ஈரோடு பெரியார் சிலை முன் கழக தோழர்கள் நீட் தேர்விற்கு எதிரான உறுதிமொழி 03092017

திராவிடர் விடுதலைக் கழக மேற்கு மாவட்ட தோழர்கள் 03092017 மாலை ஈரோடு வீரப்பன் சத்திரம் பேருந்து நிலையத்தில் கல்வி உரிமை போராளி டாக்டர் அனிதா தற்கொலைக்கு நீதி வேண்டி நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் பன்னீர் செல்வம் பூங்காவில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து 60க்கும் மேற்பட்ட தோழர்கள் நீட் தேர்வை ரத்து செய்யும் வரை பெரியாரிய வழியில் போராட்டம் நடைபெறும், ஓயமாட்டோம் என்று உறுதிமொழி எடுத்தனர்.

நீட் தேர்வுக்கு எதிரான உறுதிமொழியை தோழர் கனல்மதி படிக்க அனைத்து தோழர்களும் உடன் சேர்ந்து உறுதியேற்றனர்.

தேர்வு உள்ளிட்ட தகுதி, திறமை என்று சொல்லி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி வேலை வாய்ப்பை பறிக்கும் எல்லாவித நுழைவுத் தேர்வுகளையும் தமிழ்நாட்டிலிருந்து விரட்டி அடிப்போம், தமிழக மக்களின் கல்வி நலம் காப்போம்

மாநில பரப்புரை செயலாளர் தோழர் பால் பிரபாகரன் அவர்கள்  முழக்கங்களை எழுப்பி உறுதிமொழியை நிறைவு செய்தார்.

வீரவணக்கம் வீரவணக்கம்

டாக்டர் அனிதாவுக்கு வீரவணக்கம் வீரவணக்கம்

வீரவணக்கம் வீரவணக்கம்

தோழர் அனிதாவுக்கு வீரவணக்கம் வீரவணக்கம்

ஏற்கமாட்டோம் ஏற்கமாட்டோம்

நீட் தேர்வை ஏற்கமாட்டோம்

விரட்டி அடிப்போம் விரட்டி அடிப்போம்

பார்ப்பனிய சூழ்ச்சியை விரட்டி அடிப்போம்

நிகழ்வை  மாநில அமைப்பு செயலாளர் தோழர் இரத்தினசாமி ஒருங்கிணைத்தார்.  மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் உடனிருந்தனர்.

pspark

21230823_1821823374509590_981147449974381841_n

 

You may also like...