Category: செய்திகள்

இராயப்பேட்டையை  சேர்ந்த கழக ஆதரவாளர் தோழர் சபரி கழகத் தலைமை அலுவலகத்துக்கு ரூ.85000 மதிப்புள்ள இரண்டு குளிர்சாதனப்  பெட்டி -களை  நன்கொடையாக  வழங்கினார். தோழரை பாராட்டி கழகத் தலைவர் கொளத்தூர் மணி கழக வெளியீடுகளை வழங்கினார்.

இராயப்பேட்டையை சேர்ந்த கழக ஆதரவாளர் தோழர் சபரி கழகத் தலைமை அலுவலகத்துக்கு ரூ.85000 மதிப்புள்ள இரண்டு குளிர்சாதனப் பெட்டி -களை நன்கொடையாக வழங்கினார். தோழரை பாராட்டி கழகத் தலைவர் கொளத்தூர் மணி கழக வெளியீடுகளை வழங்கினார்.

கழக ஏட்டுக்கு நன்கொடை

கழக ஏட்டுக்கு நன்கொடை

கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார் அவரது மகன் இளம்பரிதியின் 12வது பிறந்தநாளை முன்னிட்டு ரூ.12000 கழக ஏட்டுக்கு நன்கொடை வழங்கினார். கழக ஏடான புரட்சிப் பெரியார் முழக்க வளர்ச்சி குழுவில் இணைந்த தோழர் இளங்கோ (சிவகங்கை மாவட்டம்) ரூ.4000, தோழர் தாமோதரன் ரூ.1000 கழக ஏட்டுக்கு நன்கொடை வழங்கினர். மேலும் குழுவில் இணைந்து செயல்பட உள்ளனர். கழகத் தோழர் அஜித் ரூ.1000 வழங்கினார். பெரியார்முழக்கம்இதழ்31072025

“விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதல்ல நீதித்துறை”

“விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதல்ல நீதித்துறை”

நீதித்துறை மீதான விமர்சனங்கள் வைக்கப்படும்போதெல்லாம் நீதிமன்ற அவமதிப்பு என்கிற “பூச்சாண்டி” காட்டப்படுவது வழக்கமாகி வருகிறது. நீதிமன்றங்களும், தீர்ப்புகளும், நீதிபதிகளின் நடவடிக்கைகளும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவையா என்றால் இல்லை…! அரசமைப்பு சட்ட சரத்து 19 (1) (a) படி இந்திய குடிமக்களுக்கு பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமையை வழங்குகிறது. இதன் பொருள், ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தனது கருத்துக்களை எந்த தடையும் இன்றி வெளிப்படுத்தவும், சுதந்திரமாகப் பேசவும் உரிமை உண்டு. ஆனால், இந்த உரிமை வரம்புகள் இல்லாமல் இல்லை. சில குறிப்பிட்ட காரணங்களுக்காக இந்த உரிமை அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படலாம். அதாவது சரத்து 19 (2) படி இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, மாநிலத்தின் பாதுகாப்பு, வெளிநாட்டு நாடுகளுடனான நட்புறவு, பொது ஒழுங்கு, கண்ணியம் அல்லது ஒழுக்கம் அல்லது நீதிமன்ற அவமதிப்பு, அவதூறு அல்லது குற்றத்தைத் தூண்டுதல் ஆகியவற்றின் நலன்களுக்காக பேச்சு மற்றும் கருத்துரிமை கட்டுப்படுத்தப்படலாம். இதில் நீதிமன்ற அவமதிப்பு என்பதைத்தான் நீதிபதி திரு.ஜி.ஆர்...

காசாவில் இனப்படுகொலை

காசாவில் இனப்படுகொலை

ஒவ்வொரு நாளும் காசாவில் இருந்து வரும் செய்திகள் உள்ளத்தை உலுக்குகிறது. இந்த படுகொலை எப்போது முடிவுக்கு வரும்? மனிதம் செத்துவிட்டதா? என்ற கேள்விகள் துளைத்தெடுக்கின்றன. நடப்பது இனப்படுகொலைதான் என்று நார்வேயில் உள்ள சர்வதேச நீதிமன்றம் அறிவித்துவிட்டது. தென்னாப்பிரிக்கா நாடு தொடர்ந்த இந்த வழக்கில் இந்த முடிவுக்கு வருவதற்கு சர்வதேச நீதிமன்றம் நீண்ட காலம் எடுத்துக் கொண்டது. 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி பாலஸ்தீன போராளி குழு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதில் இருந்து, இஸ்ரேலினுடைய தாக்குதல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இதுவரை 51,821 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்களும், குழந்தைகளும் ஆவார். சடலங்களை அடக்கம் செய்வதற்குக் கூட இடமில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. யுத்தம் தொடங்கியபோதே காசாவில் வாழ்ந்த மக்கள் 23 லட்சம் பேர். இதில் 90% பேர் இருப்பிடங்களை பலமுறை மாற்றிக்கொண்டு உயிர் வாழ்கின்ற கட்டாயத்திற்கு உள்ளானார்கள். 46 சதுர கிலோமீட்டர் பகுதிக்குள் இவர்கள் முடக்கப்பட்டுள்ளார்கள்....

காமராசர் பிறந்தநாள் விழா; சிலைகளுக்கு மரியாதை

காமராசர் பிறந்தநாள் விழா; சிலைகளுக்கு மரியாதை

திருப்பூர்: மாவட்டக் கழகம் சார்பாக 15-07-2025 மாலை 4 மணி அளவில் கழகப் பொருளாளர் சு.துரைசாமி தலைமையிலும் மாநகரச் செயலாளர் மாதவன் முன்னிலையில் அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கல்விக் கண் திறந்த காமராசர் அவர்களின் 123 வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கல்வி உரிமைப் பாதுகாப்புப் பரப்புரைப் பயணம் அனுப்பர்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகிலும், அவினாசி புதிய பேருந்து நிலையம் அருகிலும் காமராஜர் செய்த அரும்பணிகள் குறித்து மக்களிடத்தில் எடுத்துரைக்கும் விதமாக தெருமுனை கூட்டங்கள் நடைபெற்றது. நிகழ்வில் கழக முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், மாவட்டத்தலைவர் முகில் ராசு, ஆதித்தமிழர் பேரவையின் மாநில துணைப் பொதுச் செயலாளர் விடுதலை செல்வன்,மாநகரத் தலைவர் தனபால், மாநகர அமைப்பாளர் முத்து, சரஸ்வதி,தெற்குப் பகுதி அமைப்பாளர் ராமசாமி, வடக்கு ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன்,மாநகர துணைத் தலைவர் மாரிமுத்து, மற்றும் கழகத் தோழர்கள் ராஜசிங்கம்,ஸ் ரீஜா, ஆத்துப்பாளையம் மதன், முத்து...

பார்ப்பன மெகா ஊழல்

பார்ப்பன மெகா ஊழல்

சந்தா கோச்சார் ரூ.64 கோடி லஞ்சம் பெற்றது உறுதியானது. சந்தா கோச்சார் ரூ.64 கோடி லஞ்சம் பெற்றது உறுதியானது. ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சந்தா கோச்சார். வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்க ரூ.64 கோடி லஞ்சம் பெற்றது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது என தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தீர்ப்பாயம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளதாவது: அமலாக்கத் துறை வழங்கிய ஆதாரங்களின்படி சந்தா கோச் சார் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி தனது கணவர் தீபக் கோச் சார் மூலம் வீடியோகான் குழுமத்திலிருந்து ரூ.64 கோடி லஞ்சம் பெற்றது நிரூபணமாகியுள்ளது. இந்த லஞ்ச பணம் தீபக் கோச்சாரின் என்ஆர்பிஎல் நிறுவனத்துக்கு மடைமாற்றப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது. வீடியோகான் நிறுவனத்துக்கு விதிகளை மீறி ரூ.300 கோடி கடன் வழங்க அனுமதி அளித் ததற்காக சந்தா கோச்சாருக்கு அவரது கணவர் மூலம் லஞ்சப் பணத்தை வீடியோகான் குழுமம் வழங்கியுள்ளது. இதற்கான ஆதாரங்கள் பிஎம்எல்ஏ சட்ட பிரிவு 50-ன்...

