Category: இயக்கம்

ஜாதி ஆணவப் படுகொலை; திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனம்!

ஜாதி ஆணவப் படுகொலை; திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனம்!

ஆணவப் படுகொலைகளை தடுக்க ஜாதி ஆதிக்க மனநிலையில் இருந்து அம்மன நிலையில் உள்ளோர் வெளியில் வரவேண்டும் என கோரிக்கை! கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியை சேர்ந்தவர் கவின் செல்வ கணேஷ் (27) கவினை 27.7.25 அன்று பாளையங்கோட்டையில் சுஜித் என்பவர் வெட்டி படுகொலை செய்கிறார். கவின் பட்டியல் சமூகத்தையும் சுஜித் பிற்படுத்தப்பட்ட சமூகத்தையும் சார்ந்தவர்கள். சுஜித்தின் சகோதரியை கவின் காதலித்த காரணத்தினால் கவினை சுஜித் ஜாதி ஆணவப் படுகொலை செய்துள்ளார் என்பது தெளிவாகிறது. ஜாதி ஆணவப் படுகொலை செய்த சுஜித் தானாக முன்வந்து காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டு தற்பொழுது அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது. கவின் பெற்றோர் சரவணன், கிருஷ்ணவேணி ஆகியோர் காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் மீதும் வழக்கு போடப்பட்டு அவர்கள் தற்காலிக பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.இந்நிலையில்...

படுகொலைகளின் பீடமாகிய ‘தர்மஸ்தலா’

படுகொலைகளின் பீடமாகிய ‘தர்மஸ்தலா’

கர்நாடக மாநிலம், தர்மஸ்தலாவில் மஞ்சுநாதா என்ற கோயில் பாஜக எம்.பி வீரேந்திர ஹெக்டே கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலுக்குச் சொந்தமான‌ நிலத்தில் 100க்கும்‌ மேற்பட்ட பெண்கள் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதாகவும், உடல்களைப் புதைத்ததாகவும், மஞ்சுநாதா கோயிலின் முன்னாள் ஊழியர் பீமா கடந்த ஜீலை 4-ம் தேதி புகார் அளித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் தென் பகுதியில் உள்ள தர்மஸ்தலாவில் பத்தாண்டுகளாக பாலியல் வல்லுறவுகளும் படுகொலைகளும் நடந்து வருவதாக தற்போது ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து அவர் கூறியதாவது: 1995ம் ஆண்டு முதல் 2014 வரை, மஞ்சுநாதா கோவிலில் துாய்மைப் பணியாளராக வேலை செய்தேன். இந்த காலகட்டத்தில் கோயிலின் அருகில் ஓடும், நேத்ராவதி ஆற்றங்கரையில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிலையில், 100க்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை என் மேற்பார்வையாளர் உத்தரவின்படி புதைத்தேன்’ என வாக்குமூலம் அளித்துள்ளார். தனக்கு மேல் இருந்தவர்கள் தன்னை கொன்று‌ விடுவதாக மிரட்டியதால் இத்தனை ஆண்டுகள் அமைதியாக இருந்ததாக அவர் சொல்கிறார். குற்ற...

பனகல் அரசரும் திராவிட மாடலும்

பனகல் அரசரும் திராவிட மாடலும்

நீதிக் கட்சியின் தலைவர்; இரண்டு முறை சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் அரசரின் பிறந்தநாள் இன்று! (09.07.1866) மகத்தான சாதனைகளை புரிந்தவர். தமிழ்நாட்டின் திராவிட மாடல் ஆட்சிக்கும் பனகல் அரசரின் ஆட்சிக்கும் பல ஒற்றுமைகள் உண்டு.அரசு பதிவேடுகளில் `பறையர் பஞ்சமர்’ என்ற இழிசொற்களை நீக்கி ஆதிதிராவிடர் என்று அறிவிக்க ஆணையிட்டவர் பனகல்அரசர். திராவிட மாடல் ஆட்சி ஆதி திராவிட நல விடுதிகளை `சமூக நீதி’ விடுதிகளாக பெயர் மாற்றம் செய்துள்ளது. அவமானச் சொல்லான `காலனி’ என்ற சொல்லை அரசு பதிவேடுகளில் இருந்து நீக்கி இருக்கிறது. மாநிலங்களின் உரிமைக்காக திராவிட மாடல் ஆட்சி குரல் கொடுப்பதைப் போல் பனகல் அரசரும் போராடினார். பிரிட்டிஷ் அரசிடம் இருந்த மருத்துவத் துறையை கடுமையாக எதிர்த்துப் போராடி, மாகாண சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மாநில உரிமைக்கு கொண்டு வந்தவர் பனகல் அரசர். முதல் இந்திய மருத்துவக்‌ கல்லூரியை அவர்தான் நிறுவினார். இன்று மும்மொழி வழியாக...

கழகத் தோழர் கன்னியப்பன் முடிவெய்தினார்!

கழகத் தோழர் கன்னியப்பன் முடிவெய்தினார்!

சென்னை மாவட்டக் கழகத் தோழர் கன்னியப்பன் உடல்நலக் குறைவால் கடந்த 12.07.2025 அன்று முடிவெய்தினார். அவரின் உடலுக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தினார்கள். இறுதி ஊர்வலத்தில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன், மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், மாவட்ட துணைச் செயலாளர் இராவணன், வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு ராஜேந்திரன், இளைஞரணி அமைப்பாளர் அருண், தட்சிணாமூர்த்தி, ஏசுகுமார், மற்றும் கழகத் தோழர்கள் நிகழ்வில் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 17072025இதழ்

பெரியார் பல்கலைகழகத்தில் ஜாதியப் பாகுபாடு

பெரியார் பல்கலைகழகத்தில் ஜாதியப் பாகுபாடு

சேலம் பெரியார் பல்கலையில் ஜாதியப் பாகுபாடு, வன்கொடுமை நிலை தமிழக அரசு தலையிட்டு தமிழ்த் துறைப் பேராசிரியர் பெரியசாமி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டியலின முனைவர் பட்ட மாணவர்கள் முனைவர் பட்டத்தை முடிக்க முடியாமல் தமிழ் துறைப் பேராசிரியர் பெரியசாமி இடையூறு செய்து வருவதால் பல பட்டியலின முனைவர் பட்ட மாணவ மாணவிகள் வெளிப்படையாகப் புகார் அளித்துள்ளது மிகவும் வேதனையான ஒன்றாகும். படிக்கும் மாணவர்களை வீட்டு வேலை செய்யச் சொல்வது, வீட்டிற்குத் தண்ணீர் பாய்ச்சக் கூறுவது, மளிகை பொருட்களை வாங்க சொல்வது போன்ற கொடுமைகள் பெரியார் பல்கலையில் நடப்பது வேதனையான ஒன்று. இனியும் இதை அனுமதிக்க முடியாது.பட்டியலின, மிகப்பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவிகளை வேலைக்காரர்களாக எஜமான மனப்பான்மையோடு நடத்துவது கண்டனத்திற்கு உரியது. பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆய்வு மாணவர்கள்...

விநாயகன் அரசியல் ஊர்வலத்தை கட்டுப்படுத்துக! கழக சார்பில் காவல்துறையில் மனு!

விநாயகன் அரசியல் ஊர்வலத்தை கட்டுப்படுத்துக! கழக சார்பில் காவல்துறையில் மனு!

விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் கலவரத்தைத் தூண்டும் சங் பரிவார அமைப்புகளைக் கட்டுப்படுத்தவும், அனுமதி இல்லாத இடங்களில் சிலைகளை வைத்து மத மோதல்களைத் தூண்டுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் நடக்கும் அத்துமீறல் மற்றும் விதிமீறல்களைத் தடுக்கக் கோரியும், சிலைத் தயாரிப்பு – ஒலி பெருக்கி பயன்படுத்துதல் உள்ளிட்ட அரசு வகுத்த வழிகாட்டு நெறிகளை சரியான முறையில் பின்பற்ற வேண்டும், அதை அரசு கண்காணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நீதி மன்றங்களை மதிக்காமல் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு பேராபத்துகளை விளைவிக்கும் வகையிலும் இந்த நிகழ்ச்சியை இவர்கள் நடத்தி வருகிறார்கள். நீதிமன்ற ஆணைகள், தமிழ்நாடு அரசின் ஆணைகளை அமுல்படுத்தி கடமையாற்ற வேண்டிய காவல்துறை மற்றும் மாநில, மாவட்ட அரசு அதிகாரிகள் தொடர்ந்து தங்கள் கடமையை செய்ய வலியுறுத்தி மனுக்களை நீதிமன்ற ஆணை நகல்களுடன் இணைத்து கோரிக்கை மனு சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம்,மாவட்ட...

அன்பு தனசேகர் பணி ஓய்வு பாராட்டு விழா!

அன்பு தனசேகர் பணி ஓய்வு பாராட்டு விழா!

கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் வருமான வரித் துறையில் அதிகாரியாகப் பணியாற்றி 36 வருட பணிக்குப் பின் ஓய்வு பெற்றுள்ளார். பணி ஓய்வு பாராட்டு விழா கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை தியாகராயர் நகரில் சிறப்புடன் நடைபெற்றது. உடன் பணியாற்றிய அலுவலர்கள், உறவினர்கள், கழகத் தோழர்கள் நண்பர்கள் திரண்டு வந்திருந்தனர். அன்பு தனசேகர் மகள் வழக்கறிஞர் இளவேனில் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். உரையாற்றியவர்கள் அன்பு தனசேகரின் சமூகத் தொண்டுகளை சமூக தொண்டாற்றுவதில் அவரின் ஆர்வத்தையும் பாராட்டினர். தனது பெண் மக்களை முழு சுதந்திரத்துடன் வளர்த்தார். அலுவலகத்தில் ஆளுமைகளை அழைத்து வந்து நிகழ்ச்சிகளை நடத்தினார். அதிகாரியாக இருந்தும் ஒரு அதிகாரியாக நடந்து கொள்ளாமல் எளிமையான மனிதராக எல்லோரிடமும் பழகியவர். தனக்கு கீழே பணியாற்றும் ஊழியர்களுக்கு உதவியவர். அமைப்புகளை உருவாக்கி வழி நடத்தியவர். பிற்படுத்தப்பட்டோர் சமூக உரிமைக்காக தொடர்ந்து களத்தில் நின்றவர். பல ஊர்களுக்கு சென்று பயிற்சி வகுப்புகளை நடத்தியவர். நடைபயிற்சி...

சேலம் இளைஞரணி முடிவுகள்!

சேலம் இளைஞரணி முடிவுகள்!

சேலம் மாவட்ட இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டம் வெள்ளார் பகுதியில் 06.07.2025 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது. கலந்தாய்வு கூட்டத்திற்கு சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை, சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சிவ சண்முகம், சேலம் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மாவட்ட இளைஞர் அணியின் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து தோழர்கள் அனைவரும் தங்களது ஆலோசனைகளையும் கருத்துகளையும் வழங்கினார்கள். தீர்மானங்கள்: 1). ஜூலை மாத இறுதிக்குள் சேலம் மாவட்ட இளைஞர் அணியின் சார்பில் மேச்சேரியில் கருத்தரங்கம் நடத்துவது எனவும், 2). கிராமப்புற பகுதிகளில் மாதம் ஒரு தெருமுனைக் கூட்டம் நடத்துவது, 3). மாதம் ஒரு பகுதியில் கிளைக் கழக சந்திப்பு நடத்தி புதிய இளைஞர்களை திரட்டுவது. 4). புதிய இளைஞர்களுக்கு வருடம் ஒரு பயிலரங்கம் இளைஞர் அணி சார்பாக நடத்துவது,...

உடற் கொடை அளிப்பு!

உடற் கொடை அளிப்பு!

திருப்பூர் தி.வி.க தோழர் மலரவன் என்கிற மலர் மணி நாதன் உடல் நலிவுற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் 28.06.2025 இரவு 8. 30 மணியளவில் மரணம் அடைந்தார். அவரது உடல் சோளிபாளையம் பாரதி நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு பிறகு அவரது விருப்பத்தின் பேரில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஞாயிற்றுக் கிழமை 29.6.2025 காலை 12.30 மணிக்கு அவரது உடல் கொடையாக வழங்கப்பட்டது. தோழர் மலரவனின் உடலுக்கு எந்தவிதமான ஜாதி மத சடங்குகளும் செய்யப்படவில்லை. மலர் மாலை கூட அணிவிக்கப்படாமல் பெண் தோழர்கள் கொள்கை முழக்கமிட்டு உடலை சுமந்து வந்தனர். தோழரின் இணையர் பாண்டிச்செல்வி, மகள் மதுலதா, மகன் பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் கொடையாக வழங்கப்பட்டது. மலரவன் அவர்கள் 41 ஆண்டுகளாக தந்தை பெரியார் கொள்கையை கடைபிடித்தவர். தனது குடும்ப உறுப்பினர்களை பெரியார் வழியில் நடத்தியவர் ஆவார். நிகழ்வில் சு.துரைசாமி பொருளாளர், வீ.சிவகாமி தலைவர் தமிழ்நாடு...

கோயில்களைப் பள்ளிகளாக மாற்றிய பூந்தோட்டம்!‌

கோயில்களைப் பள்ளிகளாக மாற்றிய பூந்தோட்டம்!‌

வரலாற்று பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த சமூக புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரை தொடரை முரசொலியில் ர.பிரகாசு எழுதி வருகிறார். இது பூந்தோட்டத்தில் நடந்த புரட்சி! “எங்கள் ஊரில் முன்பு கோயில் இருந்தது. பெரியார் ஒருமுறை எங்கள் ஊருக்கு வந்தார். ‘இந்த ஊர்ல இத்தன கோயில் இருக்கே? எத்தனை பள்ளிக்கூடம் இருக்கு? எவ்வளவு தற்குறியாவும், கைநாட்டுப் பசங்களாகவும் திரியறீங்க? பொம்பளங்கள, புள்ளை பெக்குற மெஷினாட்டம் வச்சிருக்கீங்க! பெண்களைப் படிக்க வச்சிங்கன்னா மொத்த சமுதாயத்தையும் காப்பாத்துவாங்க’ என்று பேசினார். உடனே கோயில்கள் எல்லாம் பள்ளிகளாக மாறிவிட்டன. இப்போது வீட்டுக்கு ஒரு குழந்தையை ஆசிரியருக்குப் படிக்க வைக்கிறோம். அதுவும் பெண் குழந்தையை” என்று கூறியுள்ளார். தினமணியின் மகளிர் மலர் ஒன்றில் ஒருமுறை மனோரமா அளித்த நேர்காணலில் சொன்ன தகவல் இது. மனோரமா சொன்ன அந்த ஊர், கடலூர் மாவட்டம், சிதம்பரத்திற்கு அருகே உள்ள பூந்தோட்டம் கிராமம்....

‘டார்வின்’ நேருக்கு நேர் நடந்த விவாதம்! கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(6) -விடுதலை இராசேந்திரன்

‘டார்வின்’ நேருக்கு நேர் நடந்த விவாதம்! கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை(6) -விடுதலை இராசேந்திரன்

உயிர்கள் எப்படி தோன்றின? இந்த கேள்விக்கான பதில்கள் காலத்துக்கு ஏற்றார் போல் மாறிக்கொண்டிருக்கின்றன. இந்த கேள்வி எப்போது உருவானது? மனித மூளை உருவான பிறகுதான். கடவுளை, மதத்தை, ஜாதியை உருவாக்கியது மனித மூளை தான். ஆதிசேஷன் என்ற பாம்புதான் பூமியைத் தாங்கிக் கொண்டு இருப்பதாக இந்து புராணங்கள் கூறுகின்றன. நானே கடவுள்; பக்தர்களைக் காக்கவும் வர்ண தர்மத்தை நிலைநாட்டவும் நான் வந்திருக்கிறேன். தர்மம் மீறப்படும்போது நான் அவதாரம் எடுத்து வருவேன். அது சாம்ப வாமி யுகே, யுகே என்று கீதையில் கிருஷ்ண பகவான் கூறுவதாக எழுதி வைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல கடவுளே மனிதர்களை நான்கு வர்ணங்களாக பிராமணன், சத்ரியன், வைசியன், சூத்திரன் என்று படைத்தார் என்றும் கீதை கூறுகிறது. இந்த மனிதர்களை வர்ண பாகுபாடுடன் உயிரையும் உடலையும் தந்து பூமிக்கு அனுப் பியவர்கள் கடவுள்கள் தான் என்ற நம்பிக்கை மக்கள் மீது திணிக்கப்பட்டது. உண்மையில் கடவுள் எந்த மனிதரையும் படைக்கவில்லை. அது...

சிந்தனையை தூண்டும் நூல்!

சிந்தனையை தூண்டும் நூல்!

நீங்கள் நாத்திகரா? இதைப் படிக்க வேண்டாம் என்ற தலைப்பில் அறிவுச் சுடர் வெளியீட்டகம் நூல் ஒன்று வெளியிட்டுள்ளது. நூலின் நோக்கம் விளக்கப்பட்டுள்ளது. நீங்கள் நாத்திகரா? இதைப் படிக்கவேண்டாம் என்று தலைப்பிட்டதன் காரணம் இந்தப் புத்தகத்தின் கேள்விகள் அனைத்தும் உங்களைப் பொருத்த வரையில் பொருத்தமற்றதே. ஆனாலும் புத்தகம் முழுவதையும் படித்துவிட்டீர்களானால் ஒரு கடவுள் நம்பிக்கையாளரிடம் எவ்வாறு விவாதிப்பது அல்லது சிந்தனையைத் தூண்டுவது என்பதற்கு ஒரு வழிகாட்டலாக இருக்கும். அதுபோல மறு வெளியீடுகளில் இதனை மேம்படுத்த நீங்களும் உதவலாம். நூல் விலை: ரூ.50 கிடைக்கும் இடம்: அறிவுச் சுடர் வெளியீட்டகம், திருச்சி பெரியார் முழக்கம் 10072025இதழ்

கழகத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து!

கழகத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து!

