Category: குடிஅரசு தலையங்கம்

48. வாழ்க தியாகராயர்!

48. வாழ்க தியாகராயர்!

செய் நன்றி மறவாத  தமிழன், ஏன் திராவிடன் எவனுமே மறக்கக் கூடாத ஒரு பெயர் தியாகராயர். சமுதாயத்தில் சண்டாளர்களாய் – தீண்டப்படாதவர்களாய் ஆக்கப்பட்டு; இந்நாட்டிற்கு உரிய சொந்த மக்களாக இருந்தும் ஏதும் உரிமை அற்றவர்களாகி; கல்வித் துறையில் கடைசித் தரத்தில் நின்று, கல்விக்கும் நமக்கும் காத தூரம் என்று நம்ப வைக்கப்பட்டு; உத்தியோகம் என்றால் அது உயர் குலத்தோரின் தனியுரிமை, நாம் ஒதுங்கி வாழ்வதே நமக்கு ஏற்றது என்று வைக்கொண்டு நடந்த மக்கள், இன்று ஓரளவுக்காவது எல்லாத் துறைகளிலும் முன்னேறியிருக்கிறார்கள் என்றால், இந்த முன்னேற்றத்திற்கும் வித்து ஊன்றிய ஒருவர் வள்ளல் தியாகராயர்தான். இன்றைக்கு நாம் அல்லாதவர் என்கிற பெயரை வெறுக்கிறோம். இந்த நாட்டைப் பரம்பரை பரம்பரையாக ஆண்ட நாங்கள் – இந்த நாட்டின் பூர்வகுடிகளாகிய நாங்கள், ஏன் அல்லாதவர் என்கிற பட்டயத்தைப் பெறவேண்டும் என்று ஆத்திரத்தோடு கேட்கிறோம். எந்தக் காரணத்தினாலும் அல்லாதவர் என்கிற குறிப்பு எங்களுக்குப் பொருந்தாது என்பதை நிரூபித்துவிட்டோம். ஆனால்...

42. என்ன சமாதானம்?

42. என்ன சமாதானம்?

கடவுள் என்ற வார்த்தை ஒரு குறிப்பற்றதாய் இருந்துவருகிறது.  கடவுள் என்ற வார்த்தை தோன்றி எவ்வளவு காலம் இருக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. அப்படியிருந்தும் கடவுள் என்றால் என்ன? என்று இன்று எப்படிப்பட்ட ஆஸ்திகராலும் சொல்ல முடிவதில்லை. ஆகவே ஒவ்வொரு ஆஸ்திகனும், தனக்குப் புரியாத ஒன்றையே ? தன்னால் தெரிந்து கொள்ள முடியாததும், பிறருக்கு விளக்க முடியாததுமான ஒன்றையே, குரங்குப் பிடியாய்ப் பிடித்துக்கொண்டு கடவுள் என்று கட்டி அழுகிறான். கடவுளுக்கு லக்ஷணமோ, இலக்கியமோ, குறிப்போ ஏதாவதொன்று விளக்கமாய்ச் சொல்லக் கூடியநிலைமை ஏற்பட்டிருந்தால், இவ்வளவு காலத்துக் குள்ளாகக் கடவுள் சங்கதியில் இரண்டி லொன்று, அதாவது உண்டு, இல்லை என்கின்ற ஏதாவது ஒரு முடிவுக்கு உலக மக்கள் வந்திருப் பார்கள். கம்பர்கூட சீதையின் இடையை வர்ணிக்கும்போது, சீதையின் இடையானது கடவுள்போல் இருந்தது என்று வர்ணிக்கிறார். அதாவது கடவுள் எப்படி உண்டோ, இல்லையோ என்பதாகச் சந்தேகப்படக் கூடியதாய் இருக்கின்றதோ, அதுபோல் சீதையின் இடையானது கண்டுபிடிக்கமுடியாத அவ்வளவு...

35. மித்திரன் காலித்தனம்!

35. மித்திரன் காலித்தனம்!

