மாட்டிறைச்சி உணவு கடைக்கு சீல்: கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்
சேலத்தில் மாட்டிறைச்சி உணவு கடைக்கு சீல் வைத்த சேலம் மாவட்ட வருவாய்த் துறை, மாநகராட்சி, காவல்துறை ஆகியவற்றை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைப்பில் முற்போக்கு இயக்கங்கள் இணைந்து 05.08.2022 வெள்ளி காலை 10 மணியளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விசிகவின் மாநகர மாவட்டப் பொருளாளர் காஜா மொய்தீன் தலைமை தாங்கினார்.
இந்து முன்னணியின் கைப்பாவையாக மாறிப்போன சேலம் வருவாய்த்துறை மற்றும் மாநகராட்சி, காவல்துறை ஆகியவற்றின் அராஜகப் போக்கை கண்டித்து ஆர்பாட்டத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதனைத் தொடர்ந்து முற்போக்கு இயக்கங்களின் பொறுப்பாளர்கள் தங்களது கண்டன உரைகளை பதிவு செய்தனர்.
விசிக மண்டல அமைப்புச் செயலாளர் நாவரசன் – ஊஞஐ (ஆ) மாவட்டச் செயலாளர் சண்முகராஜா – தமுமுக பொறுப்புக்குழுத் தலைவர் முகமது ரபீக் – ஞகுட மாவட்டத் தலைவர் பைரோஸ்கான் – ளுனுஞஐ பொதுச் செயலாளர் ஷெரிப் பாஷா – ஊஞட மாவட்டச் செயலாளர் மோகன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி தம் நிறைவுரையில், “மாட்டிறைச்சி கடைக்கு சீல் வைக்க காரணமாக இருந்த இந்து முன்னணியினருக்கு மாட்டிறைச்சிக் கடை இருக்கக் கூடாது என்று சொல்லும் உங்கள் பி.ஜே.பி. ஆட்சியில்தான் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்யும் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களை முஸ்லிம்கள் பெயரில் நடத்துபவர்கள் பார்ப்பனர்கள்தாம் என்றும், குறிப்பாக க்ஷதுஞ சட்டமன்ற உறுப்பினரே மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்”என்கின்ற தகவல்களை குறிப்பிட்டு உரையாற்றினார். முடிவில் விசிக வடக்கு தொகுதி துணைச் செயலாளர் ஹூமாயூன் நன்றியுரையாற்றினார்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் சேலம், இளம்பிள்ளை, ஏற்காடு, நங்கவள்ளி, மேட்டூர், மேட்டூர் சுள, கொளத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து திராவிடர் விடுதலைக் கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் 11082022 இதழ்