அம்பலமாகும் பி.எம்.கேர்ஸ் மோசடிகள்
கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் இருந்தபோது கடந்த 2021ம் ஆண்டு மே 29ம் தேதி சிறுவர்களுக்கான பிஎம் கேர்ஸ் நிதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலமாக 2020ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி முதல் 2023ம் ஆண்டு மே 5ம் தேதி வரை கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளைத் தத்தெடுப்போர் அல்லது பாதுகாவலர்களுக்கு இந்த நிதி உதவி வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களில் 51சதவீத மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் பகிர்ந்துள்ள தரவுகளின்படி, 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 613 மாவட்டங்களில் இருந்து மொத்தம் 9331 மனுக்கள் பிஎம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் நிதியுதவி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 32 மாநிலங்களில் 558 மாவட்டங்களில் இருந்து 4532 விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 4781 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. 18 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது. நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என தெரியவந்துள்ளது.
பெரியார் முழக்கம் 18.07.2024 இதழ்