விழுப்புரத்தில் பழங்குடி மக்கள் பாதுகாப்பு மாநாடு
23.2.2019 அன்று மாலை விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தின் அருகில் பேராசிரியர் கல்யாணி ஒருங்கிணைப்பில் நடந்த பழங்குடி மக்கள் பாதுகாப்பு மாநாட்டில் முன்னாள் அமைச்சர்
க. பொன்முடி உரைக்குப் பின் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பழங்குடி மக்கள் மீது அரசும் காவல்துறையும் எப்படி நடந்து கொள்கிறது என்பதை விளக்கி சிறப்புரையாற்றினார். நிறைவுரையாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பேசினார். முன்னாள் அமைச்சர் பேராசிரியர் க. பொன்முடி, சமூக சமத்துவப் படை தலைவர் ப. சிவகாமி, அய்.ஏ.எஸ்., மனித நேய மக்கள் கட்சி ப. அப்துல் சமது, த.நா. மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர் டில்லி பாபு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாநாட்டில் தலைமை செயற்குழு உறுப்பினர் அய்யனார், விழுப்புரம் மாவட்டத் தலைவர்
பூஆ. இளையரசன், மாவட்டச் செயலாளர் பெரியார் சாக்ரட்டீஸ், கடலூர் மாவட்டச் செயலாளர் பாரதிதாசன், அரியலூர் மாவட்ட அமைப்பாளர் இராவண கோபால், திண்டிவனம் நகர கழகம் சிந்தனை சிற்பி மற்றும் தோழர்கள் மூர்த்தி, வில்லாளன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் 04042019 இதழ்