பல்லடம் ஆர்ப்பாட்டத்தில் கொளத்தூர் மணி உரை இளவரசன் மரணம்: ‘ஜாதிய’த்தின் கொலை தடையை மீறி கழகத்தினர் கைது
தருமபுரி மாவட்டத்தில் திவ்யா-இளவரசன் என்ற வெவ்வேறு ஜாதியை சார்ந்தவர்கள் ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டதால், நத்தம், அண்ணாநகர், நாய்க்கன் கொட்டாய் ஆகிய பகுதிகளில் தாழ்த்தப்பட்டோர் குடி யிருப்புகள் தீயிட்டு எரிக்கப்பட்டன. அதன் பிறகும் பிரியாமல் வாழ்ந்து வந்த ஜாதி மறுப்பு இணையர் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வந்தனர்; ஜாதி வெறியர்களின் மிரட்டல்களால் திவ்யா தனது தாயாருடன் சென்றார். இறுதியில் 4-7-2013 அன்று இளவரசனின் உடல் இரயில் தண்டவாளத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இளவரசன் சாவுக்குக் காரணமான ஜாதி வெறியர்களைக் கண்டித்து, 07-07-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 3-00 மணியளவில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையம் எதிரில், திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. கழக செயலவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையிலும், கோவை மண்டல அமைப்புச் செயலாளர் பல்லடம் விசயன் முன்னிலை யிலும் நடத்தப்பட்ட இந்த கண்டன ஆர்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கண்டன உரையாற்றினார். “ஜாதி...