கடத்தூரில் குடிஅரசு நூற்றாண்டு விழா

கடத்தூர் புதூரில் குடிஅரசு நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டம் – கொடியேற்றம் – இல்லத் திறப்பு விழா நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஒன்றியம் கடத்தூர் புதூரில் குடி அரசு நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டம் 06.07.2024 சனிக் கிழமை மாலை 6.00 மணிக்கு மடத்துகுளம் ஒன்றியக் கழகத் தோழர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
தொடக்கமாக காவை இளவரசனின் மந்திரமா தந்திரமா எனும் அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பகுதி வாழ் பொதுமக்கள் திரளாக பங்கேற்று ஆர்வத்துடன் இந்நிகழ்ச்சியை கவனித்தனர்.
பொதுக்கூட்டத்திற்கு மடத்துக்குளம் ஒன்றியத் தலைவர் கணக்கன் தலைமை தாங்கினார். ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன் வரவேற்புரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் சிவானந்தம், கழகத் தோழர்கள் சரவணன், இலக்கியா, சங்கீதா, செல்வி, ஆரியமாலா, சிந்தனை செல்வி, தாரணி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
நிகழ்வில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, விசிக மாவட்ட செயலாளர் சதீசு, திராவிடத் தமிழர் கட்சி கொள்கை பரப்புச் செயலாளர் தங்கவேலு, திமுக ஒன்றியச் செயலாளர் சாகுல் ஹமீது, தி.வி.க. மாவட்டத் தலைவர் முகில் இராசு ஆகியோர் உரையாற்றினார்கள்.
நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, குடிஅரசு நூற்றாண்டு குறித்து சிறப்புரையாற்றினார்.
கழகத்தலைவரின் உரைக்கு முன்னதாக தோழர் ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடத்தூர் இளமதி அவர்கள் நன்றியுரையாற்றினர். இப்பொதுக்கூட்டத்தில் அப்பகுதி வாழ் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
இல்லத்திறப்பு விழா!
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கடத்தூர் புதூரில் கழக ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன் – செல்வி அவர்களின் வேலுச்சாமி – குமராயி அம்மாள் இல்லத்தின் திறப்பு விழா 07.07.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் கடத்தூர் புதூரில் நடைபெற்றது.

கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் புதிய இல்லத்தை திறந்து வைத்தார்.
இல்ல திறப்பு விழாவில் பங்கேற்ற உறவினர் நண்பர்கள் மத்தியில் மாநில அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, கழகப் பொருளாளர் துரைசாமி ஆகியோர் உரையாற்றினர்.
நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் பெரியார் இயக்கம் தமிழர்களின் வாழ்வில் நிகழ்த்திய பண்பாட்டுப் புரட்சியை சுட்டிக்காட்டி இல்லத் திறப்பு விழாவை சுயமரியாதையோடு நடத்தும் பாங்கு குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
நிறைவாக இலக்கியா நன்றியுரை ஆற்றினார்.
நிகழ்வில் கழக ஏடான புரட்சிப் பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக ரூ.2000-யை அய்யப்பன் – செல்வி ஆகியோர் வழங்கினார்கள்.
இல்ல திறப்பு விழாவிற்கு முன்னதாக கடத்தூர், கடத்தூர் புதூர் ஆகிய இரு இடங்களில் கழகக் கொடி ஏற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. கழகத் தலைவர் அவர்கள் கழக கொடியினை ஏற்றி வைத்தார் நிகழ்வில் கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.
பொதுக் கூட்டம், கழகக் கொடியேற்றம் இல்லத்திறப்பு விழா ஆகியவற்றிற்கு கழகத் தலைமைக்குழு உறுப்பினர்கள் சூலூர் பன்னீர்செல்வம், காவை ஈஸ்வரன், கழக சமூக ஊடகப் பொறுப்பாளர் பரிமளராசன், கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், திண்டுக்கல் மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்தி, மாநகர அமைப்பாளர் முத்து, மாநகரத் தலைவர் தனபால், திருப்பூர் தெற்குப் பகுதிச் செயலாளர் ராமசாமி, ருத்ராபாளையம் இராசேந்திரன், திருப்பூர் அய்யப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 11.07.2024 இதழ்

You may also like...