உயர்கல்வி நிறுவனங்களில் ஜாதி பாகுபாடுகள்           கனிமொழி எம்பி கேள்வி

உயர்கல்வி நிறுவனங்களில் ஜாதி பாகுபாடுகள் கனிமொழி எம்பி கேள்வி

ஒன்­றிய அர­சின் மத்­திய பல்­க­லைக் கழ­கங்­க­ளில் நில­வும் தீண்­டாமை உள்­ளிட்ட பாகு­பா­டு­கள் குறித்து தி.மு.க. துணைப் பொதுச் செய­லா­ள­ரும், திமுக நாடா­ளு­மன்­றக் குழுத் தலை­வ­ரு­மான கனி­மொழி கரு­ணா­நிதி நேற்று (21-–07–2025) எழுத்­துப் பூர்­வ­மான கேள்­வி­களை எழுப்­பி­னார். “உயர் கல்வி நிறு­வ­னங்­க­ளில் சமத்­து­வத்தை மேம்­ப­டுத்­தும் நோக்­கில், யு.ஜி.சி. விதி­மு­றை­கள் 2012 இன் படி ஒன்­றிய அர­சின் மத்­திய பல்­க­லைக் கழ­கங்­க­ளில் Equal Opportunity Cells எனப்­ப­டும் சம வாய்ப்­புக் குழுக்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளதா? அப்­ப­டி­யா­னால், அதன் விவ­ரங்­கள் மற்­றும் அத்­த­கைய பிரி­வு­களை உரு­வாக்­கிய மத்­திய பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளின் எண்­ணிக்கை விவ­ரங்­கள் என்ன? இல்­லை­யென்­றால், சம வாய்ப்­புக் குழுக்­கள் அமைக்­கப்­ப­டா­த­தற்­கான கார­ணங்­கள் என்ன? ஒன்­றிய அர­சின் கல்­லூ­ரி-­­பல்­க­லைக்­க­ழக வளா­கங்­க­ளில் சாதி அடிப்­ப­டை­யி­லான பாகு­பாடு காட்­டப் பட்ட சம்­ப­வங்­கள் குறித்த தர­வு­களை அர­சாங்­கம் பரா­ம­ரிக்­கி­றதா? அப்­ப­டி­யா­னால், கடந்த ஐந்து ஆண்­டு­க­ளி­லும் நடப்பு ஆண்­டி­லும் ஒன்­றிய அர­சின் மத்­திய பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளில் நடந்த இத்­த­கைய சம்­ப­வங்­க­ளின் விவ­ரங்­கள், கல்­லூரி வாரி­யாக/பல்­க­லைக்­க­ழக வாரி­யாக...

சமரசமற்ற கடவுள் மறுப்பாளர்  வேலுபிரபாகரன் முடிவெய்தினார்

சமரசமற்ற கடவுள் மறுப்பாளர் வேலுபிரபாகரன் முடிவெய்தினார்

“,சீரிய பகுத்தறிவாளரும், திரைப்பட இயக்குநர் – நடிகர் – ஒளிப்பதிவாளருமான தோழர் வேலு பிரபாகரன் அவர்கள் (வயது 68) இன்று 18.07.2025 விடியற்காலை மறைந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமடைகிறோம். 1980-ஆம் ஆண்டில் ஒளிப்பதிவாளராக தமிழ்த் திரையுலகில் அறிமுகமான வேலு பிரபாகரன்,பின்னர் இயக்குநராகவும் உருவெடுத்தவர்.இவர் இயக்கிய ‘கடவுள்’, ‘புரட்சிக்காரன்’ போன்ற திரைப்படங்களில் தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்பு – பெண்ணுரிமைக் கருத்துக்களையும், கடவுள் மறுப்பு – பகுத்தறிவுக் கொள்கைகளையும் அழுத்தமாகப் பேசி, பொதுமக்களாலும் அத்திரைபடங்களை நேசிக்கச் செய்தவர். தன்னை நாத்திகவாதி என்று வெளிப்படையாக அறிவித்துக்கொண்டு, தமிழ்த் திரைத்துறையில் தவிர்க்க முடியாத இடத்தைத் தனக்கென கொண்டிருந்தது மட்டுமல்லாமல், திரைப்பட படப்பிடிப்புத் தளங்களில் கூட மூட நம்பிக்கை ஒழிப்புக் கருத்துக்களைப் பேசி,தன்னுடன் பணியாற்றும் திரைத்துறை நண்பர்களையும் பகுத்தறிவாளராக்கிய பெருமைக்குரியவர் வேலு பிரபாகரன். திரைத்துறையில் நடிகர் சத்யராஜ் போன்ற பலர் நாத்திகராகவும், பகுத்தறிவாளராகவும் அடிப்படைக் காரணியாய் இருந்தவர் வேலு பிரபாகரன். நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில்...

படுகொலைகளின் பீடமாகிய ‘தர்மஸ்தலா’

படுகொலைகளின் பீடமாகிய ‘தர்மஸ்தலா’

கர்நாடக மாநிலம், தர்மஸ்தலாவில் மஞ்சுநாதா என்ற கோயில் பாஜக எம்.பி வீரேந்திர ஹெக்டே கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலுக்குச் சொந்தமான‌ நிலத்தில் 100க்கும்‌ மேற்பட்ட பெண்கள் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதாகவும், உடல்களைப் புதைத்ததாகவும், மஞ்சுநாதா கோயிலின் முன்னாள் ஊழியர் பீமா கடந்த ஜீலை 4-ம் தேதி புகார் அளித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் தென் பகுதியில் உள்ள தர்மஸ்தலாவில் பத்தாண்டுகளாக பாலியல் வல்லுறவுகளும் படுகொலைகளும் நடந்து வருவதாக தற்போது ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து அவர் கூறியதாவது: 1995ம் ஆண்டு முதல் 2014 வரை, மஞ்சுநாதா கோவிலில் துாய்மைப் பணியாளராக வேலை செய்தேன். இந்த காலகட்டத்தில் கோயிலின் அருகில் ஓடும், நேத்ராவதி ஆற்றங்கரையில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிலையில், 100க்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை என் மேற்பார்வையாளர் உத்தரவின்படி புதைத்தேன்’ என வாக்குமூலம் அளித்துள்ளார். தனக்கு மேல் இருந்தவர்கள் தன்னை கொன்று‌ விடுவதாக மிரட்டியதால் இத்தனை ஆண்டுகள் அமைதியாக இருந்ததாக அவர் சொல்கிறார். குற்ற...

கீழடி ஆய்வறிக்கையை வெளியிடக்கோரி மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்

கீழடி ஆய்வறிக்கையை வெளியிடக்கோரி மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழர்களின் வரலாற்றை மறைக்கும் மோடி அரசை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக 7.7.2025 அன்று மதுரையில் திருவள்ளுவர் சிலை அருகில் கிழடி ஆய்வறிக்கையை வெளியிடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காமாட்சி பாண்டி தலைமையில், சத்தியமூர்த்தி முன்னிலையில், வாசுகி அவர்கள் நிகழ்வினை தொகுத்து வழங்கினார். சிறப்புரையாக கழகத்தின் மாவட்ட காப்பாளர் தளபதி தொடக்க உரையாற்றினார். தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனை இடம் மாறுதலுக்கு உட்படுத்திய ஒன்றிய மோடி அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அமர்நாத் ராமகிருஷ்ணனை தமிழக தொல்லியல் துறை தலைவராக தேர்ந்தெடுத்து ஆய்வினை சிறப்புடன் நடத்த வழி செய்யவும், தமிழ்நாடு அரசை திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டது. தமிழர் நாகரிகத்தை ‘பாரதீய’ நாகரிகம் என்று குழப்பும் சங்கி அடிமை மா.பா பாண்டியராஜனையும் – பாரதிய ஜனதா சங்கிகளையும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தோழமை அமைப்பு தோழர்கள் தங்களின் கண்டனத்தைப் பதிவு செய்தனர். பசும்பொன் பாண்டியன் (அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்...

திருப்பூரில் கலந்துரையாடல் கூட்டம்

திருப்பூரில் கலந்துரையாடல் கூட்டம்

மாநகர ஆலோசனைக் கூட்டம் 09-07-2025 மாலை 5 மணி அளவில் ஆத்துப்பாளையம் மதன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. தலைமை: மதன் முன்னிலை, முத்து. தீர்மானங்கள்:  விநாயகர் சதூர்த்தி என்ற பெயரில் நீர் நிலைகளில் இரசாயன பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலை கரைப்பதை தடுத்து தலைமைக் கழக வழி காட்டுதலின் படி மாவட்ட ஆட்சியர், மாசுகட்டுப்பாட்டு வாரியம், அறநிலையத் துறை, காவல் ஆணையாளர் அலுவலம் ஆகிய அதிகாரிகளிடம் சட்ட நடவடிக்கை எடுக்க வழியுறுத்தி நேரில் மற்றும், பதிவு தபால் மூலம் புகார் விண்ணப்பம் வழங்குவது.  கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனை கூட்டம் நடத்துவது.  பெரியார் முழக்க வளர்ச்சி நிதி வழங்குதல் கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் பிறந்தநாள் விழா பொது கூட்டம் 15 வேலம்பாளையம் பகுதியில் நடத்துவது மற்றும் தோழர் மலரவன் அவர்களின் படத்திறப்பு மற்றும் பொதுக்கூட்டத்திற்கு கழகத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளரை...

