கழக செயல்பாடுகளை தீவிரப்படுத்துகிறது, சேலம் மாவட்டக் கழகம்
05.01.2020 அன்று காலை 11 மணியளவில் கழகத்தின் பொறுப் பாளர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் சேலம் தாதகாப்பட்டி சாலையில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் க. சக்திவேல் தலைமையிலும், மாவட்டச் செயலாளர் இரா. டேவிட் முன்னிலையிலும் நடைபெற்றது.
அதில் இயக்கத்தின் செயல் பாடுகளை முடுக்கிவிடும் விதமாக முதலாவதாக ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ மற்றும் ‘நிமிர்வோம்’ இதழ்களுக்கான சந்தா சேர்ப்புகளை துரிதப்படுத்தி ஜனவரி மாத இறுதிக்குள் ஒப்படைக்க வேண்டும் எனவும், கிழக்கு மாவட்டம் முழுதுமாக தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவதெனவும், தெருமுனை பிரச்சாரத்துக்காக ஒலிபெருக்கியுடன் கூடிய மேடை வடிவமைப்போடு சொந்தமாக பிரச்சார வேன் (மஹேந்திர வேன்) ஒன்று வாங்கவும் பொறுப்பாளர்களின் ஒருமித்த கருத்தோடு முடிவெடுக்கப்பட்டது.
பெரியார் முழக்கம் 16012020 இதழ்