வினாக்கள்… விடைகள்…
ட திருநாவலூர் காவல் நிலைய போலீஸ்காரர் ரமேஷ் பாபு, தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் சேகுவேரா படத்தை ஒட்டி வைத்ததற்காக காவல் நிலைய ஆய்வாளரால் தண்டிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டார். – செய்தி சேகுவேரா படத்துக்கு பதிலாக இவர் ஏதாவது கடவுள் படத்தை ஒட்டியிருந்தால் எந்த நடவடிக்கையும் வந்திருக்காது. அந்தக் கடவுள் படத்தை அகற்றச் சொன்ன ஆய்வாளர் மீது தான் நடவடிக்கை பாய்ந்திருக்கும். இதற்குப் பெயர்தான் மதச்சார்பற்ற நாடாம்! ட சமூக சீர்திருத்தமும் அறிவியல் விழிப்புணர்வும் சமூகத் தில் நடந்தால் தான் மராட்டியத்தில் நிறைவேற்றப் பட்ட மூடநம்பிக்கைக்கு எதிரான சட்டம் வெற்றி பெற முடியும். – ‘இந்து’ ஏடு தலையங்கம் மிக்க மகிழ்ச்சி. இதே கருத்தை தமிழ்நாட்டில் மூட நம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரங்களுக்கு அரசு தடை போடும்போது ‘இந்து’ ஏடு எழுதாமல் மவுனம் காப்பது தான் நமது பகுத்தறிவுக்கு புலப்படாமல் இருக்கிறது! ட தமிழ்நாட்டில் கருத்துரிமைக்கு எதிரான...