20.06.2025 அன்று கழகத் தலைவரின் 78 வது பிறந்தநாளில் சேலம் மாவட்ட மகளிர் அணி சார்பில் தலைவரை சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. கழகத் தலைவருக்கு பிறந்தநாள் பரிசாக மகளிர் அணி சார்பில் ரூ.10,000 வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சேலம் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்கள் சுதா, சரசுவதி மற்றும் தோழர்கள் கலைச்செல்வி, காயத்ரி, கோமதி, கீதா, தேன்மொழி, இராணி, அருள்மொழி, மகிழினி ஆகியோர் கலந்துகொண்டனர். பெரியார் முழக்கம் 10072025இதழ்

சமுகநீதி விடுதிகள்

சமுகநீதி விடுதிகள்

தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அரசு பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் விடுதிகளாக அழைக்கப்பட்டு வந்தன. `சமூகநீதி விடுதிகள்’ என்றே அழைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது பாராட்டி வரவேற்கத்தக்க அறிவிப்பாகும். விடுதிகளில் தலைவர்களின் பெயர் சூட்டப்பட்டு செயல்பட்டு வரும் சில விடுதிகளும் உள்ளன. அந்த விடுதிகள் அந்தத் தலைவரின் பெயர்களோடு சமூகநீதி விடுதி என்று சேர்த்து அழைக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். பள்ளி மாணவர்கள் ஜாதி அடையாளத்தை அறிவிக்கும் கயிறுகளைக் கட்டிக்கொண்டு பள்ளிக்கு வரக்கூடாது என்று இந்த ஆண்டு பள்ளி திறப்புக்கு முன் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளதையும் நாம் சுட்டிக் காட்ட வேண்டும். பள்ளிகளில் மாணவர்களிடையே ஏற்படும் ஜாதி மோதல்களைத் தடுப்பது குறித்து ஆராய நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு ஆணையத்தை தமிழ்நாடு அரசு நியமித்தது. ஆணையம் மிக சிறப்பான பரிந்துரைகளை அரசுக்கு...

கழக ஏட்டுக்கு வளர்ச்சி நிதி!

கழக ஏட்டுக்கு வளர்ச்சி நிதி!

கழக மாவட்டச் செயலாளர் உமாபதி-பாரதி இணையரின் 21-ம் ஆண்டு இணையேற்பு நாளை முன்னிட்டு கழக ஏட்டுக்கு ரூ.2000 நன்கொடை வழங்கினர். மேலும் மதுரை கழகத் தோழர் அழகர் பிரபாகரன் அவரது மகன் இளமகிழன் பிறந்தநாளை முன்னிட்டு ரூ.2000 நன்கொடை வழங்கினார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். பெரியார் முழக்கம் 10072025இதழ்

பீகாரில் பில்லி சூனிய‌ நம்பிக்கையால் 200 பேர் முன்னிலையில் ஒரே குடும்பத்தில் ஐவர் எரித்து கொலை!

பீகாரில் பில்லி சூனிய‌ நம்பிக்கையால் 200 பேர் முன்னிலையில் ஒரே குடும்பத்தில் ஐவர் எரித்து கொலை!

பில்லி சூனியக்காரர் என்று ஒரு குடும்பத்தின் ஐந்து பேர் எரித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பீகாரில் அரங்கேறி உள்ளது. பியூரின் மாவட்டத்தில் டெட்காமா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வாழும் ராம்தேவ் மகத்தோ என்பவரின் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாத நிலையில் சிகிச்சைக்கு கிராம வைத்தியர் பாபுலால் ஒரன் (50) என்பவரிடம் சென்றுள்ளனர். சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்து விட்டது. மூன்று நாட்களுக்குப் பிறகு ஊர்த் தலைவர் முன்னிலையில் கிராம மக்கள் கூடினார்கள். சிகிச்சை அளித்த கிராம வைத்தியர் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் பில்லி சூனியக்காரர்கள் என்று கிராமத்தினர் முடிவு செய்தனர். அவர்களை கட்டையால் அடித்து சாகடித்து பிறகு தீ வைத்து எரித்து சடலங்களை ட்ராக்டர் ஒன்றில் ஏற்றி கிராமத்தில் குழித் தோண்டி புதைத்தனர். இதில் உயிர் தப்பிய வைத்தியரின் 16 வயது மகன் இந்த தகவலை தங்களுடைய உறவினர்களிடம் தெரிவித்தார். மாவட்ட காவல்துறை அதிகாரி...

சுயமரியாதை நூற்றாண்டு மேடையில் ஜாதி மறுப்பு திருமணம்!

சுயமரியாதை நூற்றாண்டு மேடையில் ஜாதி மறுப்பு திருமணம்!

5/7/25 அன்று மாலை 5 மணிக்கு, சென்னை நங்கநல்லூரில், தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன் தலைமையில், ம.குகாநந்தன் முன்னிலையில் நடைபெற்றது. இரண்யா வரவேற்புரையாற்றினார். “சுயமரியாதை இயக்கத்தின் வீரஞ்செறிந்த போராட்டங்கள்” எனும் தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரையாற்றினார். வரலாற்று ஆவணமாக இவ்வுரை அமைந்தது. “குடிஅரசு உருவாக்கிய அதிர்வலைகள்” எனும் தலைப்பில் ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி ஆழமான ஆய்வுரையை நிகழ்த்தினார். பொதுக்கூட்டத்தின் சிறப்பம்சமாக, பொதுக்கூட்ட மேடையிலேயே ஆனந்தகுமார் – ஷர்மிளா இணையரின் சுயமரியாதை ஜாதி மறுப்புத் திருமணமும் நடைபெற்றது. இந்நிகழ்வு மக்களை வெகுவாகக் கவர்ந்தது. கார்மேகம் – வீரமணி – பேரன்பு – திராவிட மகிழன் குழுவினரின் பகுத்தறிவுப் பாடல்கள் மக்களை சிந்திக்க வைத்தன. தாம்பரம் நகர அமைப்பாளர் அருண் கோமதி நன்றியுரையாற்றினார். களப்பணியாற்றிய தோழர்களுக்கும் கலைஞர்களுக்கும் நினைவுப்பரிசாக புத்தகங்களை, தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, தென்சென்னை மாவட்டத்...

கழக ஏட்டுக்கு நன்கொடை!

கழக ஏட்டுக்கு நன்கொடை!

கழகத் தோழர் இரண்யா தனது மகன் அகராதி பிறந்தநாளை முன்னிட்டு ரூ.2000 சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி அவர்களிடம் வழங்கினார். கழகத் தோழர் அஜித் ரூ.1000 கழக ஏட்டுக்கு நன்கொடை வழங்கினார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். பெரியார் முழக்கம் 03072025இதழ்

மொக்கைப் பேச்சு அமித்ஷா!

மொக்கைப் பேச்சு அமித்ஷா!

அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட இந்திராகாந்தியின் காலம் உண்மையில் “இருண்ட காலம்” தான். தமிழ்நாட்டில் திக, திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் மிசா, ஒடுக்குமுறை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். சென்னை சிறையில் தாக்கப்பட்டனர். விடுதலை, முரசொலி, தீக்கதிர் நாளேடுகள் கொடூரமான தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டன. அக்ரஹார அதிகாரவர்க்கம் விடுதலை நாளேட்டை ஒவ்வொரு நாளும் தணிக்கை செய்த காலத்தில் நான் ‘விடுதலை’யில் பணியாற்றினேன் அடக்குமுறை சூழலை எதிர் கொண்டோம். திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் இன்றைய நிலைப்பாடும் அது ‘இரண்ட காலம்’ என்பதுதான். ஆனால் `அமித்ஷாக்கள்’ இப்போது காங்கிரஸ் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு இதைப் பயன்படுத்த தீவிரம் காட்டுகிறார்கள். சொல்லப்போனால் மோடியின் ஆட்சி அறிவிக்கப்படாத அவசரநிலை அடக்குமுறை ஆட்சியாகத் தான் நடந்து கொண்டிருக்கிறது. மோடியின் ஒற்றை சர்வாதிகாரத்தை நோக்கி நாட்டை இழுத்துச் செல்ல அரசியல் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புகளை சீர்குலைத்து கருத்துரிமையைப் பறித்து எதிர்க்கட்சிகளை அழித்து ஒழிக்கும்...

ஆகமக்காரர்களின் குத்தாட்டம்

ஆகமக்காரர்களின் குத்தாட்டம்

ஆகமக் கோயிலில் பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும். பார்ப்பனர் அல்லாதார் அர்ச்சகராக முடியாது என்ற ‘இன ஒதுக்கல்’ சட்டப்படியே நிலை நிறுத்தப்பட்டுள்ளது மிகப்பெரும் அவமானம்! அரசியல் சட்டம் தீண்டாமையை தண்டனைக்குரிய குற்றம் என்று கூறுகிறது. ஆனால் இந்து மதம் தீண்டாமையை ஆகமங்களின் பெயரில் புனிதமாக்குகிறது. அரசியல் சட்டம் வழங்கியுள்ள மதச் சுதந்திர உரிமையை தீண்டாமைக்கு ஆதரவாக முறைகேடாக பயன்படுத்துவதற்கு நீதிமன்றங்களும் துணை போகின்றன என்பதுதான் பேரவலம். ‘பிராமணர்கள்’ மட்டுமே கோயிலுக்குள் நுழைய முடியும் என்ற தீண்டாமை ஒரு காலத்தில் இருந்தது; சாஸ்த்திரமும் அப்படித்தான் கூறியது என்பதை நாம் சுட்டிக் காட்ட வேண்டும். ஆலயப்பிரவேச உரிமை என்ற பெயரில் போராட்டங்கள் நடந்தன. சுயமரியாதை இயக்கம் முதலில் தொடங்கியது. பிறகு காந்தியும் காங்கிரஸும் இந்த போராட்டங்களை நடத்தியது. ஆகம விதிகளைத் திருத்தித்தான் 1959-ஆம் ஆண்டு அனைத்து இந்துக்களும் கோயிலுக்குள் நுழையலாம் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் கர்ப்பகிரகத்துக்குள் இப்போதும் பார்ப்பனர் அல்லாதவர்களால் அர்ச்சகர் முடியாது...

