இராமர் ரதயாத்திரை-பெரியார் சிலை உடைப்புகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்
கடந்த 20ஆம் தேதி புதுக் கோட்டையில் தந்தை பெரியாரின் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித் தும், இராம ரதயாத்திரையைக் கண்டித்தும் நாமக்கல் மாவட்டம் சார்பில் பள்ளிப்பாளையத்தில் தோழமைக் கட்சிகள் ஒன்றிணைந்து 20.3.2018 செவ்வாய்க் கிழமை மாலை 4 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.
கண்டன ஆர்பாட்டத்திற்கு திவிக நாமக்கல் மாவட்ட தலைவர் சாமிநாதன் தலைமை வகிக்க, மாவட்ட பொருளாளர் முத்துப் பாண்டி முன்னிலையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சரவணன் வரவேற்புரையாற்றினார். மேலும், திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த, குமாரபாளையம் நகரத் தலைவர் தண்டபாணி, பள்ளிப்பாளை யம் சஜீனா, மீனா, தமிழ் தேசியக் கட்சியைச் சேர்ந்த ஆதவன் மற்றும் புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த மாணிக்கம் ஆகியோர் தங்களது கண்டன உரையை பதிவு செய்தனர். இறுதியாக தோழர் கவுதமன் நன்றி யுரையாற்றினார்.
திருப்பூர் : பெரியாரின் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து, பெரியாரிய கூட்டமைப்பு சார்பில் தோழமைக் கட்சிகள் ஒன்றிணைந்து திராவிடர் விடுதலைக் கழகம் தலைமையில் 07.3.2018 மாலை 5 மணிக்கு திருப்பூர் பெரியார் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன ஆர்பாட் டத்திற்கு திவிக திருப்பூர் மாவட்ட தலைவர் முகில்ராசு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு எச். ராஜா உருவ பொம்மையை செருப்பால் அடித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
கண்டமங்கலம் : 24-03-2018 அன்று மாலை 4.30 மணியளவில் விழுப்புரம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை பெரியார் ஜெயரட்சகன் ஒருங்கிணைத்தார் நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் அழகுமுருகன் பெரியார் தி.வி.க ஒருங்கிணைப்பாளர் கோகுல் காந்திநாத், பெரியார் சிந்தனையாளர் இயக்க செயலாளர் தீனா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி விழுப்புரம் மாவட்ட தலைவர் நாகு, புதுச்சேரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி பரப்புரை செயலாளர் விஜி, கண்டமங்கலம் திராவிடர் கழக பெரியார் பெருந் தொண்டர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சோமசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் விழுப்புரம் கிழக்கு மாவட்டத் தலைவர் பூ.ஆ.இளையரசன் தலைமை உரைக்கு பின் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் இராமர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விழுப்புரம் மாவட்டச் செயலாளர் ஆற்றலரசு ஆகியோர் பெரியார் சிலை உடைப்பை கண்டித்தும் பார்ப்பன ஆதிக்கத்தையும் ஆர்.எஸ்.எஸ்-ன் மக்கள் விரோத செயலை கண்டித்து சிறப்புரையாற்றினார்கள்.
தூத்துக்குடி : 22.03.3018 அன்று தூத்துக்குடி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் இரத யாத்திரை தூத்துக்குடி வருவதைக் கண்டித்து பெரியார் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழக மாவட்ட தலைவர் குமார் தலைமையில், ஆதித் தமிழர் கட்சி மாநில தென் மண்டல செயலாளர் இரா. வே.மனோகர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் சந்திரசேகர், பால். அறிவழகன், ஆதித்தமிழர் பேரவையின் மாநில அமைப்பு செயலாளர் அருந்ததி அரசு , ஆதித் தமிழர் கட்சியின் மாவட்ட பொருப்பாளர் மாரிச்செல்வம் ஆகி யோர் கலந்து கொண்டு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் கைது செய்து அடைக்கப்பட்டு மாலை விடுதலை செய்யப்பட்டனர்.
பெரியார் முழக்கம் 29032018 இதழ்