மோடி கூட்டத்துக்காக 10000 பர்தா

மத்தியப் பிரதேசம், போபாலில் நடைபெறும் நரேந்திர மோடியின் பொதுக் கூட்டத்துக்காக முஸ்லீம் பெண்கள் அணியும்  10,000 பர்தாக்கள் தைக்கப்பட் டுள்ளன என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங் தெரிவித்தார்.

“பர்தாக்களை தைத்த டெய்லர் ரூ.44.60 லட்சத் துக்கு ரசீது கொடுத்துள்ளார். இதில் ரூ.42 லட்சத்தை ரியல் எஸ்டேட் நிறுவனம் செலுத்தியுள்ளது” என்றார்.

டெய்லர் அளித்த கட்டண ரசீதையும் செய்தி யாளர்களிடம் அவர் காண் பித்தார். இதனிடையே காங் கிரசின் குற்றச் சாட்டை  மறுத்துள்ளார் மத்தியப் பிரதேச பா.ஜ.க. மூத்த தலைவர் தீபக் விஜய் வர்ஜியா.

மோடிக்கு கருப்புக்கொடி: திருச்சியில் கழகத்தினர் கைது

26.9.2013 அன்று திருச் சிக்கு வருகை தந்த நரேந்திர மோடிக்கு எதி ராக திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார் பாக காலை 11.30 மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகில் மாவட்டத் தலைவர் மீ.இ. ஆரோக்கிய சாமி தலைமையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மண்டல அமைப்பாளர் புதியவன், மாவட்டச் செயலாளர் கந்தவேல்குமார், மாவட்ட அமைப்பாளர் குணா, நாகை மாவட்டச் செயலாளர் மகேஷ், திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் காளிதாஸ், தஞ்சை மாவட்ட அமைப்பாளர் பாரி, பெரம்பலூர் மாவட்டத் தலைவர் தாமோதரன், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தைச் சார்ந்த தனவேந்திரன், செந்தில், திருச்சி மாவட்டத் தோழர்கள் பொன்னுசாமி, முருகானந்தம், மயிலாடுதுறை தோழர்கள் சங்கர், அன்பரசன், ரமேஷ், ஜாகிர் உசேன், இயற்கை, பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து ராஜேஷ் குமார், கற்பனை பித்தன், கண்ணையன், செந்தில்குமார் ஆகிய தோழர்கள் கைது செய்யப்பட்டனர். இரவு 9 மணிக்கு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

மாலை 6 மணிக்கு தோழர்கள் கைது செய்யப்பட்டிருந்த திருமண மண்டபத்தில் ஆதித் தமிழர் பேரவையின் நிதிச் செயலாளர் நீலவேந்தன் மறைவுக்கு வீரவணக்கம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மண்டல அமைப்பாளர் புதியவன் தலைமையேற்று நடத்தினார். விடுதலை சிறுத்தைகளின் திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் தமிழமுதன் கலந்து கெண்ட நினைவேந்தல் உரை நிகழ்த்தினார்.

செய்தி : குணா

பெரியார் முழக்கம் 03102013 இதழ்

You may also like...