ஊருக்கு ஒரு வழி என்றால் ஒன்றரைக் கண்ணனுக்கு ஒரு வழி என்று சொல்லுவதுண்டு. தென்னிந்தியாவுக்கு இந்தத் தனி பெருமை (குருட்டுத் தன்மை) வாங்கிக் கொடுப்பதுதான், தற்போது இங்கு அதிகாரம் செலுத்துவோரின் (திராவிடமந்திரிகளின்) ஆசை! அதாவது சென்னை மந்திரிசபையில் உள்ளவர்கள் குருடர்களாய் நடந்து கொள்கிறார்கள். அதனால் சென்னை மாகாணத்துக்கே ஒரு களங்கம். இவர்கள் தனி வழியில் செல்ல, அவர்கள் சொல்லும் வாதம் மிகக் குயுக்தியானது. அதாவது சென்னையிலுள்ள திராவிட மந்திரிகள், மற்ற மாகாணங்களோடு கருத்து ஒற்றுமையில்லாமல் வேறான கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு அவர்கள் சொல்லும் வாதம்யுக்திக்கு ? அறிவுக்கு மாறுபட்டது. இதைப் பார்க்கும்போது இவர்கள் குயுக்தி வேலைக்காரர்கள் ? அறிவுக்கு மாறுபாடான அறியாமைச் செயலைச் செய்பவர்கள். சுருக்கமாக அழிவு வேலைக்காரர்கள். தென்னிந்தியாவில் அதிகாரம் வகிப்பவர்களின் தனி சொரூபம் வெளியாகியிருக்கிறது. அதாவது திராவிட மந்திரிகள் வேஷக்காரர்கள், அவர்கள் பல வேஷமும் போடுவார்கள். உண்மையான அவர்களின் சொரூபம் இது என்று கண்டுபிடிக்க முடியாது. இப்போது வேஷங்...

34 தாழ்த்தப்பட்டோர் விடுதலையும் அரசியல் உரிமையும்

34 தாழ்த்தப்பட்டோர் விடுதலையும் அரசியல் உரிமையும்

தாழ்த்தப்பட்டோர் விடுதலையும் அரசியல் உரிமையும், இதை தாழ்த்தப்பட்டோர், விடுதலை, அரசியல், உரிமை என நான்கு வகையாகப் பிரிக்கலாம். இந்த நான்கைப்பற்றித்தான் தனித்தனியாக விளக்க வேண்டியவனாக உள்ளேன். இவைகளை முறையே தனித் தனியாக விளக்கிய பிறகே, இவ்விஷயத்தைப் பற்றிப்பேச ஒருவாறு இயலும். முதலில் தாழ்த்தப்பட்டார் என்பவர் யார்? அவர்களுடைய நிலை என்ன? என்பதை எடுத்துக் கொள்வோம். தாழ்த்தப்பட்டார் யார்? தாழ்த்தப்பட்டார் என்பது ஆதித்திராவிடர்கள் என்று சிலர் கருதுகின்றனர். சிலர் பஞ்சமர்கள் என்றும், புலையர்கள் என்றும் இன்னும் இவ்விதமாகக் கருதுகின்றனர். ஆனால் உண்மையில் தாழ்த்தப்பட்டார் யார்? என்றால், தங்களுக்கு மேல் உயர்ந்தவர்களில்லை என்று கருதுகிற ஒருசாரார் தவிர, ஒருவருக்கு மேல் ஒருவர் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களத்தனை பேரும் தாழ்த்தப்பட்டவரேயாகும். என்பது எமது அபிப்பிராயம். சிலர் ஒரு சாராருக்குத் தாழ்த்தப் பட்டவராகவும், சிலர் இரண்டு பேருக்குத் தாழ்த்தப்பட்டாராகவும், சிலர் மூன்று, நான்கு, அய்ந்து முதலிய பேருக்குத் தாழ்த்தப்பட்டவராகவும் இருக்கின்றனர். பார்க்கின் இவர்கள் யாவரும் தாழ்த்தப்பட்டாரேயாகும்....

33. இந்த முறை சரிதானா?

33. இந்த முறை சரிதானா?