சேலத்தில் கழக தெருமுனைக் கூட்டம்

சேலத்தில் கழக தெருமுனைக் கூட்டம்

“இந்தியாவே திரும்பிப் பார்க்கும் திராவிட மாடல்” என்ற தலைப்பில் சேலம் மாநகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தெருமுனைக் கூட்டம் 05.07.2025 அன்று பொன்னம்மாப்பேட்டை தண்ணீர் தொட்டி அருகில் மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்திற்கு சேலம் மாநகரத் தலைவர் பாலு தலைமை வகித்தார். சேலம் மாநகர அமைப்பாளர் தேவராஜ் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் சேலம் மாநகரச் செயலாளர் ஆனந்தி, சேலம் மாநகர தலைவர் பாலு ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். சேலம் மாநகர பொருளாளர் பிரபு மற்றும் சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வெற்றிமுருகன் ஆகியோரின் அரசியல் நையாண்டி நிகழ்வும் நடைபெற்றது. நிறைவாக நந்தகுமார் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது. தோழர்கள் அனைவருக்கும் இரவு உணவு மற்றும் தேநீர் தோழர் நந்தகுமார் அவர்கள் வழங்கினார். தோழர்கள் அருண்பாண்டியன், பாலு ராஜசேகர் ஆகியோர் கலந்துகொண்டனர். சங்கிகளின் மிரட்டல் கூட்டம் தொடங்குவதற்கு அரைமணிநேரத்திற்கு முன்பாகவே 30க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். தோழர்கள் காவல்துறை அதிகாரிகளிடம்...

வடசென்னையில் கழக கலந்துரையாடல் கூட்டம்

வடசென்னையில் கழக கலந்துரையாடல் கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் வடசென்னை கலந்துரையாடல் கூட்டம் 13.07.25 ஞாயிறு அன்று மாலை 06.30 மணியளவில் சென்னை அயனாவரத்தில் உள்ள சேத்துப்பட்டு இராஜேந்திரன் இல்லத்தில் அருள்தாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் கலந்து கொண்டார். கூட்டத்தில் புதிய தோழர்களை சேர்ப்பது வட சென்னையில் கழக செயல்பாடுகளை தீவிரப்படுத்துவது மற்றும் தெருமுனை, பரப்புரை கூட்டங்கள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. புரட்சிப் பெரியார் முழக்கத்திற்கு வடசென்னை மாவட்டம் சார்பில் 100 உறுப்பினர்களை சேர்ப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. நிறைவாக கூட்டத்தில் கலந்து கொண்ட வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு இராசேந்திரன், வடசென்னை மாவட்ட அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி, தோழர்கள் ராஜன், தினகரன், சிகாமணி, கழகப் பணிகளை முன்னெடுப்பதை குறித்து கருத்துக்களை தெரிவித்தனர். தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மாவட்டத்‌ தலைவர் வேழவேந்தன், மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், இளைஞரணி அமைப்பாளர் அருண், தமிழ்நாடு...

கழகத் தோழர் கன்னியப்பன் முடிவெய்தினார்!

கழகத் தோழர் கன்னியப்பன் முடிவெய்தினார்!

சென்னை மாவட்டக் கழகத் தோழர் கன்னியப்பன் உடல்நலக் குறைவால் கடந்த 12.07.2025 அன்று முடிவெய்தினார். அவரின் உடலுக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தினார்கள். இறுதி ஊர்வலத்தில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன், மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், மாவட்ட துணைச் செயலாளர் இராவணன், வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு ராஜேந்திரன், இளைஞரணி அமைப்பாளர் அருண், தட்சிணாமூர்த்தி, ஏசுகுமார், மற்றும் கழகத் தோழர்கள் நிகழ்வில் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 17072025இதழ்

நிமிர்வோம் வாசகர் வட்டம்

நிமிர்வோம் வாசகர் வட்டம்

நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் 28வது கூட்டம் தோழர் சிரிஜன் தலைமையில் கழகத் தலைமை அலுவலகம் மயிலாப்பூரில் நடைபெற்றது. நிகழ்வை மாவட்டச் செயலாளர் உமாபதி ஒருங்கிணைத்தார். மறைந்த கழகத் தோழர் கன்னியப்பன் அவர்களின் படத்திறப்பு நிகழ்வும் நடைபெற்றது. அரசியலாக்கப்படுகிறதா நீதித்துறை? என்ற தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார். ‘அம்பேத்கரின் முகவுரை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ரகசிய வரலாறு’ என்ற நூலை எட்வின் பிரபாகரன் திறனாய்வு செய்தார். பேராசிரியர் சுப்பிரமணியின் ‘இதழியல் களத்தில் பெரியார்- ஆய்வும் தொகுப்பும்’ நூலை ர.பிரகாசு திறனாய்வு செய்தார். நிகழ்வில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 17072025இதழ்

பெரியார் முழக்க வளர்ச்சி கலந்தாய்வு கூட்டம்

பெரியார் முழக்க வளர்ச்சி கலந்தாய்வு கூட்டம்

புரட்சிப் பெரியார் முழக்க வளர்ச்சி குறித்து இணைய வழியில் 4.07.2025 அன்று கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. பெரியார் முழக்க தற்போதைய நிதிநிலை பற்றியும், இனிவரும் காலங்களில் சந்தா சேர்ப்பதை வேகப்படுத்துவது பற்றியும், பெரியார் முழக்க வளர்ச்சி நிதி பற்றியும், ஏற்கெனவே 7000 அரசு நூலகங்களில் நமது இதழ் வாங்கிக்கொள்ளலாம் என்ற அரசாணையை நடைமுறைபடுத்துவது பற்றியும் தோழர்கள் தங்களின் கருத்தை முன்வைத்தனர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் கலந்து கொண்டனர். கழக தலைமைக் குழு உறுப்பினர்கள், கழக மாவட்ட பொருப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 17072025இதழ்

1.கழக ஏட்டுக்கு நன்கொடை வழங்கும்‌ திட்டத்துக்கு ஆதரவு கூடுகிறது!

1.கழக ஏட்டுக்கு நன்கொடை வழங்கும்‌ திட்டத்துக்கு ஆதரவு கூடுகிறது!

புரட்சிப் பெரியார் முழக்க வளர்சிக்காக நன்கொடையாளர்களை வாட்ஸ்அப் வழியாக திரட்டி மாதம் தோறும் நன்கொடை வழங்கும் சிறப்பான செயல் திட்டம் ஒன்றை தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் திருப்பூர் ஆசிரியர் சிவகாமி அவர்களும் ஈரோடு ஆசிரியர் சிவகுமார் அவர்களும் தொடங்கியுள்ளனர். 100 தோழர்களை இலக்கு வைத்து தொடங்கப்பட்டுள்ள இந்த குழுவில் ஆதரவாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் ரூ. 8000 நன்கொடையாக தரப்பட்டது. ஜூலை மாதத்திற்கு ரூ. 16,000 நன்கொடையாக வழங்கியுள்ளனர் நன்றியுடன் பெற்றுக் கொண்டோம் (ஆசிரியர்). பெரியார் முழக்கம் 17072025இதழ்

விநாயகன் அரசியல் ஊர்வலத்தை கட்டுப்படுத்துக! கழக சார்பில் காவல்துறையில் மனு!

விநாயகன் அரசியல் ஊர்வலத்தை கட்டுப்படுத்துக! கழக சார்பில் காவல்துறையில் மனு!

விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் கலவரத்தைத் தூண்டும் சங் பரிவார அமைப்புகளைக் கட்டுப்படுத்தவும், அனுமதி இல்லாத இடங்களில் சிலைகளை வைத்து மத மோதல்களைத் தூண்டுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் நடக்கும் அத்துமீறல் மற்றும் விதிமீறல்களைத் தடுக்கக் கோரியும், சிலைத் தயாரிப்பு – ஒலி பெருக்கி பயன்படுத்துதல் உள்ளிட்ட அரசு வகுத்த வழிகாட்டு நெறிகளை சரியான முறையில் பின்பற்ற வேண்டும், அதை அரசு கண்காணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நீதி மன்றங்களை மதிக்காமல் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு பேராபத்துகளை விளைவிக்கும் வகையிலும் இந்த நிகழ்ச்சியை இவர்கள் நடத்தி வருகிறார்கள். நீதிமன்ற ஆணைகள், தமிழ்நாடு அரசின் ஆணைகளை அமுல்படுத்தி கடமையாற்ற வேண்டிய காவல்துறை மற்றும் மாநில, மாவட்ட அரசு அதிகாரிகள் தொடர்ந்து தங்கள் கடமையை செய்ய வலியுறுத்தி மனுக்களை நீதிமன்ற ஆணை நகல்களுடன் இணைத்து கோரிக்கை மனு சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம்,மாவட்ட...

