இந்து அறநிலையத் துறையின் அடாவடி உத்தரவு
தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை அனைத்து கோயில் செயல் அலுவலர்களுக்கும் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளதாம். அதன்படி இனி வரும் காலங்களில் கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபங்கள், கோயிலை சுற்றி யுள்ள வளாகத்தில் நாத்திகர்களுக்கும், இந்து சமய வளர்ச்சிக்கு தொடர்பில்லாத கொள்கை உடையவர்களுக்கும் இடம் அளிக்கக் கூடாது என்றும், மது, மாமிசம் பயன்படுத்தும் கூட்டங்களுக்கும் இது பொருந்தும் என்றும், கோயில் மண்ட பங்கள், பக்தி தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அந்த உத்தரவு கூறுகிறதாம்.
வேதத்தை எதிர்ப்பவர்கள்தான் நாத்தி கர்களே தவிர, கடவுளை எதிர்ப்பவர்கள் அல்ல என்று கூறியிருக்கிறார், இறந்து போன மூத்த காஞ்சி சங்கராச்சாரி. சார் வாகம், சமணம் என்கிற கடவுள் மறுப்பு சிந்தனைகளும் இந்து மரபில் இருந்திருக் கிறது. வேதத்தை யும் வடமொழியையும் மறுத்த மறைமலையடிகள் போன்ற சைவர்களும் சங்கராச்சாரி கூற்றுப்படி நாத்திகர்கள் தான்.
அதேபோல் ‘இந்து’க்களில் பெரும் பாலோர் மாமிசம் சாப்பிடுகிறவர்கள். பல கிராமக் கோயில்களில் பூஜைகளே ஆடு, கிடா வெட்டித்தான் நடக்கிறது. இவர் களுக்கு கோயில் திருமண மண்டபங் களைப் பயன்படுத்தும் உரிமையை மறுப்பதுதான். இந்து அறநிலையத் துறையின் வேலையா? இவர்களை இந்துவாக அறநிலையத் துறை அங்கீகரிக்கவில்லையா? இந்து மதத்தின் பெயரைக் கூறிக் கொண்டு, ‘பார்ப்பனிய மதத்தின்’ கொள்கைகளைத் திணிக்க அற நிலையத் துறை முயலுகிறது. தமிழகத்தில் நடக்கும் பார்ப்பன ஆட்சியில் அற நிலையத் துறை பார்ப்பனிய பாதையில் தொடர்ந்து செயல்படுவது வன்மையான கண்டனத்துக்குரியது.
மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்தில் கைது
பகுத்தறிவுப் போராளி தபோல்கர் நினைவாக மகாராஷ்டிர அரசு பிறப்பித்துள்ள மூடநம்பிக்கை ஒழிப்பு அவசர சட்டத்தின் கீழ் நான்டிட் மாவட்டத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். சயங்கான் லியாகத் கான் (25), அமிருதின் அப்துல் லத்தீப் (40) இருவரும் எய்ட்ஸ், புற்று நோயை மாந்திரீகத்தால் குணப்படுத்துவதாக சிகிச்சை மய்யங்களை நடத்தி, மக்களை ஏமாற்றி வந்தனர். புதிய சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதால் இவர்கள் பிணையில் எளிதாக வெளி வருவது தடுக்கப்பட்டுள்ளது.
பெரியார் முழக்கம் 12092013 இதழ்