தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு

 

1879  செப்.17, ஈரோட்டில் பெரியார் பிறந்தார்.

1898  13 வயது நாகம்மையாரை மணம் முடித்தார்.

1902  சாதி ஒழிப்பு கலப்பு திருமணங்களை நடத்திவைத்தார். அனைத்து சாதியினர், மதத்தினருடன் சமபந்தி போஜனம் நடத்தினார்.

1907  காங்கிரசில் ஆர்வம். ஈரோட்டில் பிளேக் நோய் பரவிய போது யாரும் முன்வராத நிலையில் துணிந்து மீட்பு பணி ஆற்றினார்.

1909  தனது தங்கையின் மகளுக்கு விதவை மறுமணம் செய்வித்தார்.

1917  பொதுநலத் தொண்டர் ஈரோடு நகர் மன்றத் தலைவர் ஆனார்.

1920  காங்கிரசில் சேரும்போது 29 புதுப் பொறுப்புகளை தூக்கி எறிந்தார். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றுச் சிறை சென்றார்.

1921  கள்ளுக்கடை மறியலில் பங்கேற்றுச் சிறை சென்றார்.

1924  வைக்கம் போராட்டம். வ.வே.சு. அய்யரின் சேரன்மாதேவி குருகுலத்தின் வருணாசிரம நடவடிக்கையை எதிர்த்தார்.

1925  குடி அரசு ஏடு துவக்கம். காஞ்சிபுரம் காங்கிரசு மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானம் கொண்டுவர முயன்று தோல்வி. காங்கிரசை விட்டு வெளியேறினார்.

1927  பெங்களூரில் காந்தியாரைச் சந்தித்து உரையாடினார்.

1928  பெரியார் ஆதரவில் முத்தையா (முதலியார்) வகுப்புரிமையை அமும்படுத்தல் ரிவோல்ட் ஆங்கில இதழ் தொடங்கினார்.

1929  செங்கற்பட்டில் முதல் மாகாண சுயமரியாதை மாநாடு, மலேசியா சுற்றுப் பயணம் செய்தார். புரட்சித் தீர்மானங்கள் நிறைவேற்றம்.

1931  அய்ரோப்பிய சுற்றுப்பயணத் தொடக்கம்.

1932  எகிப்து, கிரிஸ், துருக்கி, ரஷ்யா, இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, போர்ச்சுக்கல், இத்தாலி, பிரான்ஸ், நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து உலக அனுபவங்களுடன் திரும்பினார்.

1933  நாகம்மை மறைவு. திராவிடன் இதழ் தொடர்பாகச் சிறைவாசம். புரட்சி வார இதழ் தொடக்கம். ஈரோடு சமதர்மத் திட்டம் உருவாதல் அரசு வெறுப்புக் குற்றத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

1934  புரட்சி இதழ் நிறுத்தப்பட்டு பகுத்தறிவு இதழ் தொடக்கம்.

1935  பெரியார் சமதர்மத் திட்டம் ஏற்கப்பட்டதால் நீதிக்கட்சிக்கு ஆதரவு.

1938  இந்தித் திணிப்பை எதிர்த்துச் சிறை சென்றார். பெண்கள் மாநாட்டில் பெரியார் பட்டம் பெற்றார். டிசம்பர் 29-இல் சிறையில் இருக்கும்போதே நீதிக் கட்சிக்குத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

1940  வடநாட்டுச் சுற்றுப்பயணம். பம்பாயில் ஜின்னா, அம்பேத்கருடன் சந்திப்பு. ஆட்சிப் பொறுப்பை மேற்கொள்ள கவர்னர் ஜெனரல் வலியுறுத்தியதை இரண்டு தடவைகளிலும் ஏற்க மறுத்தார்.

1944  நீதிக்கட்சி திராவிடர் கழகமாக மாற்றப்பட்டது.

1948  கருஞ்சட்டைப் படைக்குத் தடை. தூத்துக்குடி மாநாடு. இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராட்டம், கைது செய்யப்பட்டார்.

1949  மணியம்மையாரை மணம் முடித்தார்.

1951  வடவர் எதிர்ப்புப் போராட்டம் தொடர்பாகக் கைது. வகுப்புரிமைக்கு ஆதரவாக முதல் அரசியல் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது.

1952  குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்துப் போராட்டம். ஒரே சிறையில் அண்ணாவும் அய்யாவும்.

1953  மூடநம்பிக்கை ஒழிய பிள்ளையார் உருவ பொம்மைகள் உடைப்பு.

1954  குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு போர். பெரியார் ஆதரவுடன் காமராசர் முதல்வராகி 6000 தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டன.

1956  சாதி ஒழிப்பு – இராமன் பட எரிப்புக்காக கைது செய்யப்பட்டார்.

1957  சாதி ஒழிப்பு – சட்ட எரிப்பு போராட்டம். சிறைவாசம்.

1958  பெரியார்  லோகியா சந்திப்பு. பிராமணாள் பெயர் அழிப்பு போர்.

1959  வட நாட்டுப் பயணம். இராமாயணக் கண்டனக் கூட்டங்கள்.

1964  நில உச்சவரம்புக்கு எதிரான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றக் கண்டன நாள் கூட்டங்கள் நடத்தினார்.

1967  அண்ணா முதல்வராகி ஆட்சியைப் பெரியாருக்குக் காணிக்கையாக்குதல். சுயமரியாதைத் திருமணச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

1970  உண்மை இதழ் தொடக்கம். யுனெஸ்கோ விருது வழங்கிப் பாராட்டியது.

1971  தமிழக சட்டசபையில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் நிறைவேற்றம். மாடர்ன் ரேஷனலிஸ்ட் ஆங்கில இதழ் துவக்கம்.

1973  சென்னையில் இழிவு ஒழிப்பு மாநாடு – உடல்நலம் பாதிப்பு – வேலூர் மருத்துவமனையில் அனுமதி ? 24.12.79 அன்று மறைந்தார்.

“Periyar the prophet of New Age, Socrates of South East Asia, Father of the social Reform Movement, and Arch enemy of ignorance, superstitions, meaningless customs and baseless manners” – UNESCO 27-6-1970

You may also like...