வினாயகன் சிலை ஊர்வலத்தை எதிர்த்து பெரியார் கைத்தடி ஊர்வலம்: கழகத்தினர் கைது
15.9.2013 ஞாயிறு அன்று சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சுற்றுச் சூழலை நதி நீரை மாசுபடுத்தும், இரசாயன வினாயகன் சிலை ஊர்வலங்களை தடை செய், கோயிலில் இருக்க வேண்டிய சிலையை வீதிகளில் அனுமதிக்காதே, தமிழகத்தை மதக்கலவர பூமியாக்காதே என்ற முழக்கங்களுடன் வினாயகன் சிலை ஊர்வலத்தை எதிர்த்து பெரியார் கைத்தடி ஊர்வலம், சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி தலைமையில் திருவல்லிக்கேணி ஐஸ்அவுஸ் காவல் நிலையம் அருகில் மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது.
போராட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்ட பொருப்பாளர்கள் பா.ஜான், வேழவேந்தன், ஆ.வேலு, ஏசுகுமார், தட்சணாமூர்த்தி, சுனில், அருள்தாசு, காஞ்சி மாவட்ட பொறுப்பாளர்கள் டேவிட் பெரியார், தினேஷ், சேகர், திருவல்லிக்கேணி பொருப்பாளர்கள் பிரகாசு, அருண், செந்தில், விழுப்புரம் அய்யனார், தமிழ்ச் செல்வி, ஜெயந்தி, அம்பிகா, புனிதா, உஷா உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் கைதாகி திருவல்லிக்கேணி சமுக நலக் கூடத்தில் வைத்து பின் விடுதலை செய்யப்பட்டனர்.
பெரியார் முழக்கம் 19092013 இதழ்