களப்பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன இராசிபுரம் கழகம் எடுத்த மணியம்மையார் நூற்றாண்டு – மகளிர் நாள் விழா
இராசிபுரம் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா – மகளிர் தினவிழா – சிறந்த பெண் சேவையாளர்கள், சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா இராசிபுரம் கன்னட சைனீகர் திருமண மண்டபத்தில் 21.4.2019 ஞாயிறு மாலை 5.45 மணியளவில் தொடங்கியது சுமதி மதிவதனி (தி.வி.க. இராசிபுரம்) தலைமை தாங்கினார். மணிமேகலை (தி.வி.க. ஈரோடு) வரவேற்புரை யாற்றினார். வி.பாலு (தி.மு.க.முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்), கழகத் தலைவர் கொளத்தூர்மணி, முனைவர் சுந்தரவள்ளி (த.மு.எ.க.ச.) நிகழ்வில் சிறப்புரையாற்றினர். 1) மதவாத சக்திகளுக்கு எதிராகவும், சமூக நீதி காக்கவும் துணிச்சலாக களமாடி வருகிற முனைவர் சுந்தரவள்ளி அவர்களுக்கு ‘மக்கள் அரசியல்’ விருதினையும், 2) கரூர்மாவட்டம் பள்ளப்பட்டியைச் சார்ந்த பெரியார் பற்றாளரும் இந்தியாவின் தலைசிறந்த 100 இயற்கை வேளாண்மை விவசாயிகளில் ஒருவராக டெல்லியில் தனியார் ஊடகம் ஒன்றால் தேர்ந்தெடுக்கப் பட்டவரும், காடுகளை அழித்தொழித்த ஈஷா யோகா...
