இரு சக்கர வாகனப் பேரணிகள்; கழகக் கொடியேற்றங்கள்!: பெரியார் பிறந்த நாள் விழா எழுச்சி!

பெரியாரின் 135 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ஈரோட்டில் 17 இடங்களில் கொடியேற்று விழா மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. 22.9.2013 அன்று காலை 9.30 மணிக்கு ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவிலுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு கொடியேற்றப்பட்டது. கழகப் பொருளாளர் ஈரோடு இரத்தினசாமி தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் செல்லப்பன், மாவட்டச் செயலாளர் சண்முகப்பிரியன் முன்னிலை வகித்தனர். மாவட்டப் பொருளாளர் சுகுணா, ஈரோடு நகரத் தலைவர் திருமுருகன், செயலாளர் சிவானந்தம், மாவட்ட அமைப்பாளர்கள் செல்வராசு, குமார், அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவக்குமார், அறிவியல் மன்ற  மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ், லோகநாதபுரம் மோகன், கிருஷ்ணன், வெங்கட், கலைமதி, பள்ளிபாளையம் ரமேஷ், புகைப்படக் கலைஞர் எழில் ஆகியோர் உள்பட 74 தோழர்கள் இந்நிகழ்வில் பங்குக் கொண்டனர். ஈரோடு மண்டலச் செயலாளர் இராம. இளங்கோவன், சென்னை வழக்கறிஞர் திருமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.

பெரியார் சிலையிலிருந்து தோழர்கள் ஊர்வலமாக இரு சக்கர வாகனங்களில் அணிவகுத்துச் சென்றனர். அணி வகுப்பின் முன்பாக இரண்டு இரு சக்கர வாகனங்களில் கழகக் கொடியினை ஏந்திய தோழர்கள் எழுச்சி முழக்கமிட்டுச் சென்றனர். அதற்கு; பின்னால் சென்னிமலை வெப்பிலியில் உள்ள கழகத் தோழர் வேலு தலைமையில் வந்த புதிய தோழர்கள் சுமார் 18 பேர் பறைமுழக்கத்துடன் வேனில் வந்தனர். இவர்கள் அனைவரும் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஏறத்தாழ 25 இரு சக்கர வாகனங்களில் தோழர்கள் ஊர்வலமாக அணிவகுத்து வந்தனர். பெருமாள் மலையில் கொடியேற்றிய கழகத் தோழர்களுக்கு காலை உணவை மாவட்ட அமைப்பாளர் மரவபாளையம் குமார் ஏற்பாடு செய்திருந்தார். கழக ஆதரவாளர் தங்கராசு தேநீர் வழங்கினார். மதியம் வெள்ளோடு இலட்சுமிபுரம் பகுதியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மூர்த்தியின் இல்லத்தில் தோழர்கள் கருங்கவுண்டன் வலசு ரமேசு, அழகன், வடுகபாளையம் அஜீத்குமார், சென்னிமலை செல்வராசு ஆகியோர் சிறப்பான மதிய அசைவ உணவை ஏற்பாடு செய்திருந்தனர். ஊர்வலம் வடுகபாளையம், கே.ஜி.வலசு வழியாகச் சென்று சென்னிமலையில் நிறைவடைந்தது. மாநிலப் பொருளாளர் இரத்தினசாமி, அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவக்குமார் ஆகியோர் உரையாற்றினர்.

ஈரோடு ரங்கம்பாளையம் பகுதியிலுள்ள கலைக் கல்லூரி மாணவர் விடுதி முன்பு கழகக் கொடியேற்றப்பட்டது. அப்பகுதியில் ஏற்கனவே நமது இயக்கம் சார்பாக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளால் ஈர்க்கப்பட்டிருந்த அந்தியூர்  செந்தில்குமார் உள்பட கல்லூரி மாணவர்கள் 7 பேர் தாங்களும் பயணத்தில் வருவதாகக் கூறி இறுதி வரை பங்கேற்றனர்.

ஒவ்வொரு பகுதியிலும் கொடியேற்றிய தோழர்கள் : பெரியார் சிலை – ஈரோடு நகரத் தலைவர் முருகன், பெருமாள்மலை – பெருமாள்மலை கிளைத் தலைவர் ராசண்ணா, மரவபாளையம் – ரமேஷ்குமார், கொங்கம்பாளையம் – சித்தோடு ஒன்றியத் தலைவர் சத்தியராசு, சத்யா நகர் – விஜயகுமார், பெரியார் நகர் – அறிவியல் மன்றம் மோகன்ராஜ், காளைமாட்டு சிலை – அந்தியூர்  செந்தில்குமார், லோகநாதபுரம் பெரியார் படத் திறப்பு – வழக்கறிஞர் திருமூர்த்தி, கொடியேற்றம் – மண்டலச் செயலாளர் இராம. இளங்கோவன், நாடார்மேடு – மாவட்டச் செயலாளர் சண்முகப் பிரியன், சூரம்பட்டி 4 சாலை – மாவட்டத் தலைவர் செல்லப்பன், சூரம்பட்டி வலசு – ரமேஷ் குமார், அரசு மருத்துவமனை – தமிழ்நாடு மாணவர் கழகம் இசைக் கதிர், ரங்கம்பாளையம் – தோழியர் கலை, வடுகபாளையம் – கவுன்சிலர் பழனிச்சாமி, கருங்கவுண்டன் வலசு – சென்னிமலை ஒன்றிய தலைவர் ரமேஷ் குமார், சென்னிமலை – மாவட்ட அமைப்பாளர் செல்வராசு.

கொளத்தூரில்

பெரியாரின் 135 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு செப்.17, காலை 8.30 மணி முதல் மாலை வரை கொளத்தூர் ஒன்றியம் முழுவதும் சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கு.சூரியகுமார் தலைமையில் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு இனிப்புகள் வழங்கி, பெரியார் பிறந்த நாள் விழாவை கொண் டாடினர். தார் காடு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் மாணவ மாணவி யருக்கு பேச்சுப் போட்டி, கட் டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை தோழர்கள் தர்மலிங்கம், குமரேசன், மணி, பிரபாகரன் ஆகியோர் செய்திருந்தனர். கோவிந்தராசு முயற்சியில் கொளத்தூர் திருவள்ளுவர் நகரில் கொடிக்கம்பம் அமைத்து கழகக் கொடி யேற்றப்பட்டது. 35 இரு சக்கர வாகனங்களில் தோழர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.

கழகக் கொடிகள் கீழ்க்கண்ட இடங்களில் ஏற்றப்பட்டன. கொளத்தூர் சோதனைச் சாவடி – மணி, பேருந்து நிலையம் – தர்மலிங்கம், பழைய பேருந்து நிலையம் – சி.எஸ். சுப்பிரமணியம், தெற்கு ராஜ வீதி – செல்வம், வாழ்குறிச்சி – பெரியசாமி, வடக்குராஜவீதி – நல்லதம்பி, திருவள்ளுவர் நகர் – கோவிந்தராஜ், உக்கம்பருத்திக் காடு – சித்ரா, தார்காடு – இராமசாமி ஆசிரியர், தார் காடு பேருந்து நிறுத்தம் – சுப்பிரமணி, லக்கம்பட்டி – மாதவி, மேட்டுக் கொட்டாய் – சுதா, பெரியதண்டா – சக்திகுமார், நீதிபுரம் – விஜயகுமார்.

பெரியார் முழக்கம் 03102013 இதழ்

You may also like...