பொள்ளாச்சியில் ரயில் மறியல் !

பொள்ளாச்சியில் ரயில் மறியல் !

திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகளின் தோழர்கள் 180 பேர் கைது !

05.04.2018 காலை 09.00 மணிக்கு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து பொள்ளாச்சியில் திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகளின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

பொள்ளாச்சி திருவள்ளுர் திடலில் இருந்து பேரணியாக சென்று பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்ட 180 பேர் கைது செய்யப்பட்டு மாலை விடுதலை செய்யப்பட்டனர்.

போராட்டத்தில்,,
திராவிடர் விடுதலை கழகம்
திமுக
தமிழ்நாடு திராவிடர் கழகம்
வெல்ஃபேர் பார்ட்டி
சிஅய்டியு
காங்கிரஸ்
தமிழ்ப் புலிகள்
தமிழ்நாடு மாணவர் மன்றம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் பங்கேற்றனர்.

You may also like...