வி.பி சிங் சிலைக்கு கழகம் சார்பில் மாலை அணிவிப்பு!

வி.பி சிங் சிலைக்கு கழகம் சார்பில் மாலை அணிவிப்பு!

சமூக நீதிக் காவலர் விபி சிங் பிறந்தநாளான (25/6/25), சென்னை பிரசிடென்சி கல்லூரியில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு, மாலை 5 மணியளவில், திவிக தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் தலைமையில் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ப.அருண், திருவல்லிக்கேணி பகுதித் தலைவர் கோபிநாத், திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர் த.நா.சூர்யா, தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் இளவரசன் உள்ளிட்ட பல தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம்03072025இதழ்

சரஸ்வதி நாகரீகத்துக்கு ஆய்வறிக்கை உண்டா?…  – விடுதலை இராசேந்திரன்.

சரஸ்வதி நாகரீகத்துக்கு ஆய்வறிக்கை உண்டா?… – விடுதலை இராசேந்திரன்.

கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை இரண்டு ஆண்டுகள் கிடப்பில் போட்டுவிட்டு பிறகு அந்த அறிக்கையை திருத்தி எழுதித் தருமாறு ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியது. அதில் திருத்துவதற்கு எதுவும் இல்லை என்று ஆய்வாளர் மறுத்துவிட்டார். ஆய்வாளர் அமர்நாத் மீண்டும் நொய்டாவுக்கு இடமாற்றம் செய்து பழிவாங்கப்பட்டுளளார். இப்போது அந்த அறிக்கை போதுமானது அல்ல, மேலும் தகவல்கள் தேவைப்படுகிறது என்று ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் சேக்வாத் சென்னையில் பேட்டியளித்து இருக்கிறார். ஆய்வாளர் அமர்நாத் பாஜக விரும்புகிறபடி அறிக்கையை திருத்தி அனுப்பி இருந்தால் அதை வெளியிட்டு இருப்பார்கள். இப்போது ஆர்எஸ்எஸ் ரசாயன பரிசோதனை ஆலைக்கு அனுப்பி சோதனை செய்த பிறகு அதை அங்கீகரிப்பார்கள் போலும். வேதத்தில் கூறப்படும் சரஸ்வதி என்ற ஆறு எங்கே இருக்கிறது, என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவே இல்லை. இதைக் கண்டுபிடிப்பதற்காகவே பல கோடி ரூபாய் பணத்தை ஒதுக்கி இன்னமும் ஆண்டுகணக்கில் தேடிக் கொண்டிருக்கிறார்கள். தேடிக் கொண்டிருக்கின்ற ஒரு...

முழக்கத்திற்குப் பாராட்டு!

முழக்கத்திற்குப் பாராட்டு!

கொளத்தூரில் நடைபெற்ற நாத்திகர் விழா நிகழ்ச்சியில் மாநாட்டில் மூன்றாவது தீர்மானமாக கணவன் இறந்த பிறகு பெண்களுக்கு நடக்கும் சடங்குகளின் தடுக்க கோரி மூடநம்பிக்கைகளில் இது கொடூரமான மூடநம்பிக்கை என்பதை சுட்டிக்காட்டி தீர்மானம் இருப்பது நெஞ்சை நெகிழ வைக்கிறது, படிக்கிற போது நா தழுதழுக்கிறது. அதேபோல கடந்த வாரம் வந்த முழக்கத்தில் ‘நாத்திகர் விழா சிந்தனை இரண்டு தொகுப்பில்’ 1967 மே 24 விடயபுரத்தில் நடந்த பயிற்சி வகுப்பு கடவுள் மறுப்பு வாசகங்களை பெரியார் உருவாக்கினார். அதற்கு கீழே இருக்கிற கட்டுரையில் ஆசிரியர் ஊசி ஒன்று எனக்கு வேண்டும் மாணவர்கள் வாங்கி வர வேண்டும் என்று சொல்லி ஒரு மாணவர் கிளம்ப எல்லோருமாக சேர்ந்து வாங்கி வருகிறோம் என்று, உடன் இருந்த மாணவர்களும் உடன் செல்ல அவர்கள் வாங்கி வந்த விதமும் அந்த ஊசியின் கதையும், தெருவில் இழுத்து வருகிற தேரின் கதையையும் எளிமையாக புரிய வைத்த பெரியார் பேருரையாளர் பேராசிரியர் நா...

ஜாதி மறுப்பு இணையேற்பு விழா!

ஜாதி மறுப்பு இணையேற்பு விழா!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சேலம் மாவட்ட ஒருங்கிணைப் பாளர் நங்கவள்ளி கிருஷ்ணன் மகன் கி.பிரபாகரன், ஆனைமலை ஒன்றியச் செயலாளர் நடராஜ் மகள் ந.கஸ்தூரி ஆகியோரின் ஜாதி மறுப்பு வாழ்க்கை இணை யேற்பு விழா ஆனைமலை பரிமளா சுப்பிரமணியம் திருமண மண்டபத்தில் 11.06.2025 புதன் காலை 11.00 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. இணையர்கள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து ஜாதி ஒழிப்பு உறுதி மொழியை ஏற்று தாங்களும் மலர் மாலையை மாற்றிக் கொண்டனர். பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் துரை.தாமோதரன் மந்திரமா? தந்திரமா? நிகழ்வு நடைபெற்றது. நிமிர்வு கலைக் குழுவினரின் பறை இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. யாழ்.வெள்ளிங்கிரி வரவேற்புரை நிகழ்த்தினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் இணையேற்பினை நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி, தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன், வேலூர் மாவட்டச் செயலாளர் சிவா, சேலம்...

திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் 21-06-2025 மாலை 5 மணி அளவில் வ.உ.சி திடல் (செங்காடு) அவினாசி பகுதியில் ஒன்றிய அரசே! கீழடி ஆய்வறிக்கையை உடனடியாக வெளியிடு எனக் கோரி திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய கழகம் சார்பாக கையெழுத்து இயக்கம், மற்றும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் திவிக சார்பாக மாவட்டச் செயலாளர் முகில்ராசு கண்டன உரையாற்றினார். நிகழ்வில் மாரிமுத்து மாநகர துணைத் தலைவர், கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 26062025இதழ்

பாராட்டத்தக்க முயற்சி!  பெரியார் முழக்க வளர்ச்சிக்கு வாட்ஸ்அப் குழு

பாராட்டத்தக்க முயற்சி! பெரியார் முழக்க வளர்ச்சிக்கு வாட்ஸ்அப் குழு

ஆசிரியர் சிவகாமி முன்னெடுப்பில் புரட்சிப் பெரியார் முழக்க வளர்ச்சிக் குழு ஒன்று உருவாக்கப்பட்டு ஒரு வருட செயல் திட்டமாக மாதம் 500 ரூபாய் நிதி பங்களிப்பு செய்வதாக தீர்மானித்து செயல்பட்டு வருகிறது. முதல் தவணையாக ஜூன் மாதம் ரூ.8000 வழங்கியள்ளனர். குழுவில் இணைந்து ஒரு வருடத்திற்கு வளர்ச்சி நிதி வழங்க விருப்பமுள்ள தோழர்கள் தகவல் தெரிவிக்குமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம். பெரியார் முழக்கம் 26062025இதழ்

மலக்குழி சாவுகள் தொடரக்கூடாது பால்.பிரபாகரன் வலியுறுத்தல்

மலக்குழி சாவுகள் தொடரக்கூடாது பால்.பிரபாகரன் வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பாதாள சாக்கடை அகற்றும் பணியில் ஈடுபட்ட ஊழியர் பாதாள சாக்கடையின் விஷவாயு தாக்கி கங்கைகொண்டான் – ஆலடிப்பட்டியை சேர்ந்த தூய்மை பணியாளர் சுடலைமணி (வயது 40) என்ற தூய்மை பணியாளர் கடந்த 08.06.2025ல்உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் விடுத்துள்ள அறிக்கை: பாதுகாப்பற்ற முறையில் ஒப்பந்த தூய்மை பணியாளரை எவ்வித பாதுகாப்பு கருவியுமின்றி பாதாள சாக்கடைக்குள் இறக்கி தூய்மைப் பணி செய்ய வைத்துள்ளனர். மனிதக்கழிவை மனிதன் அகற்றத் தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013 இருந்தும் அச்சட்டம் மிகத் தெளிவாக மனிதனைப் பாதாள சாக்கடை மற்றும் மனிதக் கழிவு குழிக்குள் இறங்கத் தடை விதித்து இருந்தும் அந்த சட்டத்தை உள்ளாட்சி அமைப்புகள் சற்றும் சட்டை செய்யாமல், மனிதர்களை பாதாள சாக்கடைக்குள் எவ்வித பாதுகாப்பு கருவிகள் கூட இல்லாமல் இறக்குவதும் அதனால் மனித உயர்கள் பலியாவதும் வாடிக்கையாகிவிட்டது. நீதிமன்றங்கள் இச்செயல்பாடுகளைக் கண்டித்து பல தீர்ப்புகளை தந்து...

கடவுளுக்கு மனிதநேயம் கிடையாதா?

கடவுளுக்கு மனிதநேயம் கிடையாதா?

