வினாக்கள்… விடைகள்…
சில அனுபவங்கள் காரணமாக பில்லி, சூன்யம் இருந்தாலும் இருக்கலாம் என்ற எண்ணத்துக்கு நான் வந்துள்ளேன். – ‘துக்ளக்’கில் சோ
விடாதீங்க… அவ்வளவும் பா.ஜ.க.வுக்கு விழக் கூடிய ஓட்டுகள்; உடனே வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஏற்பாடு செய்யுங்க….
தவறாக மரண தண்டனைகளை வழங்கி யுள்ளதை உச்சநீதிமன்றமே ஒப்புக் கொண் டிருக்கிறது. – ‘தினமணி’யில் முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன்
அதனால் என்ன? ஒரு அரசியல் சட்ட அமர்வை நியமித்து, தவறாக மரண தண்டனை வழங்கவும், பிறகு அதை தவறு என்று அறிவிக்கவும் உரிமை உண்டு என்று தீர்ப்பு எழுதிவிட்டால் ‘போதும்’!
திருப்பதி ‘ஏழுமலை’யான் தனது இரண்டா வது திருமணத்துக்கு “குபேரனி”டம் கடன் வாங்கினார். அதற்கு செலுத்த வேண்டிய வட்டியைத்தான் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக இப்போதும் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். -’தினத்தந்தி’ கட்டுரை.
ப. சிதம்பரம் சார்! இந்த குபேரன் கடனை தள்ளுபடி செய்து, திருப்பதி உண்டியல் வசூலை உடனே நிறுத்துங்க… அம்பானிக்கு எல்லாம் கடன் தள்ளுபடி செய்யறீங்க…
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிகம் செலவு செய்த கட்சிகளில் பா.ஜ.க.வுக்கே முதலிடம். 448 கோடி ரூபாய் செலவிட் டுள்ளது. – செய்தி
அடேங்கப்பா! நாடாளுமன்றத்தை நடக்க விடாம முடக்கவே இவ்வளவு பணச் செலவா?
திருமலையில் பிரம்மோத்சவம் நான்காம் நாள் விழா! கேட்பவர்களுக்கு கேட்ட வரம் வழங்கும் கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி இரண்டு மனைவிகளுடன் எழுந்தருளினார். – செய்தி
ரொம்ப நல்லதாப் போச்சு! தெலுங்கானாக் காரர்களுக்கு தெலுங்கனா வரமும், எதிர்ப் பாளர்களுக்கு ஒன்றுபட்ட ஆந்திரா வரமும் வழங்கி, பிரச்சினையை முடிக்கச் சொல்லுங்க.
விருத்தாசலம் – விருத்தகிரீஸ் வரர் கோயிலில் காணாமல் போன அர்த்தநாரீஸ் வரர் சிலை, ஆஸ் திரேலியா சிட்னி அருங்காட்சியகம் வந்து சேர்ந்துவிட்டது. – ‘இந்து’ ஏடு செய்தி
அட, இத பாருப்பா! மோடிக்கே அமெரிக்கா விசா கிடைக்கல்லே. அர்த்தநாரீசுவரர் – ஆஸ் திரேலியா போயிட்டாரே…
‘தீக்கதிர்’ அலுவலகத்துக்கு அக்.13, ஞாயிறு அன்று விடுமுறையாகும். – மார்க்சிஸ் ட் கம்யூனிஸ் ட் கட்சி ஏடு அறிவிப்பு
‘ஆயுத பூஜை’ பண்டிக்கைக்காக விடுமுறை என்று அறிவிக்க உங்களுக்கே கூச்சமாக இருக்குதா, தோழரே!
தேர்தல் கூட்டணி; 45 ஜாதித் தலைவர் களுடன் மருத்துவர் ராமதாசு ஆலோசனை. – செய்தி
டாக்டர் எனக்கு ஒரு ‘டவுட்டு’. இந்த 45 ஜாதி களுக்குள்ளும் காதல் திருமணங்கள் நடந்தால் கூட்டணி நீடிக்குமா? உடையுமா, டாக்டர்?
ராஜபக்சே ஆதரவாளரான சுப்ரமணியசாமி, தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் செய்வதை பா.ஜ.க.வினர் விரும்பவில்லை. ஓட்டு பாதிக்கும் என்று பயப்படுகிறார்கள். – டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி
அதெல்லாம், அவரிடம் நடக்காதுங்க. உச்சநீதிமன்றம் போய் உத்தரவு வாங்கிட்டு வந்துடுவாரு… தெரியுமுல்ல…
ரயில் கட்டணம் உயர்ந்தது. – செய்தி
உயர்ந்தது என்பது தவறு, அபாண்டம், மாற்றி யமைக்கப்பட்டுள்ளது என்பதே சரியானது, சத்தியமானது.
பெரியார் முழக்கம் 17102013 இதழ்