மேட்டூரில் வாகன பேரணி; பறை முழக்கம்

பெரியாரின் 135 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சேலம் மேற்கு மாவட்டத்தின் சார்பாக இரு சக்கர வாகன பேரணி மற்றும் கொடியேற்று விழா நிகழ்வுகள் நடைபெற்றன. காலை 10 மணிக்கு குஞ் சாண் டியூரிலுள்ள சமத்துவ புரத்தில் பெரியார் சிலைக்கு மண்டல செயலாளர் அ.சக்தி வேல் மாலை அணி வித்தார். மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவின் பறைமுழக்கத்துடன் பேரணி ஆரம்பமானது. ஜஸ்டின்ராஜ் தொடக்கவுரையாற்றினார். சமத்துவபுரத்திலிருந்து இரு சக்கர வாகன பேரணி மல்லிகுந்தத்தை நோக்கிச் சென்றது. மல்லிகுந்தத்தில் தம்புசாமி கழகக் கொடியேற்றி இலவச வேட்டி சேலைகளை வழங்கினார். தோழர்கள் அனைவருக்கும் சிறப்பான காலை உணவை மல்லிகுந்தம் தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். மேச்சேரி பேருந்து நிலையத்தில் சூரி கொடியை ஏற்றி வைத்தார். கே.ஆர்.வி. ஸ்பின்னிங் மில்லில் அருள், நங்கவள்ளியில் இந்திரா, பனங்காட்டூரில் செந்தில் கழகக் கொடிகளை ஏற்றினர். குஞ்சாண்டியூரில் தியாகி திலீபன் வாகன நிறுத்தக உரிமையாளர் அருள் அனைவருக்கும் கேக் வழங்கினார்.

ஆர்.சி. பிளாஸ்டிக் பகுதியில் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சி. கோவிந்தராசு, இராமன் நகரில் மனோகரன், சாம்பள்ளியில் இரா. முத்துக்குமார், ஆர்.எஸ். பகுதியில் பொன். முரளிதரன், என்.எஸ்.கே. நகரில் சுகுமார், தேசாய் நகரில் நாகராஜன், தங்கமாபுரிபட்டிணத்தில் இராமச்சந்திரன், சேலம் கேம்ப் பேருந்து நிறுத்தத்தில் அருள்செல்வம், ஹாஸ்டலில் நாகராஜன், காந்தி நகரில் சந்தோஷ், காவேரி கிராசில் சுந்தரம், மாதையன்குட்டையில் மா.பழனிசாமி, பெரியார் தெருவில் வேணுகோபால், புதுக்காலனியில் ஆனந்தன், தூக்கனாம்பட்டியில் பிரவீன்குமார், காவேரி நகரில் ஆசைத் தம்பி, பழைய மார்க்கெட்டில் ரங்கநாதன், நேரு நகரில் செ. மார்ட்டின், வீரபாண்டிய கட்டபொம்மன் நகரில் கதிரேசன், பாரதி நகரில் ஓட்டுநர் பாலு, திலீபன் நகரில் பூவழகன், பொன்னகரில் அ.அண்ணாதுரை, ஆஸ்பத்திரி காலனியில் சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார், ஒர்க்ஷாப் கார்னரில் அ. சுரேசுகுமார், சின்னபபார்க்கில் மு.கீதா, குமரன் நகரில் மேட்டூர் நகர செயலாளர் சு.சம்பத்குமார், பேருந்து நிலையத்தில் தா.செ. பழனிச்சாமி, பெரியார் படிப்பகத்தில் மேட்டூர் நகரத் தலைவர் பாஸ்கர் ஆகியோர் கொடியேற்றினர்.

தோழர்கள் அனைவருக்கும் மதிய உணவை வினோத் மருத்துவமனையில் மருத்துவர் ப. வீரமணி வழங்கினார். அனைத்துப் பகுதிகளிலும் தோழர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. பொது மக்களிடம் பெரியாரின் சாதனை, சிந்தனைகளை விளக்கிடும் 2000 துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. அனைத்து பகுதிகளிலும் மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவினரின் பறைமுழக்கம் முழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு குமரன் நகர் பகுதியில் மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவினரின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி நடந்தது.                  செய்தி : சி. கோவிந்தராசு

பெரியார் முழக்கம் 03102013 இதழ்

You may also like...