பாஜகவின் வாரிசு அரசியலைப் பாரீர்

திமுக, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் குறித்து பாஜகவினர் விமர்சனங்களை வைக்கும்போதெல்லாம் தவறாமல் குறிப்பிடுவது ‘வாரிசு அரசியல்’. வாரிசு அரசியலால் இக்கட்சிகள் நாட்டையே சீரழித்துவிட்டன என்பதுபோல மோடி, அமித் ஷா உள்ளிட்ட பாஜகவை சேர்ந்த பலரும் பேசியிருக்கிறார்கள். ஆனால் இப்போது மோடியின் மூன்றாவது ஆட்சியிலும், அமைச்சரவையிலும் வாரிசுகளாக நிரம்பிக் கிடக்கிறார்கள். அந்த பட்டியலை ராகுல் காந்தி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். “பல தலைமுறைகளாக போராட்டம், சேவை, தியாக உணர்வுடன் உள்ள பாரம்பரியத்தை வாரிசு அரசியல் என சொல்லும் மோடியின் 3.0 அரசில் 20 வாரிசுகள் உள்ளனர். இது மோடியின் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்தையே காட்டுகிறது. என்று அவர் காட்டமாக பதிவிட்டுள்ளார்.
பட்டியல்
1. எச்.டி.குமாரசாமி – முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன்.
2. ஜெயந்த் சவுத்ரி – முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் பேரன்.
3. ராம்நாத் தாக்கூர் – பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூரின் மகன்.
4. ராவ் இந்தர்ஜித் சிங் – அரியானா முன்னாள் முதல்வர் ராவ் பிரேந்திர சிங்கின் மகன்.
5. ரவ்னீத் சிங் பிட்டு – பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த் சிங்கின் பேரன்.
6. ஜோதிராதித்ய சிந்தியா – முன்னாள் ஒன்றிய அமைச்சர் மாதவ் ராவ் சிந்தியாவின் மகன்.
7. சிராக் பாஸ்வான் – முன்னாள் ஒன்றிய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் மகன்.
8. ராம் மோகன் நாயுடு – முன்னாள் ஒன்றிய அமைச்சர் எரன் நாயுடுவின் மகன்.
9. பியூஷ் கோயல் – முன்னாள் ஒன்றிய அமைச்சர் வேத் பிரகாஷ் கோயலின் மகன்.
10. தர்மேந்திர பிரதான் – முன்னாள் ஒன்றிய அமைச்சர் தேபேந்திர பிரதானின் மகன்.
11. கிரண் ரிஜிஜு – அருணாச்சல் முன்னாள் சபாநாயகர் ரிஞ்சின் காருவின் மகன்.
12. ஜே.பி. நட்டா – மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் எம்.பி மற்றும் அமைச்சர் ஜெய் பானர்ஜியின் மருமகன்.
13. ஜிதின் பிரசாதா – உத்தரப்பிரதேச முன்னாள் எம்.பி. ஜிதேந்திர பிரசாதா மகன்.
14. கிர்த்தி வர்தன் சிங் – உத்தரப் பிரதேச முன்னாள் அமைச்சர் மகாராஜ் ஆனந்த் சிங்கின் மகன்.
15. அனுப்ரியா படேல் – பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் அப்னா தளம் நிறுவனர் சோனேலால் படேலின் மகள்.
16. ரக்‌ஷா கட்சே – மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்சேவின் மருமகள்.
17. கமலேஷ் பஸ்வான் – உத்தரப் பிரதேச மக்களவை வேட்பாளர் ஓம் பிரகாஷ் பஸ்வானின் மகன் இவர்.
18. சாந்தனு தாக்கூர் – மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் மஞ்சுல் கிருஷ்ணா தாகூரின் மகன்.
19. வீரேந்திர குமார் காதிக் – மத்தியப்பிரதேச முன்னாள் அமைச்சர் கவுரிசங்கர் ஷெஜ்வாரின் மைத்துனர்.
20. அன்னபூர்ணா தேவி – பிகார் முன்னாள் எம்எல்ஏ ரமேஷ் பிரசாத் யாதவின் மனைவி.

மோடியை கைவிட்ட ராமன்!
• ராமஜென்ம பூமியாக கூறப்படும் அயோத்தி (ஃபைசாபாத்) தொகுதியில் தோல்வி..

• ராமர் 11 வருடங்கள் வனவாசத்தில் இருந்ததாக கூறப்படும் சித்ர கூட் “பண்டா” தொகுதியில் பாஜக தோல்வி..

• ராமரின் மனைவி சீதாவின் புனித தலமாக கூறப்படும் “சீதாபூர் மா” தொகுதியில் பாஜக தோல்வி..

• ராமருடன் தொடர்புபடுத்தி பேசப்படும் “சுல்தான்பூர்” தொகுதியில் பாஜக தோல்வி..

• ராமரின் வனவாசத்தில் முக்கிய இடமாக கூறப்படும் “பிரக்யா ராஜ்” தொகுதியில் பாஜக தோல்வி..

• ராமரின் வனவாசத்தின் போது அவர் தங்கி இருந்த இடமாக கூறப்படும் “ராம்தேக்” தொகுதியில் பாஜக தோல்வி..

• ராமரின் சகோதரனான இலட்சுமணன் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்த இடமாக கூறப்படும் “நாசிக்” தொகுதியில் பாஜக தோல்வி..

• அனுமாரின் ஜென்ம பூமியாக கூறப்படும் “கொப்பல்” தொகுதியில் பாஜக தோல்வி..

• ராமர் இலங்கைக்கு சென்றதாகக் கூறப்படும் ராமேஸ்வரம் (ராமநாதபுரம்) தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளர் தோல்வி..

பெரியார் முழக்கம் 13.06.2024 இதழ்

You may also like...