சென்னையில் வருமான வரித்துறை அலுவலகத்தை இழுத்து மூடச் சென்ற கழகத் தோழர்கள் கைது; வழக்குப் பதிவு
காவிரிப் பிரச்சினையில் பா.ஜ.க. ஆட்சியின் துரோகத்தைக் கண்டித்து சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சென்னை நுங்கம்பாக் கத்திலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்தை இழுத்துப் பூட்டும் போராட்டத்தைக் கழகம் அறிவித்தது. வருமான வரித் துறை அலுவலகம் எதிரே கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் தோழர்கள் தமிழ்நாட்டில் மத்திய அரசு அலுவலகங்களை இயங்கவிட மாட்டோம் என்ற முழக்கத்தோடு வருமான வரித் துறை அலுவலகம் நோக்கி சென்றனர். காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, கழகத் தோழர்களைக் கைது செய்தனர். பூட்டு – பூட்டுச் சங்கிலியை பறி முதல் செய்தனர். மாலை வரை ஆயிரம் விளக்கு சமூகநலக் கூடத் தில் வைக்கப்பட்டு, சொந்தப் பிணையில் காவல்துறை விடுதலை செய்தது. அனைவர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. சென்னை மாவட்டக் கழகப் பொறுப் பாளர்கள் வேழவேந்தன், உமாபதி, ஏசு, செந்தில் (எப்டி.எல்.), மயிலை சுகுமார், தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரன், ஜாதி ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்த ஜெயநேசன் உள்ளிட்ட 55 தோழர்கள் கைதானார்கள்.
காவலில் இருந்த தோழர் களிடம் பிற்பகலில் காவிரிப் பிரச்சினைக் குறித்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ஜெயநேசன் ஆகியோர் உரையாற்றினர்.
கழகத் தோழர்கள் களப்பணி களில் கழகத்தின் தொடர் செயல் பாடுகளையும் கழகம் எதிர் நோக்கும் சவால்களையும் விளக்கிப் பேசினர்.
பெரியார் முழக்கம் 05042018 இதழ்