எதிர்காலக் கனவுகளையும் மகிழ்ச்சியான உணர்வுகளையும் சுமந்து சென்ற 246 மனித உயிர்கள் பலியாகி விட்டன. ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானம் விழுந்து நொறுங்கியது, என்ற செய்தி மனிதத்தை இடித்து நொறுக்கி விட்டது. ஏர் இந்தியா நிறுவனத்தை மூன்று ஆண்டுகளுக்கு முன் டாட்டாவிடம் விலை பேசி விட்டது இன்றைய ஆட்சி. தற்போது ஒன்றிய ஆட்சியின் நிர்வாகத்தின் கீழ் எந்த ஒரு விமான சேவையும் இல்லை. விபத்துகள் நிகழவில்லை என்றாலும் போயிங் 787 விமானம் பாதுகாப்பானது அல்ல என்ற குற்றச்சாட்டுகள், 2011-ஆம் ஆண்டிலிருந்து வரத் துவங்கி விட்டன; பயணிகள் சேவை; விமான கட்டமைப்பு கோளாறு; தரமற்ற உதிரி பாகங்கள்; இணைப்புக் கோளாறு என்று தொழில்நுட்ப ரீதியாகவும் சேவை ரீதியாகவும் குற்றச்சாட்டுகள் வரத் துவங்கின,… ஏர் இந்தியா நிறுவனம் இவைகளை தொடர்ந்து மறுத்து வந்தது. இந்த விமான உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றிய இரண்டு பொறியாளர்கள் இதன் ஆபத்து குறித்து பிபிசி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தனர்....

அசைவ இந்துக்களை அவமதிக்கும் பார்ப்பனியம்!

அசைவ இந்துக்களை அவமதிக்கும் பார்ப்பனியம்!

திருவண்ணாமலை கோயில் வளாகத்தில் கிராமத்தில் இருந்து வந்த ஒரு தம்பதியினர் முட்டை பிரியாணி சாப்பிட்டார்கள் என்பதற்காக கோயில் தீட்டாகிவிட்டது என்று கூறி, தீட்டு கழிக்கும் சடங்குகளையும் யாகங்களையும் பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். திருவண்ணாமலை கோயிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் அசைவம் சாப்பிடுகிறவர்கள்தான்! அவர்களை கடவுள் ஏற்றுகொள்கிறார், ஆனால் அவர்கள் சாப்பிடுகிற அசைவ உணவு ஆண்டவனுக்கு தீட்டு என்று சொல்லி அசைவ உணவுக்காரர்களையே ஆரியம் அவமதிக்கிறது. ஆண்டவனின் உணவு பியூர் வெஜிடேரியன் என்று இவர்களுக்கு யார் சொன்னது? அர்ச்சகராக இருக்கிறவர்கள் சைவ உணவுக்காரர்களாக இருக்கிறார்கள், என்பதற்காக கடவுளையும் சைவத்திற்கு இவர்கள் மாற்றிக் கொண்டு விட்டார்களா? அசைவ உணவுக்காரர்கள் கோயிலுக்குள் வரக்கூடாது என்று சொன்னால் கோயில்களை இழுத்து மூடி விட வேண்டியதுதான். பெரும்பான்மை மக்களை இப்படி புண்படுத்துகிறவர்கள்தான் இந்துக்களைப் புண்படுத்துகிறார்கள் என்று அவ்வப்போது கூச்சல் போட்டு வருகிறார்கள். மதக்கலவர நோக்கத்தோடு மதுரையில் முருகன் மாநாட்டை நடத்துகிறது பாரதிய ஜனதா கட்சி. முருகன்...

திராவிடம் வென்றே தீரும்!

திராவிடம் வென்றே தீரும்!

பாமகவை மருத்துவர் ராமதாஸ் தொடங்கியபோது பார்ப்பனர்களைக் கட்சியில் சேர்க்க மாட்டேன் என்று கூறினார். இப்போது பாமகவில் நடக்கும் குடும்பச் சண்டையை தீர்த்து வைக்க ராஜகுரு குருமூர்த்தி களம் இறக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டு மக்களுக்கு குருமூர்த்தி யார் என்று தெரியாது, ஆனால் அவர்தான் பாஜகவின் அதிகார மய்யம். அதிமுகவை இரண்டாக உடைத்ததில் இவரது பங்கு மிகவும் பெரியது. ஓ.பன்னீர்செல்வத்தை தர்மயுத்தம் செய்ய உத்தரவிட்டவர் இதே ஆடிட்டர்தான். அதிமுகவினர் ஆண்மையற்றவர்கள்; காலில் விழக்கூடியவர்கள் என்று அவமானப்படுத்தினார். ஒரு வழியாக எடப்பாடியின் அதிமுக பாஜகவின் பிடிக்குள் வந்துவிட்டது. தினகரன் ஓபிஎஸ் குழுக்கள் பாஜகவின் உத்தரவுக்காகக் காத்துக் கிடக்கின்றன. இப்போது பாமகவும் பாஜக பிடிக்குள் போகிறது. தமிழ்நாட்டில் நடக்கும் திராவிட மாடல் ஆட்சியை எப்படியாவது ஒழித்தாக வேண்டும் என்று தலைகீழாக நின்று தண்ணீர் குடித்துக் கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பாஜகவில் இருக்கும்”சூத்திர” அண்ணாமலைகளோ, நயினார்களோ, தமிழிசைகளோ சாலை ஓரத்தில் கூவுவதற்குத்தான் உரிமை. ஆனால் கட்சியின் அதிகாரம் மக்களுக்கே தெரியாத...

பேரன்பும் பெருங்கோபமும்

பேரன்பும் பெருங்கோபமும்

தங்கர்பச்சான் தயாரிப்பில் வெளிவந்துள்ள ‘பேரன்பும் பெரும்கோபமும்’ திரைப்படம் ஜாதி பெருசா? சாமி பெருசா? என்ற முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளது. மிகுந்த ஆழமான கேள்வியும் கூட இது. உண்மையில் சாமியை விட ஜாதிதான் பெரிது. அதைத்தான் இப்படம் பேசுகிறது. இதற்கு படம் தேர்ந்தெடுத்திருக்கும் கதைக் கரு வழக்கத்தில் இருக்கும் முத்தாலம்மன் கதை. முத்தாலம்மன் தென்மாவட்டம் முழுவதும் வழிபடக்கூடிய தெய்வமாகும். முத்தாலம்மன் உயர்குடி ஜாதியைச் சேர்ந்தவள். தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஒருவனை காதலித்து ஊரை விட்டு ஓடிவிடுகிறாள். வெளியூரில் திருமணம் முடித்து குழந்தைகளோடு வாழ்ந்து வருகிறாள். சில ஆண்டுகளுக்குப் பிறகு அவள் வாழும் இடம் தெரிந்து சக்கரையாக பேசி ஊருக்கு அழைத்து வருகிறார்கள். ஊர்க்காரர்களின் பேச்சை நம்பி வந்த முத்தாலம்மன் கணவன் குழந்தைகளோடு சேர்த்து படுகொலை செய்யப்படுகிறாள். இன்னும் அந்த சம்பவத்தை நிகழ்த்திக் காட்ட திருவிழாக்களின் போது படுகளம் போடுகிறார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் விரதமிருந்து படுகளத்தில் கழுகுமரம் ஏறுவதும், செத்தவர்கள் போல படுத்து கிடக்க, அந்த...

அய்யா உணவகம் திறப்பு விழா

அய்யா உணவகம் திறப்பு விழா

30-05-2025 அன்று காஞ்சிபுரம் அண்ணா குடியிருப்பு அருகில் திறக்கப்பட்டது. ரவி பாரதி (காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர் திவிக) ஒருங்கிணைத்தார். மக்கள் மன்ற‌ ஒருங்கிணைப்பாளர் மகேசு திறந்து வைத்து உரையாற்றினார். இரா.உமாபதி( சென்னை மாவட்டச் செயலாளர்), பிரவீன் குமார் (ஒருங்கிணைப்பாளர் மே17 இயக்கம்), தமிழ் சாக்ரடீஸ் (பெரியார் உணர்வாளர்), அ.வெ முரளி காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் தி.க), காஞ்சி அமுதன்(தமிழ் உரிமை கூட்டமைப்பு), மு.சங்கர் (50வது மாமன்ற உறுப்பினர் திமுக), ச.மகேஷ் (திமுக), சானகிராமன் (காஞ்சி மாவட்ட மே17 இயக்கம்) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அய்யா உணவக உரிமையாளர் சுரேஷ் நன்றி கூறினார். பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக ரூபாய் 2000 வழங்கினார். மேலும் கழக தோழர்கள் சென்னை அருண் (இளைஞரணி), இராவணன் (துணை செயலாளர் தென்சென்னை), கோபி (பகுதி தலைவர் திருவல்லிக்கேணி) மற்றும் காஞ்சிபுரம் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 01062025இதழ்

வினாடி வினா

வினாடி வினா

தமிழ்நாடு இரயில்வே திட்டங்களுக்கு ஒன்றிய ஆட்சி அனுப்பிய நிதியை தெற்கு ரயில்வே திருப்பி அனுப்பி விட்டது. -செய்தி ஆமாம்.தெற்கு ரயில்வே வடக்கு இரயில்வேவாக மாறிவிட்டது.  “ஆச்சாரியா பஞ்சகச்சம்” வேட்டியை வெளியிட்டு ராமராஜ்ய மரபுகளுக்கு பெருமை சேர்த்துள்ளோம். -ராம்ராஜ் காட்டன் ராம்ராஜ் காட்டன் ஜட்டிகளைத் தயாரித்து ராமனுக்கு பெருமை சேர்த்ததையும் சேர்த்து சொல்லுங்க‌.  கீழடி அகழ்வாய்வு அறிக்கையை ஆய்வாளர் அமர்நாத்துக்கு திருத்தி எழுத திருப்பி அனுப்பியுள்ளது. -ஒன்றிய ஆட்சி ஆர்எஸ்எஸ் ஆபிஸ்க்கு மெயில் போடுங்க. அமர்நாத் வேலையை அவங்க பார்த்துப்பாங்க.  எங்க கூடத்தான் பாமக இருக்கு -பாஜக தலைவர் நயினார் சரி; பாமக யாரு கூட இருக்கு நயினார் ஜீ.  குற்றவாளி ஞானசேகரன் வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை விசாரிக்க வேண்டும். -அண்ணாமலை இது நீதிமன்ற விசாரணை ஜீ, அமலாக்கத்துறை விசாரணை அல்ல. பெரியார் முழக்கம் 01062025இதழ்.

