தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியார் பிறந்த நாள்

தூத்துக்குடி மாவட்ட கழக சார்பில் பெரியார் 135 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 17.9.2013 காலை 9.30 மணி அளவில் பெரியார் சிலைக்கு பால்துரை மாலை அணிவித்தார். பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், மாவட்டத் தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு, செயலாளர் மதன், பொருளாளர் இரவி சங்கர், துணைத் தலைவர் வே.பால்ராசு, துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், மாநகர கழகச் செயலாளர் பால். அறிவழகன், செல்லத்துரை மற்றும் ஏராளமான கழகத்தினரும், ஆதித் தமிழர் பேரவைத் தோழர்களும் கலந்து கொண்டு, கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு முழக்கமிட்டனர்.

வடக்கு கோட்டையன் தோப்பில் கழகக் கொடியை பிரபாகரன் ஏற்றினார். ஏராளமான தோழர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர். முக்காணியில் திருவைகுண்டம் ஒன்றிய அமைப்பாளர் தே.சந்தனராசு கழகக் கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.

பெரியார் முழக்கம் 10102013 இதழ்

 

You may also like...