உ.பியில் 5000 பள்ளிகள் மூடல்

உ.பியில் 5000 பள்ளிகள் மூடல்

உத்தரப் பிரதேச அரசு, குறைந்த மாணவர் எண்ணிக்கை கொண்ட அரசுப் பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பாக, 8-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 50க்கும் குறைவாக இருந்தால், அவற்றை மூட உள்ளது. பள்ளிக்குச் செல்லும் வழியில் ஆறுகள், நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள் குறுக்கிட்டால், அந்தப் பள்ளிகளையும் மூட உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. மாநிலத்தின் கல்விக் கட்டமைப்பையே மாற்றும் இந்த உத்தரவுக்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க உள்ளது. இந்த உத்தரவின் மூலம், 3 லட்சம் குழந்தைகள் வேறுபள்ளிகளுக்கு மாற்றும் நிலை ஏற்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. சுமார் 5 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட உள்ளன. இந்த நடவடிக்கை சுமார் 27 ஆயிரம் அரசுப் பள்ளிகளை பாதிக்கும். 35 ஆயிரம் உதவி ஆசிரியர்கள் மற்றும் 27 ஆயிரம் தலைமை ஆசிரியர்களுக்கு பணியிடக் குழப்பங்களை உருவாக்க உள்ளது. இந்த...

திராவிட மாடலும் மோடி மாடலும்!

திராவிட மாடலும் மோடி மாடலும்!

இதுவரை மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு அரசு நிர்வாகத்திடம் மனு போட்டுக் கொண்டிருந்தார்கள். அரசு அலுவலகத்தின் ஒவ்வொரு மேசையையும் கடந்து ஒப்புதலைப் பெற்று மக்களுக்கான நிவாரணம் வழங்குவதற்கு எத்தனை காலம் ஆகும் என்று தெரியாத நிலை தான் நீடித்து வந்தது. தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இதில் மகத்தான புரட்சியை நிகழ்த்தி வருகிறார்.அரசு நிர்வாகத்தை மக்களிடம் கொண்டு செல்வது தான் அவர் நிகழ்த்திவரும் நிர்வாகப் புரட்சி.’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மட்டுமல்ல; ஏற்கனவே மக்களுடன் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மக்களுக்கு நேரிடையாக கொண்டு சேர்க்கப்படுகின்றன. முதலமைச்சர் பங்கேற்கும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் பல்லாயிரக்கணக்கில் மக்களை நேரடியாக சந்தித்து உரையாடி அவர்களின் மனுக்களை பெற்று வருகிறார். கோப்புகளோடு மட்டும் செயல்பட்ட நிர்வாகத்தை மக்களிடம் கொண்டு வந்து இணைத்துள்ள ]இந்த நடைமுறை ‘திராவிட மாடல்’ ஆட்சியின் தனித்துவமான சிறப்பு இன்று (16.05.2025) ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ பத்திரிக்கையில் வந்திருக்கிற செய்தியை சுட்டிக்காட்டவிரும்புகிறோம். ஒன்றிய அமைச்சரவை...

சேலம் இளைஞரணி முடிவுகள்!

சேலம் இளைஞரணி முடிவுகள்!

சேலம் மாவட்ட இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டம் வெள்ளார் பகுதியில் 06.07.2025 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது. கலந்தாய்வு கூட்டத்திற்கு சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை, சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சிவ சண்முகம், சேலம் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மாவட்ட இளைஞர் அணியின் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து தோழர்கள் அனைவரும் தங்களது ஆலோசனைகளையும் கருத்துகளையும் வழங்கினார்கள். தீர்மானங்கள்: 1). ஜூலை மாத இறுதிக்குள் சேலம் மாவட்ட இளைஞர் அணியின் சார்பில் மேச்சேரியில் கருத்தரங்கம் நடத்துவது எனவும், 2). கிராமப்புற பகுதிகளில் மாதம் ஒரு தெருமுனைக் கூட்டம் நடத்துவது, 3). மாதம் ஒரு பகுதியில் கிளைக் கழக சந்திப்பு நடத்தி புதிய இளைஞர்களை திரட்டுவது. 4). புதிய இளைஞர்களுக்கு வருடம் ஒரு பயிலரங்கம் இளைஞர் அணி சார்பாக நடத்துவது,...

உடற் கொடை அளிப்பு!

உடற் கொடை அளிப்பு!

திருப்பூர் தி.வி.க தோழர் மலரவன் என்கிற மலர் மணி நாதன் உடல் நலிவுற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் 28.06.2025 இரவு 8. 30 மணியளவில் மரணம் அடைந்தார். அவரது உடல் சோளிபாளையம் பாரதி நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு பிறகு அவரது விருப்பத்தின் பேரில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஞாயிற்றுக் கிழமை 29.6.2025 காலை 12.30 மணிக்கு அவரது உடல் கொடையாக வழங்கப்பட்டது. தோழர் மலரவனின் உடலுக்கு எந்தவிதமான ஜாதி மத சடங்குகளும் செய்யப்படவில்லை. மலர் மாலை கூட அணிவிக்கப்படாமல் பெண் தோழர்கள் கொள்கை முழக்கமிட்டு உடலை சுமந்து வந்தனர். தோழரின் இணையர் பாண்டிச்செல்வி, மகள் மதுலதா, மகன் பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் கொடையாக வழங்கப்பட்டது. மலரவன் அவர்கள் 41 ஆண்டுகளாக தந்தை பெரியார் கொள்கையை கடைபிடித்தவர். தனது குடும்ப உறுப்பினர்களை பெரியார் வழியில் நடத்தியவர் ஆவார். நிகழ்வில் சு.துரைசாமி பொருளாளர், வீ.சிவகாமி தலைவர் தமிழ்நாடு...

சிந்தனையை தூண்டும் நூல்!

சிந்தனையை தூண்டும் நூல்!

நீங்கள் நாத்திகரா? இதைப் படிக்க வேண்டாம் என்ற தலைப்பில் அறிவுச் சுடர் வெளியீட்டகம் நூல் ஒன்று வெளியிட்டுள்ளது. நூலின் நோக்கம் விளக்கப்பட்டுள்ளது. நீங்கள் நாத்திகரா? இதைப் படிக்கவேண்டாம் என்று தலைப்பிட்டதன் காரணம் இந்தப் புத்தகத்தின் கேள்விகள் அனைத்தும் உங்களைப் பொருத்த வரையில் பொருத்தமற்றதே. ஆனாலும் புத்தகம் முழுவதையும் படித்துவிட்டீர்களானால் ஒரு கடவுள் நம்பிக்கையாளரிடம் எவ்வாறு விவாதிப்பது அல்லது சிந்தனையைத் தூண்டுவது என்பதற்கு ஒரு வழிகாட்டலாக இருக்கும். அதுபோல மறு வெளியீடுகளில் இதனை மேம்படுத்த நீங்களும் உதவலாம். நூல் விலை: ரூ.50 கிடைக்கும் இடம்: அறிவுச் சுடர் வெளியீட்டகம், திருச்சி பெரியார் முழக்கம் 10072025இதழ்

சுயஜாதிப் பற்று ஜாதி எதிர்ப்பு அல்ல!

சுயஜாதிப் பற்று ஜாதி எதிர்ப்பு அல்ல!

திரிபுவனம் காவல் நிலையத்தில் நடந்த சித்திரவதை படுகொலையை சகித்துக் கொள்ள முடியவில்லை. காவல்துறையின் அடக்குமுறை கலாச்சாரம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று. அதே நேரத்தில் இப்படி ஒரு படுகொலை நடந்திருக்கிறது என்ற செய்தி வந்தவுடன் தமிழ்நாடு முதல்வர் அவசரமாக அதிகாரிகளைக் கூட்டி ஆலோசித்து குற்றத்தில் தொடர்புடைய ஐந்து காவல்துறையினர் மீது சஸ்பெண்ட் என்ற பெயரளவிலான நடவடிக்கையை எடுக்காமல், கொலைக் குற்றத்தின் கீழ்கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட காவல்துறை அதிகாரியும் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதற்குப் பிறகும் இதில் அரசை குற்றம் சாட்டுவதற்கு ஏதேனும் ‘சந்து பொந்து ‘இருக்கிறதா? என்று தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை அதைத்தான் சுட்டிக் காட்டுகிறது. காவல் மரணம், போதை மருந்து, பெண்கள் பாதுகாப்புப் பிரச்சனைகளில் தவறு செய்யும் காவல்துறையானாலும் அரசியல்வாதியாக ஆனாலும் சமூக விரோதியானாலும் கடும் நடவடிக்கை எடுக்க...

கழக ஏட்டுக்கு வளர்ச்சி நிதி!

கழக ஏட்டுக்கு வளர்ச்சி நிதி!

கழக மாவட்டச் செயலாளர் உமாபதி-பாரதி இணையரின் 21-ம் ஆண்டு இணையேற்பு நாளை முன்னிட்டு கழக ஏட்டுக்கு ரூ.2000 நன்கொடை வழங்கினர். மேலும் மதுரை கழகத் தோழர் அழகர் பிரபாகரன் அவரது மகன் இளமகிழன் பிறந்தநாளை முன்னிட்டு ரூ.2000 நன்கொடை வழங்கினார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். பெரியார் முழக்கம் 10072025இதழ்

பீகாரில் பில்லி சூனிய‌ நம்பிக்கையால் 200 பேர் முன்னிலையில் ஒரே குடும்பத்தில் ஐவர் எரித்து கொலை!

