கழக ஏட்டுக்கு சந்தா சேர்க்க தீவிரம்: தென்காசி-நெல்லை மாவட்ட கலந்துரையாடல்
கீழப்பாவூரில் நடைபெற்ற தென்காசி, நெல்லை (ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம் ) மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கலந்துரையாடல் கூட்டம் 02.01.2022 ஞாயிறு காலை 10.30 மணியளவில் தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடல் கூட்டத்தில் கழகப் பொருளாளர் திருப்பூர் சு.துரைசாமி தலைமை வகித்தார் நெல்லை மாவட்டத் தலைவர் பா.பால்வண்ணன் தென்காசி மாவட்டத் தலைவர் அ.மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் தோழர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் கூட்டத்தின்நோக்கத்தை விளக்கிப் பேசினார். தோழர்கள் கழக இதழான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வார இதழுக்கு சந்தா சேர்ப்பது குறித்தும் மாவட்டம் முழுவதும் இயக்கத்தைக் கொண்டு செல்ல பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
இம்மாதம் முழுவதும் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழுக்கு சந்தா சேகரிப்பு பணியாற்றுவது என்றும் கொரானா தொற்று தற்போது பெருகி வருவதால் தொற்று குறைந்ததும் கொள்கை விளக்கத் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடத் திடவும், குடும்ப விழா நடத்திடவும் முடிவு எடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.
நிகழ்வில் தலைமை ஏற்ற கழகப் பொருளாளர் திருப்பூர் சு.துரைசாமி, கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் ஆகியோர் தோழர்களுக்கு இதழ் சந்தா சேர்ப்பு அவசியம் மற்றும் நிகழ்கால அரசியல் சூழலில் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழ் ஆற்றி வரும் பணி குறித்தும் விளக்கினர்.
நிகழ்வில் நெல்லை மாவட்ட செயலாளர் சி.ஆ. காசிராசன் தென்காசி மாவட்டச் செயலாளர் சு.அன்பரசு, தென்காசி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் மன்ற பொறுப்பாளர் ச.தமிழ்செல்வன், கீழப்பாவூர் ஒன்றிய பொறுப்பாளர்கள் ச.சுப்பையா பா.சேர்மத்துரை, கடையம் சங்கர், கபாலி பாறை சுரேஷ், சபாபதி, மாதவன், தங்கத்துரை, மனோஜ், வே.பால்ராசு மற்றும் தென்காசி மாவட்ட தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் 13012022 இதழ்