திருச்செங்கோடு தோழர்கள் விடுதலை

திருச்செங்கோடு தோழர்கள் விடுதலை

எச்.ராஜா உருவ பொம்மை எரிப்பு வழக்கில் இருந்து கழகத் தோழர்கள் விடுதலை : பெரியார் சிலையை உடைப்பேன் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பாஜக எச்.ராஜாவைக் கண்டித்து 2018 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி நாமக்கல் மாவட்டக் கழகம் சார்பில் திருச்செங்கோடு பெரியார் சிலை அருகில் எச்.ராஜா உருவ பொம்மை எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாமல் நடைபெற்ற போராட்டத்தைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத அதிமுக காவல்துறை, போராடிய கழகத் தோழர்கள் 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி திறம்பட வாதாடி வழக்கை ரத்து செய்தார். வழக்கில் விடுதலை பெற்றவர்கள் : மு.சாமிநாதன், வைரவேல், தண்டபாணி, சதீசுகுமார், பூபதி, மணி, பிரகாஷ், சுப்பு என்கிற ராஜசேகர், கோபி, தியாகு, மனோஜ், கவுதம். பெரியார் முழக்கம் 01062025இதழ்

நாமக்கல் மாவட்ட கழகம்‌  “முழக்கத்துக்கு”நன்கொடை

நாமக்கல் மாவட்ட கழகம்‌ “முழக்கத்துக்கு”நன்கொடை

நாமக்கல் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் அ முத்துப்பாண்டி, மாவட்டச் செயலாளர் சரவணன், மாவட்டக் காப்பாளர் கேப்டன் அண்ணாதுரை, குமாரபாளையம் நகரத் தலைவர் எம் டி தண்டபாணி ஆகியோர் முயற்சியில் புரட்சி பெரியார் முழக்கம் வளர்ச்சி நிதியாக ரூ.10,000 வழங்கப்பட்டது. நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். பெரியார் முழக்கம் 01062025இதழ்

பாமகவில் நடக்கும் “குடும்ப நீதி” சண்டை – விடுதலை இராசேந்திரன்

பாமகவில் நடக்கும் “குடும்ப நீதி” சண்டை – விடுதலை இராசேந்திரன்

பிறவியின் அடிப்படையில் இலவசமாகக் கிடைத்தது ஜாதி. இந்த ஜாதியால் பயன் அடைந்தவர்கள் அதைக் கொண்டாடினார்கள். பாதிக்கப்பட்டவர்கள் கொடுமைகளை அனுபவித்தார்கள். ஜாதி சமூகத்தை வளர்க்கவில்லை; மாறாக சமூகத்தைப் பிளவுபடுத்தியது; சமூக ஒற்றுமையையும் அது கட்டிக் காக்கவில்லை. இன்றைக்கு அரசியலில், அதிகாரத்திலும், சமூக உறவுகளைப் பகிர்ந்து கொள்வதிலும், முரண்பாடுகளும் மோதல்களும் வெடித்துக் கொண்டு இருக்கின்றன. “பாட்டாளி மக்கள் கட்சியில் இன்று நடக்கும் அதிகார சண்டை என்பது ஜாதி அரசியலில் மோசமான தோல்வி!” சமூக நீதிக்காக உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சி ஒரு காலத்தில் முற்போக்கு பாதையில் பயணித்தது உண்மை; பிறகு 35 வயதில் தனது மகனை இராமதாஸ்அமைச்சராக்கிய பிறகு அது திசை மாறியது. மருத்துவர் ராமதாஸ் அது நான் செய்த பெரும் தவறு என்று இப்போது ஒப்புக் கொண்டிருக்கிறார். சமூக நீதி அரசியலை சமூகத்திற்காகப் பயன்படுத்தாமல் பதவிகளுக்காகப் பயன்படுத்தும் நோக்கத்தோடு கூட்டணிகளை மாறி மாறி ஏற்படுத்திக் கொண்டு சுயநலப் பாதையில் அதிகாரத்திற்காக பயணித்தவர்கள், அந்த...

காணாமல்போன கடவுள் சக்தி -கோடங்குடி மாரிமுத்து

காணாமல்போன கடவுள் சக்தி -கோடங்குடி மாரிமுத்து

கடவுள் இல்லை; எங்கே கடவுள் சக்தி? என்று நாத்திகர்கள் பேரணி நடத்துகிறார்கள் என்பதற்காக எந்த கடவுளும் கொந்தளிக்கவில்லை. “இதோ அவதாரம் எடுத்து சம்ஹாரம் செய்கிறேன்,பார்!” என்று ஆயுதங்களையும் தூக்கிக் கொண்டு ஓடி வரவில்லை. சரி, போகட்டும்;கொளத்தூர் கழக மகளிர் கனவில் வந்தாவது மிரட்டி இருக்கலாம் அதற்கும் தயாராக இல்லை உண்மையில் கொந்தளித்தது யார் தெரியுமா? கொளத்தூர் காவல்துறை தான். “அய்யோ கடவுள் எதிர்ப்புக்கு நாங்கள் அனுமதி தர முடியுமா? அது பாவமல்லவா?” என்பதற்காக காவல்துறை கொந்தளிக்கவில்லை. “சங்கிகள் கூச்சல்களை சந்திக்க வேண்டியிருக்குமே என்பதுதான் அவர்களின் பயம். “என்னை எதிர்ப்பவருக்கு பேரணி நடத்த அனுமதிக்காதே! அழித்துவிடுவேன்” என்று ஏதேனும் ஒரு காவல் அதிகாரி கனவில் வந்தாவது கடவுள் மிரட்டி இருக்கலாம் அதுவும் இல்லை” அப்படி எதுவும் நடக்காமலேயே கடவுள் பக்தியோ, பக்தர்களின் மனம் புண்படும் செயல்களையோ நிகழ்த்த மாட்டோம் என்று எழுதிக் கேட்டது காவல்துறை. “எதற்கு நாங்கள் எழுதித் தர வேண்டும்; கடவுளைப்...

தமிழிலிருந்து பிறந்ததே திராவிட மொழிகள்! – பெரியார்

தமிழிலிருந்து பிறந்ததே திராவிட மொழிகள்! – பெரியார்

ழில் இருந்து பிறந்தது கன்னடம் என்று கூறியதற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது. நடிகர் கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்க மறுத்துவிட்டார். பெரியார் கருத்து இதுவாகவே இருந்து இருக்கிறது. அவரது எழுத்தில் இருந்து சிலபகுதிகள்; மொழிவாரி மாகாணம் பிரிக்கப் படப்போகிறது. மொழி வாரி வித்துவான்கள் நியமிக்கப்பட்டு மொழி வாரி இலக்கணங்களும் செய்யப்பட்டு திராவிட மொழியைப் பாழாக்கத் திட்டம் தீட்டியாகி விட்டதே!…. பண்டிதர்களில் சிலர் இவை நான்கும் ஒன்றிலிருந்து வந்தவை; ஒரே தாய் வயிற்றில் பிறந்து வளர்ந்த நாலு அக்கா தங்கைகள் என்று கருதுகிறார்கள். இது பித்தலாட்டம் என்பதுதான் என் கருத்து. இத்திராவிடத் தாய்க்குப் பிறந்தது ஒரே மகள்தான். அது தமிழ்தான். அந்த ஒன்றைத்தான் நாம் நாலு பேரிட்டு அழைக்கிறோம். நாலு இடத்தில் பேசப்படுவதால் நான்கு பெயரில் வழங்குகிறதே ஒழிய நாலிடத்திலும் பேசப்படுவது தமிழ் ஒன்றுதான். நாலும் ஒன்றிலிருந்து உண்டானவை என்று எண்ணுவது தான் தவறு. ஒன்றுதான் நாலாக நமது அறியாமையால் கருதப்பட்டு...

