சேலம் மாவட்டக் கலந்துரையாடல் : கழகத் தலைவர் தலைமையில் நடந்தது
சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகக் கலந்துரையாடல் கூட்டம், 11.05.2023 வியாழன் காலை 11.00 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் மேட்டூர் தாய்த் தமிழ் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்தில் சேலத்தில் நடைபெற்ற இரண்டு நாள் மாநில மாநாடு குறித்து விவாதிக்கப்பட்டது. சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட் மாநாட்டு வரவு செலவு கணக்குகளை தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார், தலைமைக் குழு உறுப்பினர் சக்திவேல், மேற்கு மாவட்ட செயலாளர் சி.கோவிந்தராஜ் ஆகியோர் மாநாடு குறித்தும், மாநாட்டிற்காக உழைத்த தோழர்களைப் பற்றியும், தோழர்கள் ஒவ்வொருவரின் உழைப்பும் இந்த மாநாடு சிறக்க உதவியாக இருந்தது என்று தமது உரையில் குறிப்பிட்டனர். அதன் பிறகு மாவட்டத்தில் இருந்து வந்திருந்த மாவட்ட அமைப்பாளர்கள், மாநகர, நகர, ஒன்றிய, கிளைக் கழக பொறுப்பாளர்களும், தோழர்களும், மாநாடு குறித்தும் மாநாட்டிற்காக தங்கள் பகுதியில் திரட்டிய நன்கொடை மற்றும் செலவு...
