பெண்ணுரிமைக்கான உரையாடல்கள் பெருகட்டும்!
பழம்பெரும் பாலிவுட் நடிகையும், சமாஜ்வாதி கட்சி எம்.பி.யுமான ஜெயா பச்சன் (அமிதாப் பச்சனின் மனைவி) சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற பெண்கள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், “தனது பேத்தி நவ்யா நவேலி நந்தாவுக்கு விரைவில் 28 வயதாகப்போகிறது. அவர் திருமண வாழ்வில் ஈடுபடுவதில் எனக்கு விருப்பமில்லை. திருமணம் என்பது காலாவதியான நடைமுறை. இன்றைய தலைமுறையினருக்கு அறிவுரை கூறும் அளவுக்கு என்னுடைய வயதும் இல்லை. இப்போதைய குழந்தைகள் நம்மை விட மிகவும் புத்திசாலிகள். திருமணத்தின் சட்டப்பூர்வ அங்கீகாரம் மட்டுமே ஒரு உறவைத் தீர்மானிக்காது. வாழ்க்கையைச் சிக்கலாக்கி கொள்ளாமல், அப்படியே அனுபவித்துக் கொண்டாடுங்கள்” என்று பேசியிருக்கிறார். இது ஏதோ தனி நபரின் கருத்து என்ற அளவில் சுருக்கிப் பார்க்க வேண்டியதல்ல. பெண்களின் உளவியல் போக்கும் ஏற்படும் பண்பு மாற்றமாக இப்பேச்சை கருத வேண்டியுள்ளது. வளர்ந்த நாடுகளில் இந்த கருத்தாக்கம் பொதுச்சமூகமாக உளவியலாகவே மாறியிருக்கிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். குறிப்பாக, அமெரிக்காவில் 2030-ஆம் ஆண்டுக்குள்...
