கோவையில் பெரியாரிய பெண்கள் சந்திப்பு

மாவட்ட வாரியாக நடந்து வந்த பெரியாரிய பெண்கள் சந்திப்பு 1.4.2018 அன்று கோவையில் நடந்தது. தோழர்களை உருவாக்குவதற்கும், உருவான தோழர்களை களப்பணியாளர்களாக தயாராவதற்காக வும் இந்த சந்திப்புகள் நடந்து வருகின்றன. கோவையில் இரத்தினசபாபதிபுரத்தில் (ஆர்.எஸ்.புரம்) பெரியார் பெருந்தொண்டர் கஸ்தூரியார் படிப்பகத்தில் அவருடைய மகன் தேவேந்திரன் சந்திப்பு நிகழ்வை நடத்த மகிழ்வுடன் அனுமதி அளித்தார். பெரியார் பிஞ்சு தமிழினி கடவுள் மறுப்பு சொல்லி நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.

சந்திப்பில் பல்வேறு தலைப்புகளில் தோழர்கள் பேசினர். ‘மதங்கள் பெண்களுக்கு எதிரானவை ஏன்?’ என்ற தலைப்பில் ஆனைமலை வினோதினி, ‘பெரியாரியக்கத்தின் பெண் தளபதிகள் பற்றிய நினைவுகள்’ என்ற தலைப்பில் கோபி மணிமொழி, ‘திராவிடர் இயக்கத்திற்கு முன்னும் பின்னும் பெண்கள் நிலை’ என்ற தலைப்பில் பவானிசாகர் கோமதி ஆகியோர் தங்கள் கருத்துகளை முன் வைத்தனர். ஒவ்வொருவர் கருத்திற்குமிடையேயும் விவாதங்கள் நடந்தன. இறுதியாக தோழர்களின் சந்தேகங்களுக்கும் மக்களிடையே உறவினர்களிடையே சந்திக்கும் சவால்கள் குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஆசிரியர் சிவகாமி பதில் கூறினார். மதி நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது. தோழர்கள் இந்துமதி, வைதீஸ்வரி, பொன்மணி, இராஜாமணி, தமிழினி, அம்பிகா, கோமதி, மணிமொழி, தேன்மொழி, சரஸ்வதி, சிவகாமி, கிருபா நந்தினி, வினோதினி ஆகியோர் சந்திப்பில் பங்கேற்றனர்.

பெரியார் முழக்கம் 05042018 இதழ்

You may also like...