மூத்த பெரியாரியலாளர் ஆனைமுத்து துணைவியார் முடிவெய்தினார்

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் வே.ஆனைமுத்து  வாழ்க்கைத் துணைவியார் சுசீலா அம்மையார் (83), ஏப். 30 அன்று முடிவெய் தினார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சென்னை தாம்பரம் இரும்புலியூரில் உள்ள அவரின் வீட்டில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்ட செயலாளர்இரா. உமாபதி, கரு. அண்ணாமலை, திருப்பூர் விஜயகுமார், மேட்டூர் முத்து ராஜா உள்ளிட்ட தோழர்கள் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.

திருமதி சுசீலா அம்மையாரின் உடல் இராமச்சந்திரா மருத்துவமனைக்கு உடற்கொடையாக அளிக்கப்பட்டது.

பெரியார் முழக்கம் 09052019 இதழ்

You may also like...