பெரியார் நினைவு நாள் நிகழ்வு
இராசிபுரத்தில் : தந்தைபெரியாரின் 45 வது நினைவேந்தல் நிகழ்வு இராசிபுரம் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் இராசிபுரம் ஜபாரதிதாசன் சாலையில் உள்ள தி.வி.கழக அலுவலகம்முன் நடைபெற்றது. பகுத்தறிவு பகலவனுக்கு முழக்கங்கள் எழுப்பி வீரவணக்கம் செலுத்திய நிகழ்வில் ர. சுமதிமதிவதனி (தி.வி.க.), திலகா (இராசிபுரம்) வரவேற்புரையாற்றினார். இரா. பிடல்சேகுவேரா (நகரஅமைப்பாளர் தி.வி.க) தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டவர்கள் : வி.பாலு நுஒ. ஆஊ, தி.மு.க.முன்னாள் மாவட்ட இளைஞரணி துணைஅமைப்பாளர், தலைவர், இராசிபுரம் நகரவளர்ச்சி மன்றம்.
முன்னிலை: மணிமாறன் (நகர செயலாளர் சி.பி.ஐ.), ஜி.கே. வைகறை சேகர் (மாநில துணைச் செயலாளர் விவசாயஅணி, வி.சி.க.), கண்ணன் (மாவட்டச் செயலாளர், ஆதித் தமிழர் பேரவை), தட்சிணாமூர்த்தி (மாவட்டத் தலைவர், தமிழர் தேசிய முன்னணி), நாணற்காடன் (மாநிலதுணைசெயலாளர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்), சுமன் (மா.துணை செயலாளர், ஆதி தமிழர்பேரவை), அண்ணாதுரை (ஒ.செயலாளர், ஆதிதமிழர் பேரவை), பாலகிருட்டிணன் (புரட்சிகர இளைஞர் முன்னணி), கீதாலட்சுமி (நகர வழக்கறிஞர் அணி தி.மு.க.), திளவேந்திரன் (நகர சிறுபான்மையினர் அணி அமைப்பாளர்), தங்கதுரை (தி.மு.க நிர்வாகி), குபேர்தாஸ் (தலைவர் கோல்டன் நற்பணி சங்கம்), பூபதி (கமலஹாசன் நற்பணி இயக்கம்) மற்றும் பெரியார் பிஞ்சு, சிரஞ்சீவி. நன்றியுரையாற்றினார் திலீபன் (தி.வி.க.)
நிகழ்வில் இராசிபுரம் நகர திராவிடர் விடுதலைக்கழகம் முன்னெடுக்கும் நிகழ்வுகளுக்கு தொடர்ந்து ஊக்கத்தையும்,நிதி உதவியையும் அளித்து வரும் இராசிபுரம தி.மு.க.பிரமுகர் வி.பாலு, தி.வி.க.வின் 2019ஆம் ஆண்டிற்கான மாத நாள்காட்டியையும், நவம்பர் மாத நிமிர்வோம் இதழையும், தி.மு.க.நகர வழக்கறிஞர் அணி கீதாலட்சுமி, பெரியார் பற்றாளர் திலகா ஆகியோருக்கு மாத நாள்காட்டி, நிமிர்வோம் மாத இதழோடு பெரியார் எழுதிய ‘பெண் ஏன் அடிமையானாள்’ நூலையும் சுமதி மதிவதனி வழங்கினார். தோழமைக் கட்சிப் பொறுப்பாளர்களுக்கு மாத நாள்காட்டியையும், நவம்பர் மாத ‘நிமிர்வோம்’ இதழையும் வி.பாலு வழங்கினார்
ஈரோட்டில் : பகுத்தறிவுப் பகலவன் பெரியார் 45 வது நினைவு தினத்தையொட்டி திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக அய்யாவின் சிலைக்கு மாலை அணிவித்தும் , முழக்கங்கள் செய்தும் வீரவணக்கம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்றத் தோழர்கள் பெ.கிருஷ்ணமூர்த்தி, ரங்கம்பாளையம் கிருஷ்ணன், மணி மேகலை, விஜயரத்தினம், புலிமோகன், பிரபு, சதீஸ், மகேஷ்வரி, சத்தியராஜ், சௌந்தர், அறிவுமதி ஆகியோர் பங்கேற்றனர்.
பெரியார் முழக்கம் 03012019 இதழ்