பீகாரில் பில்லி சூனிய‌ நம்பிக்கையால் 200 பேர் முன்னிலையில் ஒரே குடும்பத்தில் ஐவர் எரித்து கொலை!

பில்லி சூனியக்காரர் என்று ஒரு குடும்பத்தின் ஐந்து பேர் எரித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பீகாரில் அரங்கேறி உள்ளது. பியூரின் மாவட்டத்தில் டெட்காமா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வாழும் ராம்தேவ் மகத்தோ என்பவரின் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாத நிலையில் சிகிச்சைக்கு கிராம வைத்தியர் பாபுலால் ஒரன் (50) என்பவரிடம் சென்றுள்ளனர். சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்து விட்டது. மூன்று நாட்களுக்குப் பிறகு ஊர்த் தலைவர் முன்னிலையில் கிராம மக்கள் கூடினார்கள். சிகிச்சை அளித்த கிராம வைத்தியர் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் பில்லி சூனியக்காரர்கள் என்று கிராமத்தினர் முடிவு செய்தனர். அவர்களை கட்டையால் அடித்து சாகடித்து பிறகு தீ வைத்து எரித்து சடலங்களை ட்ராக்டர் ஒன்றில் ஏற்றி கிராமத்தில் குழித் தோண்டி புதைத்தனர். இதில் உயிர் தப்பிய வைத்தியரின் 16 வயது மகன் இந்த தகவலை தங்களுடைய உறவினர்களிடம் தெரிவித்தார். மாவட்ட காவல்துறை அதிகாரி...

கழக ஏட்டுக்கு நன்கொடை!

கழக ஏட்டுக்கு நன்கொடை!

கழகத் தோழர் இரண்யா தனது மகன் அகராதி பிறந்தநாளை முன்னிட்டு ரூ.2000 சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி அவர்களிடம் வழங்கினார். கழகத் தோழர் அஜித் ரூ.1000 கழக ஏட்டுக்கு நன்கொடை வழங்கினார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். பெரியார் முழக்கம் 03072025இதழ்

கருநாடக கழகத் தலைவர் இராவணன் படத்திறப்பு நிகழ்வு!

கருநாடக கழகத் தலைவர் இராவணன் படத்திறப்பு நிகழ்வு!

கருநாடக திவிக மாநிலத் தலைவர் தோழர் இராவணன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி பெங்களூரு ஜெய்பீம் பவன் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் பங்கேற்று தோழர் இராவணன் தொடர்பான நினைவுகளை பகிர்ந்து கொண்டார். மேலும் இந்தியாவில் பௌத்தம் முன்னெடுத்த சமத்துவம் குறித்தும், ஆரியர்கள் படையெடுப்பு பற்றியும், ஆரிய பண்பாட்டு படையெடுப்பால் நாம் இழந்தவற்றை திணிக்கப்பட்ட ஆரிய பண்பாட்டில் இருந்து நாம் மீள்வதற்கு பெரியார் கையாண்ட விழாக்கள் நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்கள் அடங்கிய ஒரு சிறப்பான உரையை நிகழ்த்தினார். பெரியார் முழக்கம் 03072025இதழ்

வி.பி சிங் சிலைக்கு கழகம் சார்பில் மாலை அணிவிப்பு!

வி.பி சிங் சிலைக்கு கழகம் சார்பில் மாலை அணிவிப்பு!

சமூக நீதிக் காவலர் விபி சிங் பிறந்தநாளான (25/6/25), சென்னை பிரசிடென்சி கல்லூரியில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு, மாலை 5 மணியளவில், திவிக தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் தலைமையில் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ப.அருண், திருவல்லிக்கேணி பகுதித் தலைவர் கோபிநாத், திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர் த.நா.சூர்யா, தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் இளவரசன் உள்ளிட்ட பல தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம்03072025இதழ்

தீவிர களப்பணிக்கு தயராகும் சென்னை மாவட்ட இளைஞரணி

தீவிர களப்பணிக்கு தயராகும் சென்னை மாவட்ட இளைஞரணி

சென்னை கழக தலைமை அலுவலகத்தில் ஜூன் 29 மாலை 5 மணி அளவில் சென்னை மாவட்ட இளைஞரணி மற்றும் தொழில்நுட்ப அணியின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இரு அணிகளை சேர்ந்த 40 தோழர்கள் பங்கேற்றனர். சென்னை மாவட்ட இளைஞரணியின் கலந்துரையாடல் கூட்டத்தில், எழுத்தாளர்களை உருவாக்குவது, வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுதல், தோழமை உணர்வை மேம்படுத்துதல், அறிவியல் பிரச்சாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 1. மாதம் ஒரு புத்தக திறனாய்வு கூட்டத்தை இளைஞரணி முன்னெடுக்கும். 2. மாதம் இரண்டு தெருமுனை கூட்டங்கள் நடத்துவது 3. ஆண்டுக்கு இரண்டு பொதுக்கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக அம்பத்தூர் பகுதியில் பகுத்தறிவு பரப்புரை பிரச்சாரம் நடத்தலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது. தொழில்நுட்ப அணி சார்பில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. தகவல் தொழிட்நுட்ப் அணி சார்பாக புகைப்படக் கருத்து வடிவ உருவாக்கம், காணொலிப் பிரச்சாரம், இணையதள வடிவமைப்பு, சமூக வலைத்தள செயல்பாடுகள், ஆவணப்படுத்துதல்,...

‘இடையாற்றுமங்கல’ புரட்சி!

‘இடையாற்றுமங்கல’ புரட்சி!

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ர.பிரகாஷ் எழுதி வருகிறார். லால்குடி இடையாற்று மங்கலத்தில் பெரியார் தொண்டர்கள் பண்ணை ஆதிக்கத்தை எதிர்த்த சுருக்கமான வரலாறு. பகுத்தறிவுக் கொள்கைகளை முழுமையாகக் கடைப்பிடிக்கும் ஊர்களைப் பற்றிய பதிவாக ஒரு தொடர். கீழத்தஞ்சையில் மட்டும் திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கத்தில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் இருந்தனர். குடந்தையில் அதன் முக்கிய முகங்களில் ஒருவராக இருந்த ஜோசப்பை லால்குடிக்கு அனுப்பினார் பெரியார். `விளைச்சலைச் சமமாகப் பங்கிடு’, `நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் வழங்கு’ போன்ற முழக்கங்களை விவசாயக் கூலிகள் மனதில் ஆழமாகப் பதியச் செய்தார் ஜோசப். ஊர்வலங்கள், பிரச்சாரங்கள், துண்டறிக்கை விநியோகம் என பெரியார் கொள்கைகளும் சேர்ந்து பரப்பப்பட்டன. பண்ணையாளர்களோடு தொடர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். கொண்டையம்பட்டி செட்டியார் பண்ணை படியாததால், அறுவடையை மொத்தமாக எடுத்துக்கொள்வது என முடிவு செய்தனர்....

தமிழ்நாட்டு பள்ளிகளில் ஜாதி கயிறுகளுக்குத் தடை!

தமிழ்நாட்டு பள்ளிகளில் ஜாதி கயிறுகளுக்குத் தடை!

பள்ளிகளில் ஜாதி அடிப்படையிலான மோதல், சமூக வேறுபாடுகளை ஆகியவற்றை தடுத்து, நல்லிணக்கம், நற்பண்புகள் வளர்க்கும் வகையில், பள்ளிக் கல்வித்துறை முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சுற்றறிக்கை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் வருகை பதிவேட்டில் ஜாதி பெயர் இடம்பெறக் கூடாது. மாணவர்களை வரிசை மாற்றி அமர வைப்பது, ஆசிரியர்கள் ஜாதிப் பெயர் குறிப்பிடக்கூடாது உள்ளிட்ட முக்கிய வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. பள்ளிகளில் ஜாதிரீதியான சிந்தனை பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் ஜாதிய மற்றும் சமூக வேறுபாடு உணர்வுகள் தோன்றுவதைத் தடுக்க வேண்டிய முக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. கல்வியே அனைத்திற்கும் முக்கியம் என கற்பிக்கப்படும் இடத்தில், ஜாதி மாணவர்களின் மத்தியில் மோதலையும், வெறுப்பு உணர்வைத் தூண்டக்கூடாது என்பதில் பள்ளிக் கல்வித்துறை உறுதியுடன் உள்ளது எனவே, இதுபோன்ற உணர்வுகள் மூலம் ஏற்படும் வன்முறைகள் உருவாகுவதைத் தடுப்பதற்காகவும், மாணவர்களுக்கு நல்லிணக்கம். நற்பண்புகளை குறித்து அறிவுரை வழங்குவது தொடர்பான முயற்சியில்...