இந்திய யூனியன் சுயராஜ்ஜிய ஆட்சியை, மக்களாட்சி அதாவது மக்களே மக்களையாளும் ஜனநாயக ஆட்சி என்பதாக காங்கிரஸ்காரர்கள் வருணித்துக் கொண்டு வருகிறார்கள். இந்த சுயராஜ்ஜிய ஆட்சியைப் பார்ப்பன பனியாக்களின் ஏகாதிபத்திய ஆட்சியென்றும், சூத்திரன் என்றைக்குமே தேவடியாள் பிள்ளையாக இருந்து வருவதற்குப் பலமாக அஸ்திவாரம் போடும் ஆட்சி என்றும், திராவிடன் எந்தத் துறையிலும் முன்னேறிவிடக் கூடாது என்கிற வேதத்தின் கூச்சலை நடப்பில் மெய்ப்பிக்கப் போகும் ஆட்சி என்றும் நாம் அடிக்கடி எடுத்துக்கூறி வந்திருக்கிறோம். இந்த இரண்டு வகையான கருத்தில் எது உண்மை? எது பொய்? என்பதை நன்றாய்த் தெரிந்து கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பம் பொது மக்களுக்குத் தரப்பட்டிருக்கிறது இந்திய யூனியன் அரசியல் நிர்ணய சபையினரால். இந்த அரசியல் நிர்ணய சபையின் யோக்கியதையைப் பற்றி, அதாவது 100-க்கு 4-பேர் வோட்டர்களாய் இருந்த ஒரு அமைப்பில், மிரட்டியும், ஏமாற்றியும், வெறியைக் கிளப்பியும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுள், நியமனம் செய்யப் பட்டவர்களைக் கொண்டு அமைக்கப் பட்டிருக்கும் அ.நி.சபையின் தகுதியில்லாமையைப் பற்றி,...

31. சுயராஜ்ஜியத்தில் வேறு சுய ஆட்சி ஏன்?

31. சுயராஜ்ஜியத்தில் வேறு சுய ஆட்சி ஏன்?

சுய ஆட்சியா? இது வரி ஆட்சியா? திருவரங்க நகரமன்ற வரவேற்புக்கு பெரியார் பதில் திருவரங்கம் மே.24 இன்று மாலை திருவரங்கம் நகர மன்றத்தின் சார்பில் திராவிடத் தந்தை பெரியாரவர்களுக்கு ஒரு வரவேற்பு வைபவம் பெருஞ் சிறப்புடன் நடைபெற்றது. நகர மன்றத் துணைத் தலைவர் தோழர் என். ராஜகோபாலன் நகரமன்றத்தின் சார்பில் ஒரு வரவேற்பிதழ் படித்துக் கொடுத்தார். பெரியாரவர்கள் வரவேற்புக்குப் பதிலளிக்கையில். ஸ்தல ஸ்தாபனங்கள் என்பன அந்தந்த ஸ்தல மக்களைச் சுயஆட்சிக்குத் தகுதியுடையவர் களாகப் பழக்குவதற்காகவே முன்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்த நோக்கத்திற்கு மாறாக, நாளடைவில் நகர மன்றங்களுக்கும், நாட்டாண்மைக் கழகங்களுக்கும் உள்ள அதிகாரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கப்பட்டு, இன்று சுயாட்சி என்பது சொல்லளவில்தான் என்று சொல்லப்பட வேண்டிய நிலையில் வந்துவிட்டது. இந்தியா வெள்ளையரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த போது, ஒவ்வொரு நகரங்களிலும், ஜில்லாக்களிலும் அந்தந்த மக்களுக்குச் சுய ஆட்சிக்கான ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்ட தென்றால், இன்று இந்தியாவுக்கே சுய ஆட்சி கொடுக்கப்பட்டு, நாடு முழுவதுமே...