“நாத்திக வாழ்க்கை நோக்கி வாருங்கள்”

“நாத்திக வாழ்க்கை நோக்கி வாருங்கள்”

நாத்திக வாழ்வியல் ஏற்று உன்னதமான லட்சிய வாழ்க்கையை நோக்கி வருமாறு மக்களுக்கு நாத்திகர் விழா வேண்டுகோள் விடுத்தது. இது குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: முன்மொழிந்தவர்: இரண்யா தீர்மானம்-4: கடவுள், மத நம்பிக்கை இல்லாமல் மானுடத்தையும் அதன் வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டதே நாத்திக வாழ்வியல் நெறி. சமத்துவம் மற்றும் அறிவியலை இலக்காகக் கொண்டு ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமூக சமத்துவத்தை நோக்கியது. இதில் பார்ப்பனிய கருத்தியல்களான ஜாதியத்துக்கோ, பெண்ணடிமைக்கோ, மூடநம்பிக்கைக்கோ இடமில்லை. வேத காலத்திலேயே கடவுள் மறுப்பு சிந்தனைகள் தொடங்கிவிட்டன. உலகம் முழுவதும் கடவுள் மத கற்பனைகளை ஏற்காத நாத்திகர்கள் வாழ்கிறார்கள். கடவுள் மத நம்பிக்கை இல்லாத அதிக மக்களைக் கொண்ட நாடு பின்லாந்து. உலகிலேயே மகிழ்ச்சியாக வாழும் நாடு பின்லாந்து தான் என்று ஆய்வுகள் கூறுகின்றன. எப்படி கடவுள் மத நம்பிக்கைக்கும், அதனை பரப்புவதற்கும் உரிமை வழங்குகிறதே அதனை போல கடவுள் மத நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் மனசாட்சி உரிமை என்ற அடிப்படை உரிமைச்...

மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் தமிழ்நாடு அரசுக்கு நாத்திகர் விழா கோரிக்கை

மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் தமிழ்நாடு அரசுக்கு நாத்திகர் விழா கோரிக்கை

கொளத்தூரில் மே24-ல் நடந்த நாத்திகர் விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: முன்மொழிந்தவர்: ஈரோடு மணிமேகலை தீர்மானம்-1: சமூகத்தில் அறிவியலுக்கு எதிரான மூடநம்பிக்கைகள் ஒழிக்கப்பட வேண்டும். சாமியார்களின் அதீத சக்திகளை மக்கள் நம்பி ஏமாறுகிறார்கள். அந்த மக்களின் நம்பிக்கைகளை வாய்ப்பு ஆக்கிக் கொண்டு சாமியார்கள் பெண்களின் நகைகளைப் பறிப்பது, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவது போன்ற குற்ற செயல்கள் அன்றாடம் நடந்து கொண்டிருக்கின்றன. அனைத்து தொலைக்காட்சிகளும் ஒவ்வொரு நாளும் இந்த குற்ற செயல்களை நிகழ்ச்சிகளாக ஒளிப்பரப்பி வருகின்றன. பேய்,பில்லி, சூனியம், பரிகாரம், தாயத்து போன்ற பல்வேறு வடிவங்களில் இந்த மோசடிகள் நடைபெறுகின்றன. அறிவியல் மனப்பான்மையை குடிமக்களிடையே உருவாக்க வேண்டும் என்று இந்திய அரசியல்சட்டப் பிரிவு (51 (A) (h) கூறுகிறது. இந்த மூடநம்பிக்கைகளுக்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வை உண்டாக்கும் நோக்கத்தோடு பல்வேறு இயக்கங்கள், தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த இயக்கங்களுக்கு பல்வேறு நிலைகளில் அரசு ஆதரவு தந்து ஊக்குவிக்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்...

கொளத்தூர் குலுங்கியது

கொளத்தூர் குலுங்கியது

சேலம் மாவட்டம் மகளிர்‌ அணி சார்பில் 24.05.2025 அன்று நாத்திகர் விழா அதை ஒட்டி அறிவியல் மனப்பான்மையை வளர்ப்போம்! மூடநம்பிக்கைகளை ஒழிப்போம் என்கிற முழக்கத்தோடு மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி மற்றும் நாத்திகர் விழா நடைபெற்றது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து பெண்கள், குழந்தைகள், தோழர்கள் மட்டும் தனி வாகனத்தில் மாநாட்டுக்கு வந்தனர். பெண்கள் மட்டுமே சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கர்ப்பிணிப் பெண்களும், கைக்குழந்தைகளுடனும் பெண்கள் பங்கேற்றனர். குழந்தை பிறந்து 20 நாட்களே ஆன கிருத்திகா அலகு குத்தி பேரணியில் பங்கேற்றார். உக்கம்பருத்திக்காடு சு. கோமதி, காவலாண்டியூர் க.கலைச்செல்வி, கொளத்தூர் அழகேஸ்வரி, உக்கம் பருத்திக்காடு கு.லதா, மாதம்மாள் ஆகியோர் பேரணியை ஒருங்கிணைத்தனர். சேலம் (கொளத்தூர், காவலாண்டியூர், மேட்டூர், மேட்டூர் ஆர்எஸ், மேச்சேரி, நங்கவள்ளி, கொங்கணாபுரம், ஏற்காடு, ஆத்தூர்‌) போன்ற பகுதிகளில் இருந்தும் ஈரோடு வடக்கு, தெற்கு, திருப்பூர், கோவை, நாமக்கல், திருச்சி, பொள்ளாச்சி, மடத்துக்குளம், சென்னை, மதுரை, தஞ்சாவூர், தென்காசி,...

கழகத் தலைவருக்கு கடவுச்சீட்டு புதுப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

கழகத் தலைவருக்கு கடவுச்சீட்டு புதுப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களுக்கு புதிய கடவுச்சீட்டு வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகளைக் காரணம்காட்டி கடவுச்சீட்டு கோரிக்கையை நிராகரிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி,சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என்னுடைய கடவுச்சீட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காலாவதியாகி விட்டதால், அதை புதுப்பிக்க வேண்டும். ஆனால், என் விண்ணப்பத்தை பரிசீலித்த மண்டல கடவுச்சீட்டு அதிகாரி, என் மீது தடா உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறி நிராகரித்துவிட்டார்” என முறையிட்டார். இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. கொளத்தூர் மணி தரப்பில் வழக்குரைஞர் வி.இளங்கோவன் ஆஜராகி, ‘‘குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாலேயே கடவுச்சீட்டை புதுப்பிக்காமல் இருப்பது தவறு என்று உச்சநீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும், ஏற்கெனவே பல வழக்குகளில் தீர்ப்புகளைப் பிறப்பித்துள்ளன’’ என்று வாதிட்டார். ஒன்றிய அரசுத் தரப்பில், மனுதாரர்...

ஆணாதிக்கத்திற்கு எதிரான தீர்ப்பு!

ஆணாதிக்கத்திற்கு எதிரான தீர்ப்பு!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு வரவேற்கத்தக்க ஒன்றாகும். இந்தத் தீர்ப்பு அரசியல் பார்வையில் விமர்சிக்கப்படுகிறது, அதுவும் தேவைதான் அதைவிட சமூகப் பார்வையில் இந்தத் தீர்ப்பு மிகவும் முக்கியத்துவமானது‌‍. ஒரு பெண்ணுக்கு உயிரை விட கற்பு பெரிது என்ற ஆணாதிக்க சமூகப் பார்வைக்கு மரண அடி தந்திருக்கிறது இந்த தீர்ப்பு. கற்பு பெண்களுக்கு மட்டுமே புனிதமாக்கப்பட்டது, உடல் ரீதியாக தாக்குதலுக்கு உள்ளாகும் பெண்கள் துணிவுடன் வெளியே வருகிறார்கள். ஆனால் பாலியல் வன்முறை வழியாக பாதிக்கப்படும் பெண்கள் துணிவோடு வெளியே வருவது இல்லை; சமூகம் தன்னை இழிவாகப் பேசும் என்று அஞ்சுகிறார்கள். கட்டாய பாலியல் வன்முறை கூட ஒரு வன்முறைதான் என்ற புரிதலுக்கு சமூகம் வராததும் இதற்கு ஒரு காரணம். இதன் காரணமாகவே பல பெண்கள் பாலியல் வன்முறையை வெளிப்படுத்த அஞ்சுகிறார்கள். இந்த அச்சத்தை பொள்ளாச்சி கும்பல் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு வீடியோக்களைக் காட்டி மிரட்டி அவர்களைப் பணிய வைத்து இருக்கிறது. ஆனாலும்...

ஆளுநர் அத்துமீறல்களுக்கு துணைபோவதா?

ஆளுநர் அத்துமீறல்களுக்கு துணைபோவதா?

இந்தியாவில் ஒற்றை மதவாத ஆட்சியைத் திணிக்கும் நோக்கத்தோடு செயல்படும் ஒன்றிய ஆட்சியின் அத்துமீறல்களுக்கு எதிராக திராவிட மாடல் ஆட்சி தான்‌ கொள்கைப் போராட்டம் நடத்துகிறது. தொகுதி மறுவரையறை திட்டத்தைப் பயன்படுத்தி தென் மாநிலங்களின் சட்டமன்ற, நாடாளுமன்ற எண்ணிக்கையைக் குறைக்கும் ஆபத்துக்களை முன்கூட்டியே கண்டறிந்து முதலமைச்சர்கள் மாநாட்டைக் கூட்டினார் தமிழ்நாடு முதலமைச்சர். இப்போது மீண்டும் மாநில முதலமைச்சர்களுக்கு சட்டமன்றஉரிமையை மீட்கும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.ஆளுநரின் அதிகாரப் பிடியில் இருந்து சட்டமன்ற உரிமையை மீட்டெடுக்கும் சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த உரிமைகளை ஒழிப்பதற்கு குறுக்கு வழியில் குடியரசுத் தலைவருக்கான 143-ஆவது அதிகாரத்தைப் பயன்படுத்த முன் வந்திருக்கிறது ஒன்றிய ஆட்சி. இதில் ஒன்றிய ஆட்சிக்கு என்ன பாதிப்பு வந்துவிட்டது? ஏன் இதை குறுக்கு வழியில் சீர்குலைப்பதற்கு முயற்சிக்க வேண்டும்? நாடாளுமன்றம் நிறைவேற்றுகிற மசோதாவுக்கு அடுத்த நாளே குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்து விடுகிறார். பாஜக ஆட்சி செய்யும் மாநில சட்டசபைகள் நிறைவேற்றும் தீர்மானத்திற்கு உடனே...

