சத்துணவில் வெங்காயம் பூண்டுக்கு தடையாம்!

மதுரை மாவட்டம் வலையப்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மய்யத்தில் தலித் சமூகத்தைச் சார்ந்த எம். ஜோதிலட்சுமி, எம். அன்னலட்சுமி என்ற தலித் பெண்கள், குழந்தைகளை பராமரிக்கும் பணியாளர் களாக நியமனம் செய்யப்பட்டனர். உள்ளூர் ஜாதி ஆதிக்கவாதிகள், தலித் பணியாளர்கள் தங்கள் குழந்தைகளைப் பராமரிப்பதா என்று எதிர்ப்பு தெரிவித்து, குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப மறுத்தனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜாதி வெறியர்கள் மீது வழக்குத் தொடராமல் தமிழக அரசு, இந்த இரண்டு தலித் பெண்களையும் இடமாற்றம் செய்தது. கடும் எதிர்ப்புக்குப் பிறகு அதே ஊரில் ‘தலித்’ பகுதியில் இவர்களை நியமனம் செய்திருக்கிறது. இத்தனைக்கும் 1563 அங்கன்வாடி பணியாளர்கள் பதவிக்கு ஆளும் கட்சியினர் இலஞ்சம் வாங்கிக் கொண்டு, 2017லிருந்து பணி யிடங்களை,7 நிரப்பாமல் காலம் கடத்திய நிலையில் நாகராஜன் என்ற மாவட்ட ஆட்சித் தலைவர் நேர்மையாக இந்தப் பணியிடங்களை தேர்வு செய்யப்பட்டவர்களைக் கொண்டு நிரப்பினார். அதற்காக அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அடுத்த நாளே அவருக்கு இடமாற்றல் ஆணை வழங்கி, ‘தண்டனை’ அளித்தது. தமிழ்நாட்டில் சத்துணவுடன் தி.மு.க. ஆட்சி காலத்தில் வாரம் இரண்டு நாள் ‘முட்டை’ போடப்பட்டது. அதில் ஒரு நாள் ‘செவ்வாய்க் கிழமை’. செவ்வாய்க் கிழமை அசைவம் சாப்பிடக் கூடாத ‘புனித நாள்’ என்று கூறி மதவாத சக்திகள் எதிர்ப்பு தெரிவிக்கவே முட்டை போடுவது வேறு ஒரு நாளுக்கு மாற்றப்பட்டது. வடமாநிலங்களில் சத்துணவுக் கூடங்களில் ‘தலித்’ பெண்களை நியமிப் பது கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாது.

இப்போது கருநாடக மாநிலத்திலிருந்து ஒரு செய்தி வந்திருக்கிறது. உலகம் முழுதும் ‘அரே கிருஷ்ணா; அரே ராமா’ அமைப்புகளை நடத்தி வரும் ‘இஸ்கான்’ என்ற பார்ப்பன அமைப்பு, ‘அக்சய பாத்திர பவுண்டேஷன்’ என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறது. கருநாடக மாநிலத்தில் பெங்களூரைச் சுற்றியுள்ள 2814 பள்ளிகளுக்கு மத்திய உணவு வழங்கும் ‘ஒப்பந்தம்’ இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. 4.43 இலட்சம் குழந்தைகளுக்கு இந்த நிறுவனம் மதிய உணவு வழங்குகிறது. இது பார்ப்பனிய அமைப்பு என்பதால் உணவில் ‘பூண்டு’, ‘வெங்காயம்’ இரண்டையும் சேர்க்க மறுக்கிறது. ‘பிராமண’ உணவு முறையில் பூண்டும் வெங்காயமும் தவிர்க்கப்பட வேண்டும் என்று வேதமதத் தத்துவம் பேசுகிறது இந்த அமைப்பு. குழந்தைகள் மோசமான தரமற்ற உணவை சாப்பிடவே முடியவில்லை என்று கூறி பல கிலோ மீட்டர் தூரம் வீட்டுக்கு நடந்தே சென்று சாப்பிடுகிறார்கள்.

‘ஜன்சுவஸ்தியா அபியான்’ போன்ற தொண்டு நிறுவனங்கள், இஸ்கான் அமைப்பின் இந்த ‘பார்ப்பனிய உணவு திணிப்பு’க்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. இஸ்கான் அமைப்போ பூண்டு, வெங்காயத்தை உணவில் சேர்க்கக் கூடாது என்பது எங்களது ‘பிராமண வைதீக உணவுத் தத்துவம்’ என்று அடம் பிடிக்கிறது. கருநாடக அரசு சத்துணவுக்காக தயாரித்துள்ள உணவுக்கான பட்டியலில் வாரத்தில் 4 நாட்கள் வெங்காயத்தைக் கட்டாயம் சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி யிருக்கிறது. ஆனால் ‘இஸ்கான்’ மட்டும் இந்த உணவுப் பட்டியலை மதிக்க மாட்டோம் என்று மீறி செயல்பட்டு வருகிறது.  இத்திட்டத்துக்கு மத்திய அரசு நிதி உதவியும் மாநிலங்களுக்கு இருப்பதால் மத்திய அரசின் செல்வாக்கில் ‘ஒப்பந்தம்’ பெற்றுள்ள ‘இஸ்கான்’ மாநில அரசு விதிகளை ஏற்க மறுக்கிறது. போடப்படுகிற உணவும் வாயில் வைக்க முடியவில்லை என்று குழந்தைகள் சாப்பிட மறுத்து மீண்டும் வீட்டுக்கே சாப்பிடப் போகிறார்கள்

என்று இது குறித்து விரிவான கட்டுரையை

‘இந்து’ ஆங்கில நாளேட்டின் ‘ஞாயிறு மலர்’

(ஜூன் 2, 2019).

பெரியார் முழக்கம் 20062019 இதழ்

You may also like...