வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு: ஈரோட்டில் தெருமுனைக் கூட்டம்

ஈரோடு தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பாக ஈரோடு சி.எம்.  நகரில் 1 .4. 2018 ஞாயிறன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதிலும் ஸ்டெர்லைட் ஆலை , நியூட்ரினோத் திட்டம் வழியாக மோடி பயங்கரவாத அரசு தமிழகத்தை வஞ்சித்து வருவதையும் மக்களிடையே தெளிவுபடுத்தும் தெருமுனைக் கூட்டம்  நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு சி.எம். நகர் பிரபு தலைமையேற்க யாழ் எழிலன் வரவேற்புரை நிகழ்த்தினார். மணிமேகலை, வீரா கார்த்தியைத் தொடர்ந்து தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் அரங்கம்பாளையம் கிருஷ்ணன், சித்தோடு கமலக்கண்ணன், சென்னிமலை செல்வராஜ், சௌந்தர், சத்தியராஜ், கோபி தங்கம் போன்றோர் பங்கேற்க மாவட்டப் பொருளாளர் பெ.கிருஷ்ணமூர்த்தியின் நன்றியுரையோடு கூட்டம் சிறப்புடன் முடிந்தது.

பெரியார் முழக்கம் 05042018 இதழ்

You may also like...