மகாராஷ்டிராவில் ‘மும்ழொழி’ ரத்தானது

மகாராஷ்டிராவில் ‘மும்ழொழி’ ரத்தானது

ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கை திட்டத்தின் மூலம், மராட்டிய மாநிலம் முழுவதும் உள்ள மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தியைக் கட்டாய 3-வது மொழியாக மாற்றப்படும் என மராட்டிய மாநில அரசு அறிவித்திருந்தது. இந்தித் திணிப்புக்கு எதிராக மும்பையில் ஜூலை 5ம் தேதி பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்திருந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், “பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளை வழங்க கல்வியாளர்கள் குழு ஒன்று அமைக்கப்படும். வல்லுநர் குழு அமைத்து, அவர்கள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்” என்றார். இது குறித்து உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், “அரசாணைகள் திரும்பப் பெறப்பட்டது...

சரஸ்வதி நாகரீகத்துக்கு ஆய்வறிக்கை உண்டா?…  – விடுதலை இராசேந்திரன்.

சரஸ்வதி நாகரீகத்துக்கு ஆய்வறிக்கை உண்டா?… – விடுதலை இராசேந்திரன்.

கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை இரண்டு ஆண்டுகள் கிடப்பில் போட்டுவிட்டு பிறகு அந்த அறிக்கையை திருத்தி எழுதித் தருமாறு ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியது. அதில் திருத்துவதற்கு எதுவும் இல்லை என்று ஆய்வாளர் மறுத்துவிட்டார். ஆய்வாளர் அமர்நாத் மீண்டும் நொய்டாவுக்கு இடமாற்றம் செய்து பழிவாங்கப்பட்டுளளார். இப்போது அந்த அறிக்கை போதுமானது அல்ல, மேலும் தகவல்கள் தேவைப்படுகிறது என்று ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் சேக்வாத் சென்னையில் பேட்டியளித்து இருக்கிறார். ஆய்வாளர் அமர்நாத் பாஜக விரும்புகிறபடி அறிக்கையை திருத்தி அனுப்பி இருந்தால் அதை வெளியிட்டு இருப்பார்கள். இப்போது ஆர்எஸ்எஸ் ரசாயன பரிசோதனை ஆலைக்கு அனுப்பி சோதனை செய்த பிறகு அதை அங்கீகரிப்பார்கள் போலும். வேதத்தில் கூறப்படும் சரஸ்வதி என்ற ஆறு எங்கே இருக்கிறது, என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவே இல்லை. இதைக் கண்டுபிடிப்பதற்காகவே பல கோடி ரூபாய் பணத்தை ஒதுக்கி இன்னமும் ஆண்டுகணக்கில் தேடிக் கொண்டிருக்கிறார்கள். தேடிக் கொண்டிருக்கின்ற ஒரு...

‘முருகனை’ அவமதிக்கும் சங் பரிவாரங்கள்

‘முருகனை’ அவமதிக்கும் சங் பரிவாரங்கள்

முருகக் கடவுளை பாஜக தலைவராக மாற்றிவிட்டது மதுரை அரசியல் மாநாடு. இவர்களைவிட முருகனை அவமதிப்பவர்கள் வேறு யாருமே இருக்க முடியாது. கர்ப்பக்கிரகத்தில் வேத மந்திரத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்டு சக்தி உடையவனாக அறிவிக்கப்பட்ட முருகனை இவர்கள் நம்பவில்லை.அதனால் தான் மதுரை மாநாட்டு திடலுக்கு இழுத்து வந்து அங்கே செட்டுகளைப் போட்டு கர்ப்பக்கிரக முருகனை விட ‘செட்டுமுருகன்’ தான் எங்களுக்கான தலைவன் என்று மதுரை மாநாடு அறிவித்திருக்கிறது. உண்மையிலேயே இவர்களுக்கு முருக பக்தி இருந்திருக்கும் என்று சொன்னால் என்ன செய்திருக்க வேண்டும்? முருகன் கோவிலுக்குப் போய் இந்து விரோதிகளை சூரசம்காரம் செய்; திராவிடத்தை அழித்து ஒழிக்க வெளியே வா என்று டிக்கெட் வாங்கி அர்ச்சனை செய்திருக்க வேண்டும். ஆனால் முருகன் இதை எல்லாம் ஏற்றுக்கொண்டு செயல்படுத்த மாட்டான் என்று நம்பிக்கை இழந்து தான் அரசியல் மேடைக்கு கடத்திவந்து கடவுளை குறியீடாக்கி விட்டனர். குறிஞ்சி நிலத் தலைவனாகக் கருதப்படும் முருகன் காலத்தில் இந்து மதம் என்ற...

முழக்கத்திற்குப் பாராட்டு!

முழக்கத்திற்குப் பாராட்டு!

கொளத்தூரில் நடைபெற்ற நாத்திகர் விழா நிகழ்ச்சியில் மாநாட்டில் மூன்றாவது தீர்மானமாக கணவன் இறந்த பிறகு பெண்களுக்கு நடக்கும் சடங்குகளின் தடுக்க கோரி மூடநம்பிக்கைகளில் இது கொடூரமான மூடநம்பிக்கை என்பதை சுட்டிக்காட்டி தீர்மானம் இருப்பது நெஞ்சை நெகிழ வைக்கிறது, படிக்கிற போது நா தழுதழுக்கிறது. அதேபோல கடந்த வாரம் வந்த முழக்கத்தில் ‘நாத்திகர் விழா சிந்தனை இரண்டு தொகுப்பில்’ 1967 மே 24 விடயபுரத்தில் நடந்த பயிற்சி வகுப்பு கடவுள் மறுப்பு வாசகங்களை பெரியார் உருவாக்கினார். அதற்கு கீழே இருக்கிற கட்டுரையில் ஆசிரியர் ஊசி ஒன்று எனக்கு வேண்டும் மாணவர்கள் வாங்கி வர வேண்டும் என்று சொல்லி ஒரு மாணவர் கிளம்ப எல்லோருமாக சேர்ந்து வாங்கி வருகிறோம் என்று, உடன் இருந்த மாணவர்களும் உடன் செல்ல அவர்கள் வாங்கி வந்த விதமும் அந்த ஊசியின் கதையும், தெருவில் இழுத்து வருகிற தேரின் கதையையும் எளிமையாக புரிய வைத்த பெரியார் பேருரையாளர் பேராசிரியர் நா...

கோவையில் கலைஞர் பிறந்தநாள் விழா!

கோவையில் கலைஞர் பிறந்தநாள் விழா!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மாநகரச் செயலாளர் வெங்கடேசன் தலைமையில் சிவானந்தா காலனி பேருந்து நிறுத்தம் அருகில் கலைஞர் பிறந்த நாள் கூட்டம் நடைப்பெற்றது. திவிக தலைமை செயற்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், சிவானந்தா காலனி திமுக பகுதிச் செயலாளர் டெம்போ சிவா, தமிழ்ப்புலிகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் இராமச்சந்திரன், கோவை குமார், விசிக மாவட்ட செய்தி அமைப்பாளர் கோவை ராசா, திமுக முனீர் அகமது, திக தோழர் ராஜா, திவிக மாநகரத் தலைவர் நிர்மல், சதீஷ், மாதவன், ஸ்டாலின் ராஜா கதிரவன் மற்றும் தோழமை கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 26062025இதழ்

சென்னையில் பாலஸ்தீன ஆதரவுப் பேரணி!

சென்னையில் பாலஸ்தீன ஆதரவுப் பேரணி!

பாலஸ்தீன ஆதரவுக் குழு நடத்திய பாலஸ்தீன விடுதலைப் பேரணி 21.06.25 அன்று எழும்பூர் ராஜரத்தினம் மைதான த்தில் தொடங்கி எழும்பூர் ரவுண்டானா அருகில் நிறைவு கண்டனக் கூட்டமாக நிறை வடைந்தது. கண்டனக் கூட்டத்தில் குழந்தைகளைத் திட்டமிட்டு கொன்றுகுவிக்கும் இஸ்ரேல்! காசா மீதான இனஅழிப்புப் போரை நிறுத்தக்கோரி திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி அவர்கள் உரையாற்றினார். பேரணியில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் , மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், வடசென்னை மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் அருண், மாணவர் கழக அமைப்பாளர் பேரன்பு, தட்சணாமூர்த்தி, ஏசு குமார், தினகரன் மற்றும் கழக தோழர்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 26062025இதழ்

பொள்ளாச்சியில் கழகப் பொதுக்கூட்டம்!