30. வெங்கட்டராமனிஸம்

30. வெங்கட்டராமனிஸம்

16 மாதங்களுக்கு முன்னால், கொலை வெறியர்கள் கூடிய மதவெறி ஸ்தாபனமான ராஷ்டீரியசுயம் சேவக்சங்கத்திற்கு, இந்திய யூனியன் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, சட்ட விரோதமான ஸ்தாபனம் என்கிற மரணப்படு குழியைத் தோண்டினோம் என்று கூறியது. ஆனால் மதவெறி கொல்லப்படவில்லை. கொல்லப்படாத மதவெறிக்குத்தான் புதைகுழி அந்தப் புதைகுழியும், மதவெறி என்பதினுடைய உடம்பில் எந்த முக்கிய பாகத்தையும் பாதித்து விடக்கூடாது என்கிற கவலையோடும் அக்கரையோடும் தோண்டப் பட்டது. என்றுதான் சொல்லப்பட்டது. அதாவது இந்துமகா சபையின் ஒரு உட்பிரிவான சேவாசங்கத்திற்குத்தான் சட்டவிரோத ஸ்தாபனம் என்கிற பெயரேதவிர சேவாசங்கத்திற்குத் தாயும் தந்தையுமாயிருக்கிற இந்துமகா சபைக்கு அப்படி ஒரு பெயரில்லை என்று சொல்லியது. இப்படி நோகாமல் அடிக்கிறேன், ஒயாமல் அழு என்பது போல தடை விதிக்கப்பட்டிருந்தும், இந்தத் தடைபோடப்பட்ட காலத்திலிருந்தே, இந்தத் தடையைத் தவிடுபொடியாக்கவேண்டும் என்று தீர்மானித்துச் சுமார் 15 மாத காலமாகவே, அதற்கு வேலை செய்துவருகிறது ஆரியம், ஒரு பரப்பிர்மத்தின் ரூபத்தில். ஆரியத்தின் மாபெரும் கோட்டை என்று பார்ப்பனர்கள்...

28. புதிய மந்திரிசபையும் இந்தியும்

28. புதிய மந்திரிசபையும் இந்தியும்

இப்போது குமாரசாமி ராஜா அவர்களைப் பிரதமராகக் கொண்ட சென்னை மாகாணப் புதிய மந்திரிசபை, இந்த மாகாணத்தில், முக்கியமாகத் தமிழ் நாட்டைப் பொறுத்த வரையிலுமாவது, பழைய மந்திரிசபையின் இந்திக் கொள்கையிலிருந்து, ஒரளவு மாறுதலைச் செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டிருப்பதைக் கண்டு அந்த ஆசையைத் தமிழ் மக்கள் வரவேற்பார்கள். பழைய இந்திக் கொள்கையில் ஏதோ ஒரு தவறுதல் – திருத்தவேண்டிய பிழைபாடு இருக்கிறது என்பதை ஸ்துலமாகவாவது உணர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது மாத்திரமல்ல, பிழைபாட்டைத் திருத்திக் கொள்வதற்கும் முயற்சிக்கிறோம் என்பதாகக் காட்டிக் கொண்டிருக்கிறார்களே, அந்த அளவுக்காவது வரவேற்கத்தானே வேண்டும். இந்தி நுழைப்பு ? கட்டாயமாகத் தமிழ்படிக்கும் நூத்துக்குப் பத்துபேரும் படித்தாக வேண்டும் என்கிற ஏதேச்சாதிகார ஆணை ? பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆச்சாரியாரால் பிறப்பிக்கப்பட்டு, அவர் மந்திரிசபை ஓடிப்போக வேண்டிய நிலை ஏற்பட்டவுடன், அந்தத் திட்டமும் இந்த நாட்டை விட்டு ஒடிப்போன திட்டமாகும். மேலும் நூற்றுக்கணக்கான தாய்மார்களும், ஆயிரக்கணக்கான கட்டிளங் காளையரும் பச்சிளங் குழந்தைகளோடும், நாட்டுமக்களின் தந்தையோடும்,...

26. காங்கிரஸ் திராவிடத் தோழர்களுக்கு!

26. காங்கிரஸ் திராவிடத் தோழர்களுக்கு!

வகுப்புகள் ஜாதிகள் ஒழிய வேண்டும் என்கிறார்கள்; ஆனால், பார்ப்பனர்களை மட்டும் திட்டுகிறார்களே ஏன்? இது காங்கிரஸ் ஊழியர் மாநாட்டில் பேசிய ஒரு தியாக சொரூபி திராவிடக் கழகத்தின் போக்கை, அதன் நடவடிக்கையை எந்த அளவு உணர்ந்து கொண்டிருக்கிறது என்பதைப் படம் பிடித்துக் காட்டுவதுபோல் நம்மீது ? கழகத்தின் மீது சாட்டியிருக்கும் குற்றச்சாட்டு. இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை, இந்த அய்ந்தேக்கர் வாலாக்கள் மட்டும்தான், வேறு பேச்சுப் பேசுவதற்குப் வகையோ, அதற்கான வேலைத் திட்டமோ இல்லாமல், ஏதோ பேசியாக வேண்டும், அதுவும் காரசாரமாயிருக்க வேண்டும் என்று நினைத்துப் பேசிக்கொண்டு வருகிறார்கள் என்பதல்ல; பொதுவாகவே பல திராவிடத் தோழர்களும் அதாவது தியாக மூர்த்திகள் அல்லாத பல திராவிட தோழர்களும் அப்படித்தானோ என்று மயங்குகிறார்கள் அல்லது மயங்கத் தகுந்த நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த மயக்கத்தை ? தவறான எண்ணத்தை ? திரிபு உணர்ச்சியைப் போக்கும் முறையில் திராவிடக்கழகம் பத்திரிகைகளிலும், மேடைகளிலும் விளக்கி வந்திருக்கிறது என்றாலும், அந்த விளக்கத்தைப்...

