சிபிஎஸ்இ வினாத்தாள் முன்கூட்டி வெளியானதில் ‘ஏ.பி.வி.பி.’யினர் கைது

சி.பி.எஸ்.இ. பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வுக்கான வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியானதைத் தொடர்ந்து 2 பாடங்களுக்கு மட்டும் மறுதேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், மறுதேர்வுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வரும் இப்பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தையும் நாடியுள்ளனர். உச்சநீதிமன்றமும் மாணவர்களின் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.சி.பி.எஸ்.இ. பன்னிரண்டாம் வகுப்பு பொருளாதாரப் பாடத்திற்கும்,பத்தாம் வகுப்பு கணிதப்பாடத்திற்கும் முன்கூட்டியே வினாத் தாள்கள் வெளியாகின. இது பெரும்பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இவ்விவ காரத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ‘ஏபிவிபி’யின் ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டச் செயலாளரும், பயிற்சி நிலையம் நடத்தி வருபவருமான சதீஸ்குமார் பாண்டே, ஏபிவிபி-யின் மற்றொரு நிர்வாகியான பங்கத்சிங் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதனால் வினாத்தாள் வெளியான தற்கு மத்திய பாஜக அரசே முழுக்காரணம் என்பது உறுதியாகி இருக்கிறது. இந்நிலையில், மத்திய பாஜக அரசு, தங்களின் தவறை மறைத்து, மறுதேர்வு நடத்துவதன் மூலம் பிரச்சனையைச் சமாளிக்க முயற்சிக் கிறது. ஆனால், சிபிஎஸ்இ-யின் மறுதேர்வு முடிவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வீட்டையும் முற்று கையிட முயன்று கைதாகினர்.இதனிடையே, மாணவர் ரோகன்மேத்யூ என்பவர், மறுதேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரின் இந்த மனுவை ஏற்றுக்கொண்டுள்ள உச்சநீதி மன்றம், புதன்கிழமை விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அனைத்திந்திய பெற்றோர்கள் சங்கம் சார்பில்தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

பெரியார் முழக்கம் 05042018 இதழ்

You may also like...