்றும் விழுப்புரம் மாவட்டம் பெரியார் சாக்ரடீஸ் ஆகியோர் கூட்டத்திற்கு வந்து சிறப்பித்தனர். நட பாரதிதாசன் (மாவட்டத் தலைவர்) நன்றி கூறினார்.
பெரியார் முழக்கம் 25042019 இதழ்