19. பொறுத்துப் பார்ப்போம்

19. பொறுத்துப் பார்ப்போம்

உண்மை தோற்றது, பொய்ம்மை வெற்றி பெற்றது. நாணயம் நலிந்தது, நம்பிக்கைத் துரோகம் செழித்தது. யோக்கியதைக்குமதிப்பு இல்லை, அயோக்கியத்தனத்திற்கு ஆடம்பர வரவேற்பு ?  இவை இன்று இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்களின் பேச்சு. ஆம்! ஓமந்தூரார் என்றைக்கு, தான் ராஜினாமாச் செய்யப்போவதாகச் சொன்னாரோ, அன்று முதல் சென்ற 10- நாளாக எங்கும் இதே பேச்சுத்தான். இவ்வளவுக்கும் ஒமந்தூரார் ஆட்சியில், இந்த நாட்டு மக்களின் குறைபாடுகள் எல்லாம் போக்கடிக்கப்பட்டன, வயிறார மக்கள் பசி தீரவுண்டனர், அறியாமை அழிக்கப்பட்டு மக்கள் அறிவில் உயர்ந்து விளங்கினர் என்று சொல்லக்கூடிய நிலையில்லை. இன்னும் சொல்லப்போனால், ஓமந்தூரார் ஆட்சியில்தான் இந்த நாட்டுத் தொழிலாளிகள் ஈவு இரக்கமற்ற முறையில் ஒடுக்கப் பட்டார்கள். மொழிப்பற்று உடைய இளங்காளையரும், தாய்மாரும் மூர்க்கத்தனமான வழிகளால் – காட்டுமிராண்டிப் போக்கோடு தாக்கப் பட்டனர். இன்னும் எத்தனை எத்தனையோ தொல்லை! இருந்தாலும் ஒமந்தூராரின் ராஜினாமா, உண்மைக்கும் நாணயத்திற்கும் யோக்கியதைக்கும் ராஜினாமாவாகக் கருதப்படுகிறது என்றால், இதிலுள்ள உண்மை என்ன என்பதை, ஓமந்தூராரை...

18. தோழர் அழகிரிசாமி!

18. தோழர் அழகிரிசாமி!

தமிழரின் தன்மானப் போர்த் தளபதி ? அஞ்சா நெஞ்சன் ? பட்டுக்கோட்டை அழகிரிசாமியவர்கள் இயற்கை எய்தினார் என்ற சேதி எதிர் பார்த்தது எவரும் என்றாலும் செய்தியைக் கேட்டவுடன் பேரதிர்ச்சியைத் தராமலில்லை. சமுதாயத்தின் என்புருக்கியான ஆரியச் சழக்கரோடு தீவிரமாகப் போர்தொடுத்த அவரின் உடம்பை, என்புருக்கிநோய் இன்று இரையாகக் கொண்டுவிட்டது. தோழர் அழகிரி ? ஆம்! தோழமை என்பதன் தத்துவத்தை நன்குணர்ந்த அழகிரியவர்கள், இறப்பை, இன்றோ நாளையோ என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்தான். அப்படி எதிர் பார்க்க வேண்டிய நிலையில், தன்னுடைய வாழ்வைப் பற்றிப் பெருங்கவலை கொள்ளாதவராய் இருந்துவர, தன்னை அவர் பழக்கிக் கொண்டவர் என்று கூறினால் அது தவறில்லை. சானடோரியத்தில் இருப்பதைக் காட்டிலும் அவர் தன்னுடைய வீட்டுக்குச் சென்று ஓய்வு பெற்றுக்கொள்வது நல்லது இது, அவர் பெருந்துறை சானடோரியத்துக்குத், தோழர்களின் தூண்டுலால் போனபோது அங்குள்ள டாக்டரால் கூறப்பட்ட ஆலோசனை. சாவதை ஆஸ்பத்திரியில் சாவாதே, வீட்டுக்குப்போய் இறந்துவிடு என்பதுதான் இதன் கருத்து. இதை டாக்டர் கூறுவதற்கு...