சென்னையில் சிறப்பாக நடந்த குழந்தைகள் பழகு முகாம்

சென்னையில் சிறப்பாக நடந்த குழந்தைகள் பழகு முகாம்

தமிழ்நாடு அறிவியல் மன்றம் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகம் இணைந்து சென்னையில் 17.05.2025 அன்று ‘திராவிட வாரிசுகள்’ ஒரு நாள் குழந்தைகள் பழகு முகாமை நடத்தியது. இந்த பழகு முகாமில் குழந்தைகளுக்கு தலைமைப் பண்பு வளர்த்தல், பாலின சமத்துவம், கலைகள் கற்றல் இது போன்ற தலைப்பில் கலை வடிவத்திலும் விளையாட்டு, பாடல் மூலமாகவும் வகுப்புகள் மற்றும் செயல்முறை விளக்கங்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, முத்துராணி, விரட்டு கலைக்குழு ஆனந்த் ஆகியோர் பயிற்சி வழங்கினர். தோழர் சிற்பி ராஜனின் மந்திரமா? தந்திரமா? என்று அறிவியல் விளக்க நிகழ்ச்சியும் நடைபெற்றது. கழகக் குடும்பங்களைச் சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த பழகு முகாமில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கலந்துகொண்ட குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், இளைஞரணி அமைப்பாளர்...

பெரியார் பல்கலை.பேராசிரியர் கதிரவனை பொறுப்பில் இருந்து நீக்குக!

பெரியார் பல்கலை.பேராசிரியர் கதிரவனை பொறுப்பில் இருந்து நீக்குக!

தமிழக அரசுக்கு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி கோரிக்கை! இது குறித்து கழகத் தலைவர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: “ஆட்சிக் குழு உறுப்பினர் நிர்வாகப் பதவியில் பொறுப்பு வகிப்பதா? துணை வேந்தரின் செயலுக்குக் கண்டனம். ஆட்சிக் குழு பதவிக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டார் உளவியல் துறை பேராசிரியர் கதிரவன்” ஆட்சிக் குழு உறுப்பினர் என்பது நிர்வாகம் எடுக்கும் முடிவுகளுக்கு ஒப்புதல் கொடுக்கும் ஒரு அமைப்பாகும். அவ்வாறான ஆட்சிக்குழுவில் உள்ளவரே கையெழுத்திட்டு பணி இடை நீக்க ஆணையைப் பேராசிரியர் வைத்தியனாதனுக்கு வழங்கி விட்டு இவரே எப்படி ஆட்சிக் குழுவில் ஒப்புதல் தர முடியும்? இந்த முறைகேட்டால் பேராசிரியர் கதிரவன் ஆட்சிக் குழு உறுப்பினர் என்ற தகுதியை இழந்து விட்டார். இவரை உடனடியாக ஆட்சிக் குழு உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். மேலும் சேலம் பெரியார் பல்கலைக் கழக உதவிப் பேராசிரியர் வைத்தியநாதன் தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவாலின்...

நாத்திகர் விழாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!

நாத்திகர் விழாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!

வரும் மே 24 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சேலம் மாவட்டம் கொளத்தூரில் நடைபெற உள்ள நாத்திகர் விழா – மூட நம்பிக்கை ஒழிப்பு பேரணி – பொதுக்கூட்டம் ஆகியவற்றிற்கு அனுமதி அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூட்டம் நடத்த அனுமதி கேட்டும் இதுவரை போலீசார் தரப்பில் எந்த உத்தரவும் தராததால் சேலம் மாவட்ட தி.வி.க. மகளிர் அணி அமைப்பாளர் சுதா அவர்கள் கூட்டத்திற்கு அனுமதிகோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் மீது நீதிமன்றம் உத்தரவு. வழக்குரைஞர் திருமூர்த்தி கழக சார்பில் வாதாடினார். பெரியார் முழக்கம் 22052025இதழ்

“ஆகமத்தீண்டாமையை” வலியுறுத்தும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு

“ஆகமத்தீண்டாமையை” வலியுறுத்தும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தலித் சமூகத்தைச் சார்ந்த கவாய் பதவி ஏற்ற அடுத்த நாளிலே உச்சநீதிமன்றம் ஆகம தீண்டாமையை நியாயப்படுத்தி இருக்கிறது. ஆகமக் கோயில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக முடியாது என்ற இந்தத் தீர்ப்பை அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு வரவேற்று இருப்பது கண்டனத்திற்குரியது. திராவிட மாடல் ஆட்சியின் கொள்கைக்கு எதிரான இந்தத் தீர்ப்பை எப்படி வரவேற்கிறார்? இந்த கோரிக்கையின் நோக்கம் அர்ச்சகர் பதவிகளுக்கானது அல்ல, மாறாக ஆகமக் கோயில்களில் சூத்திரர்கள் அர்ச்சர்களாகக் கூடாது என்ற இழிவுக்கு எதிரான போராட்டம். ஒருமுறை கலைஞர் சட்ட மன்றத்தில் “கர்ப்பகிரகத்துக்கு பாதுகாப்பு தேவை தான், ஆனால் அது வர்ணாசிரம பாதுகாப்பாக இருக்கக் கூடாது” என்று காங்கிரஸ் உறுப்பினர் கேள்விக்கு பதிலளித்தார் கலைஞர் கருத்துக்கு எதிராகவே அமைச்சர் பேசுகிறார். அரசியல் சட்டம் தலைமை நீதிபதியாக ஒரு தலித் வர முடியும் என்று கூறுகிறது. ஆனால் ஆகமங்களோ பிராமணர்களைத் தவிர பிற ஜாதியினர்...

சனாதன எதிர்ப்புக்கு அடித்தளம் அமைத்தது சுயமரியாதை இயக்கமே!

சனாதன எதிர்ப்புக்கு அடித்தளம் அமைத்தது சுயமரியாதை இயக்கமே!

பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் பேச்சு தென்காசி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 03.05.2025 சனிக்கிழமை மாலை 06.00 மணிக்கு திராவிடம் – பெரியார் யாருக்கு எதிரி? என்ற தலைப்பில் கீழப்பாவூர் சென்ட்ரல் பேங்க் பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள சுயமரியாதைச் சுடரொளி கூ.சு.ரா திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் குறும்பை. அரு. மாசிலாமணி தலைமை வகித்தார். கீழப்பாவூர் ஒன்றிய தி.வி.க. செயலாளர் செட்டியூர் சேர்மத்துரை திப்பணம்பட்டி தங்கத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி மாவட்ட தி.வி.க. செயலாளர் பொ.பெ.சு.அன்பரசு வரவேற்புரையாற்றினார். இப்பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு திராவிடர் விடுதலைக்கழக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் சிறப்புரையாற்றினர். அவர் தனது உரையில் இந்தியா எனும் மதச் சார்ப்பற்ற நாட்டை ஆளும் ஒன்றிய பா.ஜ.க. அரசு RSS ன் கொள்கையான சனாதனக் கொள்கையை இந்தியாவின் சட்டமாக்கிட இந்தியாவை வேத காலத்திற்கு கொண்டு சென்று வேறுபாடு நிறைந்த ஜாதி வேற்றுமை கூடிய நாடாக மாற்றத் துடிக்கிறார்கள்....

ஜாதிக் குறியீடுகளை ஒழிப்பதும் ஜாதி ஒழிப்புதான்!

ஜாதிக் குறியீடுகளை ஒழிப்பதும் ஜாதி ஒழிப்புதான்!

கடவுள் ஜாதி மதத்தைக் கடுமையாக எதிர்த்த புரட்சிக் கவிஞருக்கு தமிழ்நாடு முதல்வர் அரசு விழா அறிவித்ததோடு காலனி என்ற சொல்லும் அரசு ஆவணங்களில் இருந்து நீக்கப்படும் என்று அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறார். திராவிட மாடல் ஆட்சியின் கொள்கைப் பார்வையாகவே இதைக் கருத வேண்டும். இதே போல் நீதிக் கட்சி ஆட்சி ஆணைகளில் குறிப்பிடப்பட்டு வந்த “பஞ்சமன், பறையன்” என்ற வார்த்தைகளை நீக்கி ஆதிதிராவிடர் என்று அழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது தெருக்களில் உள்ள ஜாதிப் பெயரை நீக்க ஆணையிட்டார். இதிலும் சிலர் விமர்சனம் செய்கிறார்கள், `காலனி’ என்ற பெயரை நீக்கி விட்டால் ஜாதி ஒழிந்து விடுமா? என்று கேட்கிறார்கள். தனது பெயருக்குப் பின்னால் உள்ள ஜாதிப் பட்டத்தை பெரியார் ஒழித்தார் ஜாதிப் பெயரை போட வேண்டாம் என்ற ஒரு இயக்கம் தமிழ்நாட்டில் நடந்தது. இப்போது ஜாதிச் சங்க தலைவர்கள் கூட தங்கள் பெயருக்குப் பின்னால்...