சங்கர் மூன்றாம் ஆண்டு நினைவு நாள்

சங்கர் சமூகநீதி அறக்கட்டளை சார்பில் சங்கர் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் பொதுக் கூட்டம் 13.3.2019 அன்று உடுமலைப்பேட்டை குமரலிங்கம் பேருந்து நிலையம் அருகில் மாலை 5 மணிக்கு நடைபெற்றது. நிகழ்வில், ‘தந்தை பெரியார் வழியில் சமூகநீதி’ என்ற தலைப்பில் தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன், ‘பெண் விடுதலைத் தளத்தில் சமூகநீதி’ தலைப்பில் தமுஎச மாநிலத் துணைச் செயலாளர் சுந்தரவள்ளி, ‘அண்ணல் அம்பேத்கர் ஒளியில் சமூகநீதி’ தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘தமிழ்த் தேசிய மரபில் சமூகநீதி’ தலைப்பில் தமிழ் தேசிய விடுதலை இயக்கத் தோழர் வே. பாரதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாலை 4 மணிக்கு சங்கர் தனிப் பயிற்சி மய்யக் கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.

பெரியார் முழக்கம் 25042019 இதழ்

You may also like...