கோவில் தங்கத்தை முடக்காதே: கழகத்தின் ஆர்ப்பாட்டங்கள்
தூத்துக்குடியில்
நாட்டின் பொருளாதாரத்தை சீர் செய்திட கோயில்களில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை பயன்படுத்த வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட கழக சார்பில் 13.9.2013 அன்று பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை ஆதி தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலாளர் கண்ணன் தொடங்கி வைத்தார். நெல்லை மண்டலச் செயலாளர் கோ.அ.குமார், பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் விளக்கவுரையாற்றினர். மாவட்டச் செயலாளர் மதன், பொருளாளர் இரவி சங்கர், துணைத் தலைவர் வே.பால்ராசு, துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், மாநகரத் தலைவர் பிரபாகரன், செயலாளர் பால். அறிவழகன் மற்றும் பல தோழர்களும், ஆதித் தமிழர் பேரவைத் தோழர்களும் கலந்து கொண்டனர்.
நாகர்கோயிலில்
13.9.2013 அன்று கழக சார்பில் கோயிலில் முடங்கிடும் தங்கத்தைப் பொருளாதார சீர்கேட்டை தடுப்பதற்குப் பயன்படுத்தக் கோரி நாகர்கோயிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட் டத்தில் வழக்குரைஞர் வே.சதா (மாவட்ட செயலர்), சூசையப்பர் (மாவட்ட தலைவர்), ஜெபக்குமார் (மாவட்ட பொருளாளர்), சிதம்பரம் (மாவட்ட செயலாளர், ஆதித் தமிழர் பேரவை), சபையார்குளம் இராஜேந்திரன் உள்பட தோழர்கள் பங்கேற்றனர். ஆதித் தமிழர் பேரவைத் தோழர்கள் கதிரவன், போஸ் , குமரேசன், ஜெகன், விஜயகுமார் விளக்கவுரையாற்றி னர். மாவட்ட அமைப்பாளர் சேவியர் நன்றி கூறினார்.
திருப்பூரில்
கழகத்தின் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா செப். 17 மாலை 5.30 மணிக்கு திருப்பூர் பெரியார் சிலை அருகில் கொள்கை முழக்க உறுதியேற்பு நிகழ்வாக வும், பொருளாதார நெருக்கடியை சமன் செய்ய கோயில் நகைகளை அரசு கையகப்படுத்தக் கோரியும் காவல்துறையின் தடையையும் மீறி ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இந்நிகழ்வில் 73 தோழர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கோவை மண்டல அமைப்புச் செயலாளர் பல்லடம் விஜயன் தலைமை தாங்கினார். மாநில செயல் தலைவர் துரைசாமி, திருப்பூர் மாநகர தலைவர் சண்முகம், மாநகர செயலாளர் ஜீவா நகர் குமார், மாவட்ட செயலாளர் அகிலன், முகில்ராசு, உடுமலை நகர அமைப்பாளர் மலரினியன், சுயமரியாத கலை பண்பாட்டுக் கழக மாவட்ட அமைப்பாளர் பாரதி வாசன், தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் பாண்டிதுரை, சவுந்தர், காட்டு ராஜா, கவுதம் மற்றும் 6 பெண்கள், குழந்தைகள் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட அமைப்பாளர் கிளாக்குளம் செந்தில் நன்றி கூறினார்.
பெரியார் முழக்கம் 10102013 இதழ்