தலையங்கம் கோட்சே பரம்பரை
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா எழுதிய மாமனிதர் நேரு நூல் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சங் பரிவாரக் கும்பலை “கோட்சே பரம்பரை” என்ற வார்த்தைகளால் வர்ணிக்கிறார். கோட்சே பரம்பரை என்பது திராவிடர் இயக்கத்திற்கு பழகிப்போன ஒரு சொல் தான், காந்தியாரை சுட்டுக் கொல்லப்பட்ட அந்த காலத்தில் திராவிடர் இயக்க மேடைகளிலும் திராவிடர் இயக்க நூல்களிலும் அந்தக் கும்பலை சுட்டிக்காட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட சொல் தான் கோட்சே பரம்பரை என்பதாகும். காந்தியார் சுட்டுக்கொல்லப்பட்டது மாலை 5:12 க்கு, ஆனால் அகில இந்திய வானொலி அவரது மறைவு செய்தியை ஒலிபரப்பியது 6 மணிக்குத்தான். அதற்கு முக்கிய காரணம், ‘காந்தியை ஒரு முஸ்லிம் சுட்டுக் கொன்றுவிட்டார்’ என்ற வதந்தியை இந்த கோட்சே பரம்பரை அப்போதே பரப்பியது. மவுண்ட் பேட்டன், காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியை அறிந்து பிர்லா மாளிகை விரைந்த உடன் கூட்டத்திலிருந்த ஒரு சங்கி, ‘காந்தியை ஒரு முஸ்லிம் சுட்டுக்...