இனப்படுகொலை செய்யும் இஸ்ரேல்!

காசாவில் கூடாரங்களில் தஞ்சம் புகுந்திருந்த பாலஸ்தீனர்களின் மீது நேரடியாக குண்டு வீசி படுகொலை செய்துள்ளது இஸ்ரேல் ராணுவம். குண்டு வீச்சினால் கூடாரங்களில் தீப்பிடித்ததால் அங்கி ருந்த மக்கள் உயிருடன் எரிந்து பலியாகினர். அதோடு பல குழந்தைகள் தலைசிதறி பலியான கொடூரத்தை கண்டு உலகமே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. காசா மீதான போர் மற்றும் அங்கு இஸ்ரேல் நடத்திடும் கொடூர நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்த வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் மே 24 அன்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு வழங்கப்பட்ட பின்பும் கூட இஸ்ரேல் ராணுவம் ஒரு நாள் கூட போர் நடவடிக்கைகளை நிறுத்தாமல் தொடர்ந்து இனப்படுகொலைகளை அரங்கேற்றி வருகிறது.
குறிப்பாக பாலஸ்தீன மக்களின் கடைசிப் புகலிடமாக இருக்கும் ரஃபா நகரிலும் இஸ்ரேல் ராணுவம் சில வாரங்களுக்கு முன்பு தரைவழித் தாக்கு தல்களை துவங்கியது. இதற்கு உலகம் முழுவதும் இருந்து பாலஸ்தீன ஆதரவுக் குழுக்களும், சில ஆதரவு நாடுகளும் எதிர்ப்புத் தெரிவித்தன. இது ரஃபா பகுதியில் ரத்த ஆற்றையே உரு வாக்கி விடும் என்றும் கடுமையான கண்டனங்கள் எழுந்தன. இந்த தருணத்தில் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தி ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் தெரிவித்திருந்தார். எனினும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன் யாகு போர் நிறுத்த பேச்சுவார்த்தையை தவிர்த்தார். ரஃபா பகுதியில் இருந்த 10 லட்சத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்களை மீண்டும் அங்கிருந்து வெளி யேற இஸ்ரேல் ராணுவம் மிரட்டியதோடு குண்டுகளை வீசி இனப்படுகொலை தாக்குதல்களை தீவிரப்படுத்தியது. இந்த தாக்குதல்களின் ஒரு பகுதியாக பாலஸ் தீனர்களின் கூடாரங்களின் மீது குண்டுகளை வீசி யுள்ளது
இஸ்ரேல் ராணுவம். இந்த கொடூரமான தாக்கு தலில் 40 க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் குடும்பத்து டன் எரிந்து பலியாகியுள்ளனர். குழந்தைகள் தலை வெடித்துச் சிதறி கொடூரமாக பலியாகியுள்ள காணொலி கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இந்த கொடூரமான தாக்குதல்கள் அனைத்தும் போரை நிறுத்த சர்வதேச நீதிமன்றம் உத்தர விட்ட அடுத்த 48 மணி நேரத்திற்குள் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் 60 க்கும் மேற்பட்ட முறை வான்வழியாக குண்டுகளை வீசியுள்ளது. பல இடங்களின் தரைவழித் தாக்குதல்களையும் டாங்கிகள் மூலம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல் ராணுவம்.
நுசிரத் மற்றும் ஜபாலியா அகதிகள் முகாம்கள், காசா நகர், ரஃபா நகரம், வடக்கு மற்றும் மத்திய காசா பகுதிகளில் இந்த கொடூரமான தாக்குதல்களை நடத்தியுள்ளது இஸ்ரேல் ராணுவம். இந்த தாக்குதல் களால் கிட்டத்தட்ட 160 பாலஸ்தீனர்கள் படுகொலை யாகியுள்ளனர். கொலையானவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளே அதிகம். 2023 அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை போரில் 35,984 பாலஸ்தீனர்கள் படுகொலையாகியுள்ளனர். 80,643 பேர் வரை காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : தீக்கதிர்

பெரியார் முழக்கம் 30.05.2024 இதழ்

You may also like...