16. ஸ்தல சுயாட்சி

16. ஸ்தல சுயாட்சி

இந்த மாதம் 12 தேதி திராவிடத் தந்தை பெரியாரவர்களுக்குத் திருச்சி நகரசபை அளித்த சிறப்பு மிக்க வரவேற்பு, நம் காங்கிரஸ் தோழர்களுக்கு ? மந்திரிமார்களுக்குப் பெரும் மனக்கசப்பைத் தருமென்று கூறப்படுமானால், அங்கு பெரியார் கூறிய கருத்துக்கள், எத்தனையோ மடங்கு அதிகமான மனக்கசப்பை அவர்களுக்கு நிச்சயமாகத் தந்திருக்க வேண்டும். பெரியாரவர்கள் அந்த வரவேற்புக்குப் பதில் கூறும்போது, இன்றைய ஸ்தல ஸ்தாபனங்கள் சுயேச்சையாகச் செய்யக்கூடிய செயல்கள் இரண்டு; ஒன்று வரவேற்பு வழங்குவது, மற்றொன்று திருவுருவப்படம் திறந்து வைப்பது என்று கூறியிருப்பது வெறும் வேடிக்கைக்காகக் கூறிய விஷயமல்ல. இன்றைய ஸ்தலஸ்தாபனங்களின் உண்மையான யோக்கியதை அவ்வளவுதான். ஸ்தல ஸ்தாபனங்களில் முக்கியமாக முனிசிபாலிட்டிகள், பஞ்சாயத்துப் போர்டுகள் என்பவைகளில் அங்கம் வகிக்கும் எவரும் அந்த ஸ்தாபனங்களால் அந்த நகருக்கோ, ஊருக்கோ எந்த ஒரு பொது நன்மையையும் செய்ய முடியாத அளவில்தான் அவர்களுடை அதிகாரம் பறிமுதல் செய்யப் பட்டிருக்கிறது. பறிமுதல் என்று ஏன் கூறுகிறோமென்றால், ஸ்தல ஸ்தாபன அமைப்பு முறையே அந்த...

14. கோபால் மத்தாய் கூட்டுத்திருப்பணி!

14. கோபால் மத்தாய் கூட்டுத்திருப்பணி!

எதனால் வந்தது என்று புரிந்து கொள்ள முடியாமலும், தலைவர்களால் புரியவைக்கவும் முடியாத நிலையில், அர்த்தராத்திரியில் வந்து புகுந்த சுயராஜ்ஜியம், இன்று நாட்டைப் பெரும் அலங்கோலப்படுத்தி விட்டது. இந்தச் சுயராஜ்ஜியம், பார்ப்பனச் சுயராஜ்ஜியமே தவிர, பாட்டாளி மக்களுக்குச் சுயராஜ்ஜியமல்ல என்று நாம்விளக்கிய போது தூற்றப்பட்டோம். பாடுபடாத புளியேப்பக்காரர்கள் பவுசோடும் படாடோபத்தோடும் வாழத்தான் இந்தச் சுய ஆட்சி, பாதை அமைக்குமே தவிர, பாடுபட்டுழைத்துழைத்துப் பசியினால் வாடும் பசியேப்பக் காரர்களின் பசியைப் போக்க வழிவகுக்காது என்று கூறியபோது நாம் பழித்துப் பேசப்பட்டோம். உழைக்காத கும்பல் உடல் மினுப்புக் குன்றாமலிருக்க, தொந்தி வாடாதிருக்கத்தான், இந்த உத்தமர்களின் சுய ஆட்சி உருவாகி இருக்கிறதே தவிர, ஒட்டிய வயிற்றோடு உழைத்துருக்குலையுமினம் ஒரு அங்குல அளவுகூட முன்னேற, இது உதவி செய்யாது என்று நாம் உரைத்த போது, அதை உணர மறுத்தார்கள் நாட்டு மக்கள். வேதியர்களின் ஆசீர்வாதத்தோடு விளக்கம் தெரியாமல் நுழைந்த சுய ஆட்சிக்குக்காரணம், வெள்ளையர் – பனியாக்கள் கூட்டுச்சதி என்று...

