இராசிபுரத்தில் “ஆரியம் – திராவிடம் – தமிழ் தேசியம் ” கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு.

 

இராசிபுரத்தில் திராவிடர்விடுதலைக்கழகத்தின் சார்பில் ஞாயிறு 08.04.18 அன்று”ஆரியம் – திராவிடம் – தமிழ் தேசியம்” எனும் தலைப்பில் கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.

தோழர் வசந்தி அவர்கள் வரவேற்புரையாற்றினார். தோழர் சுமதி மதிவதனி அவர்கள்கருத்தரங்கிற்கு தலைமை தாங்கினர்.

சிறப்பு அழைப்பாளராக திமுகவின் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் தோழர் வி.பாலு அவர்கள் கலந்து கொண்டார்.

கருத்துரையாக திரைப்பட துணை இயக்குநர் தோழர் கலைமதி, தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் தோழர் வீரா.கார்த்திக், திவிகவின் தலைமைக் கழக பேச்சாளர் தோழர் கோபி.வேலுச்சாமி ஆகியோர் பேசினர்.

தோழர் ஈரோடு மணிமேகலை அவர்கள் நன்றியுரையாற்றினார்.ஏராளமான கழகத்தோழர்கள் ஆதரவாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Image may contain: one or more people, people sitting and indoor
Image may contain: 6 people

You may also like...