மேட்டூரில் மகளிர் நாள் விழா – கலை நிகழ்வுகளுடன் கருத்தரங்கு

மேட்டூர் நகர கழகத்தின் சார்பில் 13.3.2018 மாலை 5.30 மணிக்கு மேட்டூர் சதுரங்காடியில் மகளிர் தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ஓ. சுதா வரவேற்புரையாற்றினார். காஞ்சி மக்கள் மன்றத் தோழர்கள் பறை முழக்கத்தோடு பெரியார், அம்பேத்கர் பாடல்களும், சமூக இழிவு, சாதி ஒழிப்பு, பெண்ணுரிமைப் பாடல்களும் பாடினர். மு. கீதா தலைமையுரையாற்றினார். ‘சொத்து உரிமையில் பெண்கள்’ என்ற தலைப் பில் அனிதா, ‘விளம்பரத் துறையில் பெண்கள்’ என்ற தலைப்பில்

ப. இனியா, ‘பெரியார் காண விரும்பிய விடுதலைப் பெண்’ என்ற தலைப்பில் கெ. ரூபா, ‘அலுவலகம் செல்லும் பெண்களின் நிலை’ என்ற தலைப்பில் இரண்யா உரையாற்றினர்.

தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி, அவரைத் தொடர்ந்து பேராசிரியர் சுந்தரவள்ளி சிறப்புரையாற்றினர். இந்திராணி நன்றி கூறினார். நிகழ்ச்சியை காயத்திரி, சரசுவதி தொகுத்து வழங்கினர்.  கூட்டத்திற்கு பல்வேறு பகுதிகளி லிருந்தும் பொது மக்களும் தோழர் களும் பெருமளவில் வந்திருந்து அறிவு விளக்கம் பெற்றனர்.

இந்நிகழ்வு பெண் தோழர்களால் நிதி வசூல் செய்து பெண்களாலேயே நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கதாகும். இப்பொதுக் கூட்டத் திற்காக மேட்டூர் நகரம் முழுவதும் சுவரொட்டிகளும் முக்கியமான இடங்களில் பதாகைகளும் வைக்கப்பட்டிருந்தது.

விழா மேடைக்கருகில் நாகம்மை யார், மணியம்மையார், குஞ்சிதம் குருசாமி, அஞ்சலை அம்மாள், சாவித்திரிபாய் புலே, மூவலூர் இராமாமிர்தம், இரோம் ஷர்மிளா, கௌரிலங்கேஷ், கிளாரா ஜெட்கிகன், அருந்ததிராய், செங்கொடி, கேப்டன் மாலதி ஆகியோரின் புகைப்படங் களுடன் அவர்களைப் பற்றிய குறிப்பும் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

இக்கூட்டம் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வும், எழுச்சியையும் ஏற்படுத்தியது.

பெரியார் முழக்கம் 05042018 இதழ்

You may also like...