13. பார்ப்பனர்களின் சிந்தனைக்கு!

13. பார்ப்பனர்களின் சிந்தனைக்கு!

கூழுக்குப் போட உப்பு இல்லையே என்பது ஒரு கவலைதான்! குறைதான்! பாலுக்குச் சர்க்கரை இல்லையே என்பதும் ஒரு கவலைதான்! குறைதான்! காலுக்குச் (நடப்பதற்கு) செருப்பு இல்லையே என்பதும் ஒரு கவலைதான்! குறைதான்! பல்லக்குக்கு (உட்காருவதற்கு) பட்டு மெத்தை இல்லையே என்பது ஒரு கவலைதான்! குறைதான்! கூழுக்கு உப்பு, பாலுக்குச் சர்க்கரை இரண்டு நாக்கு ருசிக்காகத்தான்! காலுக்குச் செருப்பு, பல்லக்குக்குப் பட்டு மெத்தை இரண்டும் அங்கங்களின் நலத்தைக்காப் பாற்றுவதற்காகத்தான்! ஆனால், கூழுக்கு உப்பு, காலுக்குச் செருப்பு வேண்டுமென்கிற கவலை வேறு! பாலுக்குச் சர்க்கரை, பல்லக்குக்குப் பட்டுமெத்தை வேண்டுமென்கிற கவலைவேறு! முந்தியது, குறைந்த பட்சமான கூழைக்குடித்தாவது உயிர் வாழவேண்டுமே என்கிற முயற்சி; இறக்கும் வரையிலும் இடையறா துழைக்க, எவ்வித இடையூறும் வந்து விடக்கூடாதே என்கிற முன்னெச்சரிக்கை! பிந்தியது, உயர்ந்த பட்சமாய், உணவுக்கு மேற்பட்டதாய், மேனி மினுமினுப்பை வேண்டி மேலான நறுமணத்தோடு தீஞ்சுவையையுடைய பாலுக்கு, மற்றொரு சுவையையும் ஊட்டி மகிழ்ச்சியோடு பருகவேண்டும் என்கிற முயற்சி; தனக்காக...

8. கண் திறக்குமா?

8. கண் திறக்குமா?

உலகில் யார் யார் அடாத வழியில் பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம், மற்றவர்கள், அந்த வழியை, அக்கிரமமான அடாதவழி என்று உணர்ந்து கொண்டு, அந்த வழி கூடாது! என்று உரத்த குரலிலே ஓங்கிக் கூறுவது கேட்டுப் பெருங் கஷ்டமாக ? சகிக்க முடியாததாக இருக்கலாம். ஆனால் விழிப்புணர்ச்சி வினையாற்றத் தொடங்கி விட்டால், விபரீத நடத்தையாளர்கள் அவற்றை விட்டுவிடவேண்டும்; இன்றேல் விரைவாகவே ஒழிந்துபட வேண்டும் என்பது, வெகு வெகு நீண்ட காலமாகவே சரிதம் கூறிவரும் உண்மை. உழைக்காமலிருந்து கொண்டே, உல்லாச வாழ்வு வாழ வேண்டும் என்றெண்ணுகிறவர்கள் அல்லது அந்த முறையில் பழகியவர்கள் அல்லது அப்படிப் பழக்கப்படுத்தப்பட்டவர்கள் ஆகிய இந்த ஒருவகையார்தான் சமுதாய ஒழுங்குக்கு ? சமாதானத்திற்கு வைரிகள், அவற்றை விரட்டியடிக்கும் விஷக் கிருமிகள் என்பதை உலக முழுவதுமே உணரத் தலைப்பட்டு விட்டது; அதுமட்டுமல்ல ஒழிக்கவும் தலைப் பட்டுவிட்டது. இந்த உல்லாசபுரியினருக்கு அன்று தொட்டு இன்றுவரை, அவர்களின் உல்லாசபுரி ஒழிந்துவிடாவண்ணம் பாதுகாத்துவரும் அரண்கள் பலவுண்டு....