துப்புரவுப் பணியாளர் பாதுகாப்பு : மயிலை கழகத் தோழர்கள் நடவடிக்கை
02.04.2019 அன்றுகாலை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் மக்கள் குடியிருப்பு பகுதியில்…. துப்புரவு பணியாளர்கள் சாக்கடை அடைப்பு, குப்பைகளை அப்புறப்படுத்தும் வேலையில் எந்த ஒரு பாதுகாப்பு கருவிகளும் இன்றி வேலையில் ஈடுபட்டிருந்தனர். இதை அறிந்த திராவிடர் விடுதலைக் கழகத்தை சார்ந்த மயிலாப்பூர் பகுதியின் இளைஞர்கள் பீரவீன்குமார் மற்றும் உதயகுமார் ஆகியோர் வேலை செய்து கொண்டிருந்த துப்புரவுப் பணியாளர்களைப் பாதுகாப்புக் கருவியின்றி வேலை செய்யக் கூடாது என்று தடுத்து நிறுத்தினர்.
அதைத் தொடர்ந்து பணியாளர்களை இந்த பணியில் ஈடுபடுத்திய வார்டு 123ஆவது பகுதி மாநகராட்சி பொறுப்பாளர் பலராமனைச் சந்தித்து முறையிட்டுள்ளனர். பாதுகாப்புக் கருவிகளை உடனே தருமாறும், அதன் பின்னே அவர்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஆனால், பலராமன்முன்னுக்கு பின்னான பதில்களைத் தோழர்களிடம் கூறியுள்ளார். துப்புரவுப் பணியாளர்களைத் தொடர்ந்து பணியில் பாதுகாப்பு கருவிகளிலின்றி ஈடுபட அனுமதிக்க முடியாது எனக் கூறி, கழக மயிலாப்பூர் பகுதித் தலைவர் மாரி மற்றும் தோழர்கள் சென்னை மாநகராட்சியில் இந்த சம்பவம் தொடர்பாக புகார் மனு அளித்துள்ளனர்.
பெரியார் முழக்கம் 25042019 இதழ்