பொள்ளாச்சியில் கழகப் பொதுக்கூட்டம்!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக குடிஅரசு மற்றும் சுயமரியாதைஇயக்க நூற்றாண்டு பொதுக்கூட்டம் 10.06.2026 செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு ஆனைமலை முக்கோணம் பகுதியில் வே.அரிதாசு தலைமையில் நடைபெற்றது. யாழ் வெள்ளிங்கிரி வரவேற்புரை ஆற்றினார். கோவன் கலைக்குழுவின் சார்பாக கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலைச்செல்வி சாந்தலிங்ககுமார் பேரூராட்சி தலைவர், ஆசிரியர் சிவகாமி (தலைவர், தமிழ்நாடுஅறிவியல் மன்றம்), இரா.உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்) ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக கழக தலைவர் கொளத்தூர் மணி, காசு.நாகராசன் (திராவிட இயக்கத்தமிழர் பேரவை) சிறப்புரையாற்றினர். நிகழ்வில் தினேசு குமார் கழகத்தில் தன்னை கழகத்தில் இணைத்து கொண்டார். தோழருக்கு கழகத் தலைவர் புத்தகம் வழங்கினார். 15 பேர் உடற் கொடை வழங்க முன்வந்துள்ளனர். இதற்கான சான்றிதழை தோழர் அறக்கட்டளைத் தலைவர். சாந்தகுமார் மற்றும் கழக தலைவர் கொளத்தூர் மணி வழங்கினர். தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் அருண், பொள்ளாச்சி கழக தோழர்கள் மற்றும் தோழமை அமைப்பு...

ஜாதி மறுப்பு இணையேற்பு விழா!

ஜாதி மறுப்பு இணையேற்பு விழா!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சேலம் மாவட்ட ஒருங்கிணைப் பாளர் நங்கவள்ளி கிருஷ்ணன் மகன் கி.பிரபாகரன், ஆனைமலை ஒன்றியச் செயலாளர் நடராஜ் மகள் ந.கஸ்தூரி ஆகியோரின் ஜாதி மறுப்பு வாழ்க்கை இணை யேற்பு விழா ஆனைமலை பரிமளா சுப்பிரமணியம் திருமண மண்டபத்தில் 11.06.2025 புதன் காலை 11.00 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. இணையர்கள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து ஜாதி ஒழிப்பு உறுதி மொழியை ஏற்று தாங்களும் மலர் மாலையை மாற்றிக் கொண்டனர். பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் துரை.தாமோதரன் மந்திரமா? தந்திரமா? நிகழ்வு நடைபெற்றது. நிமிர்வு கலைக் குழுவினரின் பறை இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. யாழ்.வெள்ளிங்கிரி வரவேற்புரை நிகழ்த்தினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் இணையேற்பினை நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி, தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன், வேலூர் மாவட்டச் செயலாளர் சிவா, சேலம்...

நில உரிமைக்குப் போராடிய ‘இடையாற்றுமங்கலம்’

நில உரிமைக்குப் போராடிய ‘இடையாற்றுமங்கலம்’

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரை தொடரை முரசொலையில் ர.பிரகாஷ் எழுதி வருகிறார். லால்குடி இடையாற்று மங்கலத்தில் பெரியார் தொண்டர்கள் பண்ணை ஆதிக்கத்தை எதிர்த்த சுருக்கமான வரலாறு. `முதலில் ஒழிக்கப்பட வேண்டியது, `வர்க்க வேறுபாடா`, `சாதி வேறுபாடா’ என்பதில் தந்தை பெரியாருக்கும் கம்யூனிஸ்ட்களுக்கும் இடையில் கருத்து மாறுபாடு இருந்தது. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியைப் போலவே சாதியப் பிரச்சினையுடன் வர்க்க அடிமைத்தனத்தையும் ஒழிக்க, பண்ணை ஆதிக்கத்துக்கு எதிராக களத்தில் இறங்கிப் போராடியது பெரியாரால் தொடங்கப்பட்ட `திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம்’. அப்படி ஒரு போராட்டத்தால் பலன் அடைந்த கிராமம்தான் இடையாற்று சதுர்வேதிமங்கலம். 1950-கள் வரை லால்குடி சுற்றுவட்டாரம் முழுவதும் கூகூர் பரமசிவம்பிள்ளை, தாத்தாச்சாரியார், மணக்கால் பாப்பாத்தி அம்மாள், கொண்டையம்பட்டி செட்டியார் என விரல் விட்டு எண்ணக்கூடிய சில பண்ணையார்களிடம்தான் இருந்தன. அதில் கொள்ளிடக்கரையில் உள்ள ஒரு...

திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் 21-06-2025 மாலை 5 மணி அளவில் வ.உ.சி திடல் (செங்காடு) அவினாசி பகுதியில் ஒன்றிய அரசே! கீழடி ஆய்வறிக்கையை உடனடியாக வெளியிடு எனக் கோரி திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய கழகம் சார்பாக கையெழுத்து இயக்கம், மற்றும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் திவிக சார்பாக மாவட்டச் செயலாளர் முகில்ராசு கண்டன உரையாற்றினார். நிகழ்வில் மாரிமுத்து மாநகர துணைத் தலைவர், கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 26062025இதழ்

பாராட்டத்தக்க முயற்சி!  பெரியார் முழக்க வளர்ச்சிக்கு வாட்ஸ்அப் குழு

பாராட்டத்தக்க முயற்சி! பெரியார் முழக்க வளர்ச்சிக்கு வாட்ஸ்அப் குழு

ஆசிரியர் சிவகாமி முன்னெடுப்பில் புரட்சிப் பெரியார் முழக்க வளர்ச்சிக் குழு ஒன்று உருவாக்கப்பட்டு ஒரு வருட செயல் திட்டமாக மாதம் 500 ரூபாய் நிதி பங்களிப்பு செய்வதாக தீர்மானித்து செயல்பட்டு வருகிறது. முதல் தவணையாக ஜூன் மாதம் ரூ.8000 வழங்கியள்ளனர். குழுவில் இணைந்து ஒரு வருடத்திற்கு வளர்ச்சி நிதி வழங்க விருப்பமுள்ள தோழர்கள் தகவல் தெரிவிக்குமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம். பெரியார் முழக்கம் 26062025இதழ்

ஆங்கிலம் விலங்கல்ல; விலங்கை உடைக்கும் கருவி!

ஆங்கிலம் விலங்கல்ல; விலங்கை உடைக்கும் கருவி!

`இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் அவமானமாக உணர்வார்கள்’ என ஒன்றிய அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்து, இந்தியா முழுவதும் விமர்சனம் செய்யப்பட்டதுடன், கேலியாகவும் பார்க்கப்பட்டது. இப்போது அவரது கருத்து, அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளது. ஆங்கிலம் தொடர்பாக அமித் ஷாவின் கருத்தை விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க. முக்கிய தலைவர்களின் வாரிசுகள் பலரும் வெளிநாடுகளில் கல்வி கற்று வரும் பட்டியலை வெளியிட்டு விமர்சனம் செய்துள்ளது. அமைச்சர் பியூஷ் கோயல் மகன் மற்றும் மகள் ஆகியோர் ஹார்வர்டு பல்கலையிலும், அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன் பிள்ளைகள் பாஸ்டன் பல்கலையிலும் படித்துள்ளனர். அமைச்சர்கள், சிவராஜ் சிங் செளகான், ஜோதிராவ் சிந்தியா, ஹர்தீப் சிங் பூரி ஆகியோரின் பிள்ளைகள் மேற்கு நாடுகளில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஆங்கிலத்தில்தான் பயின்று வருகின்றனர். ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் வெளிநாட்டில் படித்தவர்கள்தான். ஆங்கிலம் கற்பதற்கு வெட்கப்பட வேண்டும் எனக் கூறும் அமித் ஷா, அவர்கள் அமைச்சரவை...

புண்படுகிறது என்ற கூக்குரலுக்கு உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி!

புண்படுகிறது என்ற கூக்குரலுக்கு உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி!

மத உணர்வைப் புண்படுத்துகிறார்கள் என்று எதற்கெடுத்தாலும் கூறிக்கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதும் காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதும் சங்கிகளின் வழக்கமாகிவிட்டது. கமலஹாசனின் `தக் லைஃப்’ திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைத் தரவில்லை என்றாலும் நீதிமன்றத்தின் வழியாக கருத்துரிமையை நிலைநாட்டி இருக்கிறது. தமிழிலிருந்து தான் கன்னடம் பிறந்தது என்று கமலஹாசன் பேசியதற்காக கன்னடர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த பேச்சுக்காக கமலஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியது. இப்போது உச்ச நீதிமன்றம் எவரையும் மன்னிப்பு கேட்க வைக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்குக் கிடையாது, என்று கர்நாடக நீதிமன்றத்தின் தலையில்குட்டு வைத்திருக்கிறது. படத்தைத் திரையிடவும் உத்தரவிட்டுள்ளது. தணிக்கைக் குழு அனுமதித்ததற்குப் பிறகு ஒரு படத்தை திரையிட முடியாது என்று சட்டத்தை எவரும் கையில் எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம் உணர்வுகளைப் புண்படுத்துகிறார்கள் என்று கூறி கருத்துரிமை பறிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது...

நுழைவுத் தேர்வுகளின் தோல்வி!

