சங்கரன்கோவில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் முதல் நிகழ்ச்சி 

 

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் நகரத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய நூல் அறிமுக விழா கடந்த  மே 14 அன்று  அபர்ணாதேவி திருமண மண்டபத்தில் நடைபெற்றது .
நிகழ்ச்சிக்கு கழக பரப்புரை செயலர் பால்.பிரபாகரன் தலைமை வகித்தார் .நெல்லை மாவட்ட தலைவர் பால் வண்ணம் முன்னிலை ஏற்றார். ஒருங்கிணைப்பு செய்த சங்கரன்கோவில் தோழர் வே.ராமசாமியின் நோக்க உரையுடன்  நிகழ்ச்சி தொடங்கியது .சங்கை பெரியார் தொண்டர் பா.சதாசிவம் வரவேற்புரை நல்கினார்
 “.பெரியார் இன்றும் என்றும் “அண்ணல் அம்பேத்கரின் “நான் ஓர்  இந்துவாக சாக மாட்டேன் “கழக மாத இதழான நிமிர்வோம் ஆகிய நூல்கள் அறிமுகப் படுத்தப்பட்டன .
.நிமிர்வோம் இதழ்கள் குறித்து மதுரை தோழர் மா.பா மணிஅமுதனும் ..அம்பேத்கரின் நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன் நூல்குறித்து தலித்முரசு ஆசிரியர் புனிதப்பாண்டியனும் கழகத்  தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் பெரியார் இன்றும் என்றும் நூல் பற்றியும் உரையாற்றினர் .பால்.பிரபாகரன் தலைமை உரை ஆற்றினார்
ஆதித்தமிழர் பேரவையின் தென்னரசு ,முள்ளிக்குளம் பேராசிரியர் திரு. நீலகண்டன் .ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .
முன்னதாக நிமிர்வோம் மே மாத இதழ் நிகழ்வில் வெளியிடப்பட்டது .முதல் பிரதியை கக்கன்  நகர் பழனிசாமியும் மணலூர் முருகனும் கழகத் தலைவரிடமிருந்து பெற்றுக் கொண்டனர் .சங்கை மோகன் -தங்கராசு மதுரை மா.பா. மணி அமுதன் விருதுநகர் ஜெயக்குமார் ஆகிய தோழர்கள் கழகத் தலைவர் கைகளால் பெரியார் இன்றும் என்றும் நூலைப் பெற்று மகிழ்ந்தனர் .சங்கரன் கோவில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 1500ரூ கழக கட்டமைப்பு நிதியாக வழங்கப்பட்டது.
நெல்லை .விருது நகர் மதுரை சென்னை ஆகிய மாவட்ட கழகத் தோழர்களும் நூற்றுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களும் கலந்து கொண்டனர் ..நிகச்சியை ஓட்டி சங்கரன் கோவில் வட்டார மக்களிடம் பெரியார் இன்றும் என்றும் நூல் நாற்பது பிரதிகளும் ,நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன் எழுபது பிரதிகளும் நூற்றுக்கும் மேற்பட்ட நிமிர்வோம் இதழ்களும் சென்றடைந்தன .அரங்கில் வைக்கப்பட்ட  இயக்க ஆதரவாளர் ஓவியர் மணியின்கம்பியால் செய்யப்பட்ட பெரியார் – அம்பேத்கர் -புத்தர்  உருவ கலைப்படைப்புகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது
விழுப்புரம் அய்யனார் கழக வழக்குரைஞர் துரை அருண் நிகழ்வுக்கு முதல் நாளே  வந்திருந்து நிகழ்ச்சி ஏற்பாட்டை முன்னின்று கவனித்தனர்
img_6109 img_6113 img_6130 img_6134 img_6149 img_6151 img_6156 img_6171 img_6174 img_6191 img_6198

You may also like...