நியூட்ரினோ திட்டத்தை எதிர்ப்பது ஏன்?
இந்தத் திட்டத்தை ஏன் எதிர்க்கிறார்கள்? என்பது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் வழக்கறிஞர் வெற்றிச் செல்வன் கூறியதாவது: இரண்டு காரணங்களுக்காக இந்தத் திட்டத்தை எதிர்க்கிறோம். முதலில், இந்தத் திட்டத்துக்கு தேர்வு செய்த இடம் மேற்கு தொடர்ச்சி மலை என்பதால், இந்தியாவின் பிரதான ஆறுகள் மேற்கு தொடர்ச்சி மலையில்தான் உற்பத்தியா கின்றன. இதில் 2 கிலோ மீட்டர் அளவுக்கு சுரங்கம் தோண்ட உள்ளனர். அதற்கு 6 இலட்சம் டன் பாறைகளை வெடி வைத்து தகர்க்க உள்ளனர். இது சுற்றுச் சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இத்திட்டத்துக்கு தேர்வு செய்துள்ள இடத்துக்கு அருகாமையில் முல்லைப் பெரியாறு, இடுக்கி உள்பட 12 அணைகள் உள்ளன. பாறைகள் தகர்க்கப்படும்போது, அணைகள் சேதமடையும் அபாயம் உள்ளது. இத்திட்டம் பற்றி மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். சுற்றுச் சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வுகள் நடத்த வேண்டும். ஆனால், இந்த ஆய்வுக்கூடம் அமைக்க கட்டிட கட்டுமானம் என்ற பெயரில் விண்ணப்பித்து அனுமதி...