நுழைவுத் தேர்வுகளின் தோல்வி!

மாணவர் தகுதியை நிர்ணயிக்கும் நுழைவுத்தேர்வு முறைகள் தோல்வி அடைந்து வருகின்றன. மாணவர் அனைவரும் ஒரே தேர்வை எழுத வேண்டி இருப்பதால், இத்தகைய நுழைவுத் தேர்வு முறையின் வழியாக, எவ்விதக் குளறுபடிகளும் இல்லாத, நியாயமான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பரவலாக நம்பப்படுகிறது. இந்தியாவில், நுழைவுத் தேர்வுகள் சட்டபூர்வமானதும், மக்களின் நம்பிக்கைக்கு உரிய ஒன்றாகவும் கருதப்படுகிறது. உண்மையில், கவனமாக ஆய்வுசெய்து பார்த்தோமேயானால், நுழைவுத் தேர்வு முறை குறித்த கூற்றுகளும் நம்பிக்கைகளும் கேள்விக்கு உரியவையாக ஆகிவிடுகின்றன. மகாராஷ்டிரத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, வீட்டுவசதி மேம்பாட்டுக் குழுமத்தில் ஆள்சேர்க்கைக்கான தேர்வு நடைபெற்றபோது, தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள்கள் வெளியாகிவிட்டன. மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற வியாபம் ஊழல் நாட்டையே உலுக்கியது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவந்த வியாபம் தேர்வு முறைகேடு களில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், மாணவர்கள், இடைத்தரகர்கள் ஈடுபட்டு இருந்தது அம்பலமாகியது. எண்ணற்ற மர்ம மரணங்களையும் நாம் கேள்வியுற்றோம். நீட் நுழைவுத் தேர்வு குறித்த சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை...

மலக்குழி சாவுகள் தொடரக்கூடாது பால்.பிரபாகரன் வலியுறுத்தல்

மலக்குழி சாவுகள் தொடரக்கூடாது பால்.பிரபாகரன் வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பாதாள சாக்கடை அகற்றும் பணியில் ஈடுபட்ட ஊழியர் பாதாள சாக்கடையின் விஷவாயு தாக்கி கங்கைகொண்டான் – ஆலடிப்பட்டியை சேர்ந்த தூய்மை பணியாளர் சுடலைமணி (வயது 40) என்ற தூய்மை பணியாளர் கடந்த 08.06.2025ல்உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் விடுத்துள்ள அறிக்கை: பாதுகாப்பற்ற முறையில் ஒப்பந்த தூய்மை பணியாளரை எவ்வித பாதுகாப்பு கருவியுமின்றி பாதாள சாக்கடைக்குள் இறக்கி தூய்மைப் பணி செய்ய வைத்துள்ளனர். மனிதக்கழிவை மனிதன் அகற்றத் தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013 இருந்தும் அச்சட்டம் மிகத் தெளிவாக மனிதனைப் பாதாள சாக்கடை மற்றும் மனிதக் கழிவு குழிக்குள் இறங்கத் தடை விதித்து இருந்தும் அந்த சட்டத்தை உள்ளாட்சி அமைப்புகள் சற்றும் சட்டை செய்யாமல், மனிதர்களை பாதாள சாக்கடைக்குள் எவ்வித பாதுகாப்பு கருவிகள் கூட இல்லாமல் இறக்குவதும் அதனால் மனித உயர்கள் பலியாவதும் வாடிக்கையாகிவிட்டது. நீதிமன்றங்கள் இச்செயல்பாடுகளைக் கண்டித்து பல தீர்ப்புகளை தந்து...

புலிகளின் தளபதி பொட்டு அம்மான்: வரலாற்று நூல் கழகத் தலைவர் வெளியீட்டார்

புலிகளின் தளபதி பொட்டு அம்மான்: வரலாற்று நூல் கழகத் தலைவர் வெளியீட்டார்

தாய் தமிழர் இயக்கம் நடத்திய அறிவரண் தளபதி பொட்டு அம்மான் வரலாற்று நூல் வெளியீட்டு விழா மற்றும் பொதுக்கூட்டம் சென்னை செங்குன்றத்தில் டேவிட் பெரியார் தலைமையில் நடைபெற்றது. நூலை வெளியிட்டு கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். நூலை பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கிய இனமுரசு சத்யராஜ், நூலை மதிப்புரை ஆற்றிய திவிக-புதுவை மாநிலத் தலைவர் லோகு அய்யப்பன், நூலைப் பற்றி அறிமுக உரை மேச்சேரி தமிழரசன் ஆகியோர் உரையாற்றினர். திருவல்லிக்கேணி பகுதியில் உயர்நீத்த கழகத் தோழர்கள் பத்ரி நாராயணன், தமிழரசு, கண்ணன், குமார் ஆகியோரின் குடும்பத்தினர் நூல்களை பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்விற்கு கழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து தோழர்கள் கலந்து கொண்டனர். தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, துணைச் செயலாளர் இராவணன், இளைஞரணி அமைப்பாளர் ப.அருண், காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் ரவி பாரதி மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 19062025இதழ்

இலக்கியா-பிரகாஷ் ஜாதி மறுப்பு இணையேற்பு விழா!

இலக்கியா-பிரகாஷ் ஜாதி மறுப்பு இணையேற்பு விழா!

பெரியார் சிந்தனையாளர் இயக்கத் தோழர்கள் இலக்கியா- பிரகாஷ் சுயமரியாதை ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு புதுவை அரியாங்குப்பத்தில் நடைபெற்றது. காசு.நாகராசன் (அமைப்பு செயலாளர், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை) வாழ்த்துரை வழங்கினார். சடங்குகளால் மணமக்கள் படும் தொல்லைகளை, அவமதிப்புக்களை எடுத்துரைத்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி இணையேற்பை நடத்தி வைத்து மந்திரங்கள் அதன் வழியாக சடங்குகள் மூலம் அடிமைத்தனத்தைத் திணிக்கும் பார்ப்பன புரோகித திருமண முறையும், எவ்வித சடங்குகள் இல்லாமல் நடைபெறும் சுயமரியாதைத் திருமணம் பற்றி விளக்கிப் பேசினார். நிறைவாக மணப்பெண் இலக்கியா பேசுகையில் “பெற்றோர்கள் பிள்ளைகளை ஆசை ஆசையாக வளர்க்கிறார்கள் ஆனால் அவர்களின் சுய விருப்பத்தை மட்டுமே ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். ஜாதி, மதத்தை காரணம் காட்டி பல பேர் இல்லறம் சரியாய் அமைவதில்லை. ஆகவே பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள். பிள்ளைகளின் சுய விருப்பத்தை பாருங்கள், ஜாதி, மத, சொந்தக்காரர்கள் சொல்வதைக் கேட்காதீர்கள். என்னுடைய குடும்பம் ஆச்சாரமான கடவுளை நம்பும்...

ஊரையும் சேரியையும் இணைத்த `மாதிரிமங்கலம் புரட்சி’

ஊரையும் சேரியையும் இணைத்த `மாதிரிமங்கலம் புரட்சி’

இப்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் இருக்கும் மாதிரி மங்கலம் என்ற பார்ப்பனர்கள் தானம் பெற்ற ஊரில் பெரியார் இயக்கம் நடத்திய ஜாதி ஒழிப்பு புரட்சி பற்றி கடந்த இதழில் வெளிவந்த கட்டுரையின் தொடர்ச்சி… பகுத்தறிவுக் கொள்கைகளை முழுமையாகக் கடைப்பிடிக்கும் ஊர்களைப் பற்றிய பதிவாக ஒரு தொடர். அம்பேத்கரின் `மகர்’ போராட்டத்தை மாதிரிமங்கலத்தில் சத்தமில்லாமல் செய்துகாட்டிய துரைசாமி அத்தோடு நிற்கவில்லை. பண்ணையார்களுக்கு எதிராகவும், பார்ப்பனர்களுக்கு எதிராகவும் தொடர்ந்த சுயமரியாதைப் போராட்டத்தால், 1960-களில் அங்கே இருந்த தலித் மக்கள் இறப்புக்குப் பறை அடிக்கச் செல்வதை நிறுத்தினர். இறந்துபோன மாட்டை தூக்கச் சொல்வதும் வழக்கொழிந்தது. தாழ்த்தப்பட்ட மக்கள் மேல் சட்டை அணிந்தனர், காலில் செருப்பு போட்டனர், ஊர்த்தெருவுக்குள் நடக்கத் தொடங்கினர். குத்தகை பார்த்த பிற்படுத்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த இருவரை, ராமாமிர்தம் அய்யர் வீட்டு முற்றத்தில் கட்டி வைத்த செய்திகேட்டு, இருவரையும் மீட்ட துரைசாமி, அந்த வீட்டையே கொளுத்தி விட்டார். இச்செயல்களால் கொந்தளித்துப்போன பண்ணையார்கள், துரைசாமியோடு நெருக்கமாக...